Search
  • Follow NativePlanet
Share
» »தமிழக அரசியலும், நடிகை கௌதமியின் பயணங்களும்

தமிழக அரசியலும், நடிகை கௌதமியின் பயணங்களும்

நடிகை கௌதமி ஓபிஎஸ் இல்லத்துக்கு சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதியானதும், ஓபிஎஸ்ஸை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார் கௌதமி. இதில் அரசியல் இருக்கக்கூடும் என்று பலர் கருதுகின்றனர். அதாவது, இரண்டொரு மாதங்களுக்கு முன்தான் அவர் பிரதமர் மோடியை சந்தித்தார். மோடியுடன் சந்திப்புக்காக டெல்லி சென்ற கௌதமி இந்த சந்திப்பில் அரசியல் இல்லை எனவும், ஒரு குடிமகளாக சில கோரிக்கைகளை முன்வைத்தேன் எனவும் பேட்டியளித்தார்.

ஆரம்பத்திலேயே பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன், இனி தமிழகத்தில் ஏற்படப்போகும் சூழ்நிலையை விரைவில் பாஜக பயன்படுத்திக்கொள்ளும் என பேட்டியளித்திருந்தார். ஆனால் சசிகலா ஜெயா இடத்திற்கு வந்ததையடுத்து, அவருக்கு எதிராக திசை திரும்பினர் பாஜக தலைவர்கள் பலர். அந்த வகையில் கௌதமி தற்போது ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதையெல்லாம் பாக்கும்போது..... நமக்கு எதுக்குங்க அரசியல்லாம்.. நம்ம இப்போ பயணக்கட்டுரைக்குள்ள போகலாம்...

நடிகை கௌதமி பிறந்த வளர்ந்த இடங்களும், அவரது பயணங்களும் பற்றி இந்த கட்டுரையில் காணலாம்... வாருங்கள்..

நடிகை கௌதமி பிறந்த இடம் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகிலுள்ள நிடடவோலு என்னும் ஊர். இங்கு பள்ளி படிப்பை முடித்த கௌதமியின் வாழ்க்கை எப்படி சினிமா டூ அரசியல் வரை சென்றது என்று இந்த பதிவில் காண்போம்.

கோதாவரி ஆற்றுப் பாலம்

கோதாவரி ஆற்றுப் பாலம்

ராஜமுந்திரி நோக்கி செல்லும் அனைவரும் இந்த பாலத்தைக் காணமுடியும். ரயில் செல்வதற்கான இந்த பாலம் நிடடவோலு செல்லும் வழியில் அமைந்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் மிகப் பழமையான பாலங்களுள் ஒன்றான ஒரு பாலம் இதனருகில் இருந்தது. அதற்கு பதிலாக கட்டப்பட்டதுதான் இந்த பாலம்.

PC: Samar

கோதாவரி பழைய பாலம்

கோதாவரி பழைய பாலம்


இந்தியாவின் மிகப்பழமையான பாலங்களுள் ஒன்றான இந்த பாலம் ரயில் செல்வதற்காக கூண்டு பாலம் போன்ற முறையில் கட்டப்பட்டிருந்தது. அதன் பழமை மற்றும் குறுகிய தன்மை காரணமாக புதிய பாலம் அமைக்கப்பட்டு, புழக்கத்தில் உள்ளது.


PC: Mydhili Bayyapunedi

கோதாவரி வில்பாலம்

கோதாவரி வில்பாலம்


பாலத்தின் வித்தியாசமான கோண தோற்றம்

PC: Tatiraju.rishabh

சூரிய மறைவு காட்சி

சூரிய மறைவு காட்சி

சூரிய மறைவு காட்சி

PC: Chaniljain

காந்தி தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்லூரி

காந்தி தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை கல்லூரி

நடிகை கௌதமி படித்த கல்லூரி இதுதான். இங்கு படித்துக்கொண்டிருக்கும்போது சினிமா வாய்ப்பு கிடைத்து, தெலுங்கு படத்தில் அறிமுகமானார்.

Pc: IM3847

விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம்


திரைப்படங்களில் நடித்துக்கொண்டே இந்த கல்லூரியில் பொறியியல் படிப்பை தொடர்ந்துவந்தார் கௌதமி.

Pc: IM3847

சென்னை

சென்னை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக குரு சிஷ்யன் படத்தில் அறிமுகமானார் கௌதமி. அப்போது அவருக்கு 20 வயது கூட ஆகவில்லை என்பது ஆச்சரியமளிக்கும் உண்மை.

இது மட்டுமல்லாமல் அந்த வயதிலேயே டாப் ஹீரோயின்களிடம் போட்டி போடும் அளவுக்கு நல்ல திறமைகளைக் கொண்டிருந்தார்.

பாபநாசம்

பாபநாசம்


2015 ஆம் ஆண்டு பாபநாசம் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தார் கௌதமி. பின்னர் கமலை பிரிவதாக 2016ல் அறிவித்த அவர் அதிரடியாக பல செயல்களை செய்ய ஆரம்பித்தார்.

டெல்லி

டெல்லி


மோடியுடன் சந்திப்புக்காக டெல்லி சென்றார் கௌதமி. மோடியை சந்தித்ததில் அரசியல் இல்லை எனவும், ஒரு குடிமகளாக சில கோரிக்கைகளை முன்வைத்தேன் எனவும் பேட்டியளித்தார் அவர்.

சென்னை ஓபிஎஸ் இல்லம்

சென்னை ஓபிஎஸ் இல்லம்

ஜெயா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளிப்படுத்துங்கள் என மோடிக்கு கோரிக்கை கடிதம் எழுதி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் கௌதமி. இந்நிலையில்தான் அவர் முதல்வர் ஓபிஎஸ்ஸை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X