Search
  • Follow NativePlanet
Share
» »பெங்களுருவை ஏன் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கிறது தெரியுமா ?

பெங்களுருவை ஏன் எல்லோருக்கும் ரொம்ப பிடிக்கிறது தெரியுமா ?

By Super Admin

ஐ.டி துறையின் தலைநகரமாக திகழும் பெங்களுரு நகருக்கு வரும் எவரும் அந்நகரின் இதமான தட்பவெட்ப நிலையில் மெய்மறந்து போவார்கள். வாழ்வதற்கு மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றாக சொல்லப்படும் பெங்களுருவை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.

பழனி முருகன் கோயிலை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்பழனி முருகன் கோயிலை பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்

ஒரு பக்கம் அல்ட்ரா மாடர்ன் நவீனமும் இன்னொரு பக்கம் சீண்டப்படாத பழமையும் கொண்டிருக்கும் இந்த பெங்களுரு இந்தியாவில் வாழும் ஒவ்வொரு இளைஞர்களின் கனவு நகரமாக இருக்கிறது. பன்மொழி பேசும் மக்கள், பசுமையான சூழல், நாகரீகமான நவீன வாழ்க்கை முறை என எல்லோருக்கும் ஏதோ ஒருவிதத்தில் பெங்களுருவை பிடிக்கத்தான் செய்கிறது. மேலே குறிபிட்டுள்ள சில காரணங்களை தாண்டி இந்த பெங்களுரு நகரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்பதற்கான காரணங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள் .

பல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்க புதையல்கள் நிறைந்த மலைபல்லாயிரம் கோடி மதிப்பிலான தங்க புதையல்கள் நிறைந்த மலை

அருமையான தட்பவெட்பம் :

அருமையான தட்பவெட்பம் :

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரமான பெங்களுருவுக்கு 'கார்டன் சிட்டி' என்ற பெருமையும் உண்டு. மற்ற வளர்ந்த நகரங்களை போல கிடைக்கும் இடத்தில் எல்லாம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டாமல் நகர் முழுக்கவும் எண்ணற்ற பூங்காக்கள் மிக அழகாக பராமரிக்கப்படுகின்றன. இதுவே பெங்களுரு நகரில் வருடம் முழுக்க அருமையான சீதோஷன நிலை நிலவ காரணமாக இருக்கிறது.

Photo:Vinoth Chandar

அருமையான தட்பவெட்பம் :

அருமையான தட்பவெட்பம் :

பெங்களுருவில் இருக்கும் இரண்டு மிக முக்கிய பூங்காக்களாக சொல்லப்படுவது வருடாந்திர மலர் கண்காட்சி நடைபெறும் லால் பாக் பூங்காவும், கர்நாடக உயர்நீதி மன்றத்தை ஒட்டியே அமைந்திருக்கும் கப்பன் பூங்காவும் தான். பெங்களுருவின் பெருமைமிக்க அடையாளங்களில் ஒன்றான இவை நிச்சயம் ஒருமுறையேனும் சென்று பார்க்க வேண்டிய இடங்களாகும்.

லால் பாக் :

லால் பாக் :

1760ஆம் ஆண்டு அப்போதைய மைசூரின் மகாராஜாவான ஹைதர் அலியால் திட்டமிடப்பட்டு பின்னர் அவரின் மகனான திப்பு சுல்தானால் நிறுவப்பட்ட பூங்கா தான் இந்த லால் பாக் ஆகும். 240ஆம் ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த பூங்காவில் தான் தெற்கு ஆசியாவிலேயே மிக அதிகமான அரியவகை தாவரங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Photo:Vinoth Chandar

லால் பாக் :

லால் பாக் :

கண்ணாடி மாளிகை தான் இந்த பூங்காவில் இருக்கும் முக்கிய அம்சமாகும். இந்த மாளிகையில் தான் ஒவ்வொரு வருடமும் லால் பாக் மலர் கண்காட்சி நடக்கிறது. பல்வேறு வகையான வண்ண மலர்களை கண்காட்சிக்காக உலகம் முழுவதிலும் இருந்து தருவிக்கின்றனர்.

