Search
  • Follow NativePlanet
Share
» »கொல்கத்தாவில் ஷாப்பிங் செய்ய 5 சிறந்த இடங்கள்

கொல்கத்தாவில் ஷாப்பிங் செய்ய 5 சிறந்த இடங்கள்

By Naveen Kumar

இந்தியாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான கொல்கத்தா, விலைவாசி குறைவான நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. இதனாலேயே இந்த நகருக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் அனைவரும் நிறைய ஷாப்பிங் செய்யவே விரும்புகின்றனர். நவீனமயமாக்கலுக்கு பிறகும் இன்னும் தன்னுடைய பழமையான அடியாளங்களை இழக்காமல் இருக்கும் கொல்கத்தா சோம்பேறித்தனமான நகரம் என்ற பெருமைக்கும் உரியது. வாருங்கள் தீரத்தீர ஷாப்பிங் செய்யலாம்.

1. நியூ மார்கெட்:

Photo: Rajarshi MITRA

கொல்கத்தா வாசிகளுக்கு ஷாப்பிங் செய்ய வேண்டும் என்றாலே நினைவுக்கு முதலில் வரும் இடம் நியூ மார்கெட் தான். எஸ்எஸ் ஹாக் மார்க்கெட் என்று முன்னர் அறியப்பட்ட இந்த இடத்தில் மட்டும் குறைந்தது 2000 கடைகளாவது இருக்கும். 1874ஆம் ஆண்டு அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக கொல்கத்தா விளங்கியபோது கட்டப்பட்ட இந்த சந்தைக்கட்டிடம் விக்டோரியா வகை அமைப்பை சார்ந்ததாகும்.

அந்தக்காலத்தில் பிரிட்டிஷ்க்காரர்களுக்கு என்றே பிரத்யேகமாக செயல்பட்டு வந்த இந்த சந்தை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு பொது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த சந்தையின் தனித்துவமே இங்கு பொருட்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கும் என்பதுதான். மேலும் 1900களில் இருந்தே சில கடைகள் இந்த சந்தையில் இருக்கின்றன. நூறு ஆண்டுகள் பழமையான கடைகளில் சென்று பொருட்களை வாங்குவது உண்மையிலேயே புதுமையான அனுபவமாக இருக்கும்.

2. கரியஹட் மார்கெட்:

கரியஹட் ரோட்டில் அமைந்திருக்கும் இந்த சந்தை வாடா கொல்கத்தாவின் மிக முக்கியமான இடங்களில் ஒன்று. ஒரு வீதி முழுக்க நிறைந்து இருக்கும் கடைகளில் நாம் குறைந்த விலையில் துணிமணிகள், வீட்டு உபயோக சாமான்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள், மற்றும் வளர்ப்பு பிராணிகள் வரை வாங்க முடியும்.

சமீப காலங்களில் இந்த சந்தை வீதியை ஒட்டியே பல பன்னாட்டு ஷாப்பிங் மால்களும் வந்து விட்டன. முக்தி வேர்ல்ட் மால், கரியஹட் மால் போன்றவை இங்கிருக்கும் குறிப்பிடத்தகுந்த ஷாப்பிங் மால்கள் ஆகும். ஒரே இடத்தில் வீதியிலும், பன்னாட்டு ஷாப்பிங் மாலிலும் பொருட்களை வாங்க கூடிய வித்தியாசமான வாய்ப்பு இங்கு உங்களுக்கு கிடைக்கும்.

3. காலேஜ் வீதி:

Five best Places for shopping in Kolkata

Biswarup Ganguly

இந்த இடத்தை பற்றி ஒருவரியில் சொல்லவேண்டும் என்றால் 'புத்தக பிரியர்களின் சொர்க்கம்' எனலாம். ஏனென்றால் இந்த இடம் தான் உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் கிடைக்கும் இடமாகும். பல பல அறிய புத்தகங்கள் எல்லாம் இங்கே மிக குறைந்த விலையில் சல்லிசாக கிடைகின்றன.

அறிவாளிகள் அதிகம் உள்ள நகராக கருதப்படும் கொல்கத்தாவில் அவர்களை பார்க்க இந்த இடம் சிறந்த வாய்ப்பை தரும். மேலும் இதே வீதியில் அமைந்திருக்கும் கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்றான இந்தியன் காபி ஹவுசில் நாம் சுவையான காபியை ருசித்தபடி அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடும் பலரையும் நாம் காண முடியும். நீங்கள் புத்தகங்களின் காதலர் என்றால் உங்களுடைய தாஜ்மஹால் இந்த காலேஜ் வீதி தான்.

4. ஹதிபகன் மார்கெட்:

Bappaditya Dasgupta

2012ஆம் ஆண்டு பெரும் தீ விபத்து ஏற்ப்படும் வரை கொல்கத்தாவின் மிகப்பெரிய வளர்ப்பு பிராணிகள் சந்தையாக இந்த ஹதிபகன் மார்கெட் திகழ்ந்தது. அந்த தீவிபத்தில் பெரும் பகுதி சந்தை அழிந்து விட்டாலும் இதர பகுதிகள் இன்றும் அதன் மிடுக்குடன் இருக்கின்றன. நூற்றாண்டு கால பழமை வாய்ந்த இந்த சந்தையில் பெங்காலின் சிறந்த பருத்தி ஆடைகள் மற்றும் பலவித வடிவங்களில் நெய்யப்பட்ட பெங்காலி பாரம்பரிய புடவைகள் கிடைகின்றன. இங்கு இருக்கும் பழமையான சினிமா ஹாலில் அமர்ந்து நல்லதொரு பெங்காலி படம் பார்ப்பதும் புதுமையானதொரு அனுபவமாக அமையும்.

5. புர்ரா பஜார்:

(Burra Bazar)

P.K.Niyogi

கொல்கத்தாவின் வர்த்தக தலைநகரம் என்றால் அது புர்ரா பஜார் தான். தெற்கு கொல்கத்தாவில் அமைந்திருக்கும் இந்த பஜார் தான் இந்தியாவின் மிகப்பெரிய மொத்த விற்பனை சந்தைகளில் ஒன்றாகவும் திகழ்கிறது. இங்கு கிடைக்கும் பொருட்களுக்கு ஏற்ப அந்த சந்தையின் பெயர் உள்ளது. அதாவது வேட்டி உள்ளிட்ட காட்டன் துணிகள் கிடைக்கும் இடத்திற்கு தோத்திபட்டி, பேன்சி பொருட்கள் கிடைக்கும் இடத்திற்கு பேன்சிபட்டி என்றவாறு இங்கு சந்தைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

புலியின் கண்களைக்கூட சரியான விலை கொடுத்தால் வாங்க முடியும் என இதனைப்பற்றி நகைச்சுவையாக குறிப்பிடுகின்றனர். நீங்கள் ஏதேனும் பொருட்களை மொத்தமாக வாங்க வேண்டும் என நினைத்தால் நிச்சயம் இந்த புர்ரா பஜாருக்கு வரலாம்.

Read more about: kolkata shopping
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X