 கப்பன் பூங்கா :

கப்பன் பூங்கா :

பெங்களுரு உயர் நீதிமன்றம் மற்றும் சட்ட சபைக்கு அருகில் பெங்களுருவின் இதய பகுதியில் அமைந்திருக்கிறது இந்த கப்பன் பூங்கா. 1870ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த பூங்காவானது 300 ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்திருக்கிறது. இந்த பூங்காவில் மட்டும் கிட்டத்தட்ட 6000 மரங்கள் மற்றும் செடிகள் நடப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.

Photo:raghavvidya

 கப்பன் பூங்கா :

கப்பன் பூங்கா :

கப்பன் பூங்கா மற்றும் லால் பாக் பற்றிய மேலதிக விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Photo:prashantby

ஷாப்பிங் :

ஷாப்பிங் :

பெங்களுருவில் இங்குள்ள குளுகுளு தட்பவெட்ப நிலைக்கு அடுத்ததாக எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒரு விஷயம் ஷாப்பிங் தான். இங்கே பலரும் ஐ.டி துறையில் அதிக சம்பளத்தில் வேளையில் இருப்பவர்கள் என்பதால் உலகின் முன்னணி மின்னணு சாதனங்கள், ஆடை வகைகள் மற்றும் உணவகங்களின் கிளைகள் இங்கே இருக்கின்றன.

Photo: Flickr

பிரிகேட் சாலை :

பிரிகேட் சாலை :

பெங்களுருவில் கப்பன் பார்க்கில் இருந்து கொஞ்ச தூரத்தில் மகாத்மா காந்தி சாலையில் இருந்து பிரியும் பிரிகேட் சாலையில் இல்லாத முன்னணி பிராண்ட் கடைகளே இல்லை எனலாம். அந்த அளவுக்கு விதவிதமான துணிக்கடைகள், உணவகங்கள், மின்னணு பொருள் கடைகள் இந்த சாலையெங்கும் நிரம்பியிருக்கின்றன.

Photo:IK's World Trip

M.G. Road :

M.G. Road :

இதற்கு அருகில் இருக்கும் M.G. Road என்னும் மகாத்மா காந்தி சாலையிலும் நிறைய கடைகள் இருக்கின்றன. இந்த சாலையில் தான் நூறு வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து இயங்கி வரும் கடையான ஹிக்கின் போதம்ஸ் இருக்கிறது. இது தவிர சிவாஜி நகர் பகுதியில் அமைந்திருக்கும் கம்மர்சியல் ஸ்ட்ரீட்டும் ஷாப்பிங் செய்ய சிறந்த இடமாக சொல்லப்படுகிறது.

Photo: Marc Smith

சுவையான உணவுகள் :

சுவையான உணவுகள் :

என்னதான் நவீன யுகத்திற்கு தகுந்தாற்போல பெங்களுரு தன்னை மாற்றிகொண்டாலும் இன்னமும் ஒரு பாதி பெங்களுருவில் அதன் பழமை அப்படியே தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெங்களுருவில் இருக்கும் 'ஐகானிக்' உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் பெங்களுருவுக்கு மட்டுமே உரியவையாகும்.

Photo:Nishanth Jois

சுவையான உணவுகள் :

சுவையான உணவுகள் :

பெங்களுருவில் இருக்கும் எம்.டி.ஆர், மையாஸ், ஸ்ரீ சாகர், வித்யார்த்தி பவன், பிராமின்ஸ் காபி சென்டர் போன்ற உணவகங்கள் பெங்களுர்வாசிகளின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒன்றாகும். நீங்கள் ஒரு உணவுப்பிரியர் என்றால் இந்த கடைகளில் கிடைக்கும் மசாலா தோசை, ரவா தோசை, காரா பாத், பில்ட்டர் காபி போன்றவற்றை நிச்சயம் சுவைத்து பார்க்க மறந்துவிடாதீர்கள்.

Photo:MalayalaM

கூத்து கொண்டாட்டம் :

கூத்து கொண்டாட்டம் :

நீங்கள் உங்களுடைய இளமைப்பருவத்தில் இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் நிச்சயம் இருக்க வேண்டிய இடம் பெங்களுரு தான். இளமையை கொண்டாட இதைவிட சிறந்த ஓரிடம் இருக்க முடியாது. அழகான மங்கைகள், இசை ததும்பும் பப்கள், விடிய விடிய பார்டி என வார விடுமுறைகளின் போது கொண்டாட்டம் களைகட்டுகிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X