Search
  • Follow NativePlanet
Share
» »செஞ்சி கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

செஞ்சி கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

By Naveen

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சை பெரிய கோயிலையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலையும் கட்டிய பழந்தமிழ் மன்னர்கள் எவ்வளவு சீரும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்று தெரிந்துகொள்ள எஞ்சியிருக்கும் தடயங்கள் மிக அரிது.

அதிலொன்று தான் இந்தியாவிலிருக்கும் மிகப்பழமையான கோட்டைகளுள் ஒன்றாக புகழப்படும் செஞ்சி கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

செஞ்சிக்கோட்டை வரலாறு:

செஞ்சிக்கோட்டை வரலாறு:

செஞ்சிக்கோட்டை சென்னையிலிருந்து 160கி.மீ தொலைவில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் சிறிய கோட்டையாக கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் 13ஆம் நூற்றாண்டுவாக்கில் குரும்பர்களால் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

Arun Ganesh

செஞ்சிக்கோட்டை வரலாறு:

செஞ்சிக்கோட்டை வரலாறு:

சில வரலாற்று ஆய்வாளர்கள் இக்கோட்டை சோழர்கள் மற்றும் குரும்பர்களால் கட்டப்பட்டதன்று 15-16ஆம் நூற்றாண்டுகளில் குறுநில மன்னர்களாக உருவெடுத்த விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்க தளபதிகளால் தான் செஞ்சிக்கோட்டை கட்டப்பட்டது என்றும் சொல்கின்றனர்.

Girish Gopi

செஞ்சிக்கோட்டை வரலாறு:

செஞ்சிக்கோட்டை வரலாறு:

கி.பி 1677ஆம் ஆண்டு மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டிருக்கிறது. சிவாஜி மன்னர் 'இந்தியாவிலேயே யாராலும் அவ்வளவு எளிதில் கைப்பற்றவே முடியாத கோட்டை' என்று செஞ்சிக்கோட்டையை புகழ்த்திருக்கிறார்.

Sunish Sebastian

செஞ்சிக்கோட்டை வரலாறு:

செஞ்சிக்கோட்டை வரலாறு:

மராத்தியர்களை தொடர்ந்து பிஜாபூர் சுல்தான்கள், முகலாயர்கள், கர்னாடக நவாப்புகள், பிரஞ்சுக்காரர்கள் மற்றும் இறுதியாக பிரிட்டிஷ் என பலர் இக்கோட்டையை ஆண்டிருக்கின்றனர்.

Girish Gopi

தேசிங்கு ராஜாவும் செஞ்சிக்கோட்டையும்:

தேசிங்கு ராஜாவும் செஞ்சிக்கோட்டையும்:

செஞ்சிக்கோட்டை என்றதுமே பலருக்கும் நினைவுக்கு வரும் ஒரு பெயர் தேசிங்கு ராஜா ஆகும். நம்ம ஊர்களில் திண்ணைகளில் அமர்ந்தபடி பாட்டி சொல்ல தேசிங்கு ராஜா கதை கேட்ட அனுபவம் நம்மில் பலருக்கும் இருக்கும்.

16-17ஆம் நூற்றாண்டுகளில் செஞ்சிக்கோட்டையை தேசிங்கு ராஜாவும் அவரது உற்ற நண்பரும் தளபதியுமான மெஹபூப் கான் என்னும் மாவத்துக்காரனும் ஆட்சி செய்திருக்கின்றனர்.

Sunish Sebastian

தேசிங்கு ராஜாவும் செஞ்சிக்கோட்டையும்:

தேசிங்கு ராஜாவும் செஞ்சிக்கோட்டையும்:

தேசிங்கு ராஜாவுக்கு பிறகு செஞ்சியை ஆண்ட அவரது மகன் ஸ்வரூப் சிங் ஆற்காட்டு நவாபுக்கு எதிரான போரில் வீர மரணமடைந்திருக்கிறார்.

1714ஆம் ஆண்டு நவாப்புகள் வசம் செஞ்சிக்கோட்டை போய்விட்டாலும் தேஜ் சிங் என்னும் தேசிங்கு ராஜன் நாட்டுப்புற கதைகள் மற்றும் பாடல்கள் வழியே இன்றும் மக்களிடையே வாழ்கிறார்.

Praveen Selvam

செஞ்சிக்கோட்டையின் பல்வேறு பெயர்கள்:

செஞ்சிக்கோட்டையின் பல்வேறு பெயர்கள்:

பலரின் ஆளுகைக்குள் இருந்ததாலோ என்னவோ பல்வேறு காலகட்டங்களில் செஞ்சிக்கோட்டை பல்வேறு பெயர்களால் அளிக்கப்பட்டுள்ளது.

1660 - 1677ஆம் ஆண்டுகளில் பிஜாபூர் நவாப்புகள் வசம் இருந்தபோது 'பாத்ஷாபாத்' என்றும், பின் மராத்தியர்கள் காலத்தில் 'சந்த்ரி' என்றும்,1698இல் கைப்பற்றிய முகலாயர்கள் 'நுஸ்ரத்கந்த்' என்றும், பின்னர் பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் காலத்தில் கிஞ்சி என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

Girish Gopi

செஞ்சி கோட்டையின் அமைப்பு:

செஞ்சி கோட்டையின் அமைப்பு:

செஞ்சிக்கோட்டை மூன்று மலைகளின் நடுவே அமைந்திருக்கிறது. வடக்கே கிருஷ்ணகிரியும், மேற்கே ராஜகிரி மலையும் தென்கிழக்கே சந்திராயன் துர்க்கை மலையும் இக்கோட்டைக்கு இயற்கை அரணாக திகழ்கின்றன.

கிட்டத்தட்ட 13கி.மீ நீளம் கொண்ட உறுதியான சுவர்களாலும், பீரங்கிகள் கொண்ட கோட்டை கொத்தலங்களாலும் செஞ்சிக்கோட்டை பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

செஞ்சி கோட்டையின் அமைப்பு:

செஞ்சி கோட்டையின் அமைப்பு:

செஞ்சிக்கொட்டையினுள் ஏழு அடுக்காக கட்டப்பட்ட கல்யாண மஹால், தானியக் கிடங்கு, சிறைச்சாலைகள், செஞ்சியம்மன் கோயில் போன்றவை உள்ளன. மேலும் இதனுள் வற்றா குளமான ஆணைகுளம் ஒன்றும் இருக்கிறது.

தற்போதைய நிலை:

தற்போதைய நிலை:

பிரிட்டிஷ் அரசால் 1921ஆம் ஆண்டு செஞ்சிக்கோட்டை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டது. இன்று வார இறுதிநாட்களில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் மக்கள் இங்கே வருகின்றனர். நுழைவுக்கட்டணமாக ₹5 வசூலிக்கப்படுகிறது.

Vinay DV

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

செஞ்சிக்கோட்டையின் புகைப்படங்கள் ஒரு பார்வை.

Girish Gopi

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

செஞ்சிக்கோட்டையின் புகைப்படங்கள் ஒரு பார்வை.

Arun Ganesh

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

செஞ்சிக்கோட்டையின் புகைப்படங்கள் ஒரு பார்வை.

Arun Ganesh

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

செஞ்சிக்கோட்டையின் புகைப்படங்கள் ஒரு பார்வை.

Karthik Easvur

புகைப்படங்கள் !!

புகைப்படங்கள் !!

செஞ்சிக்கோட்டையின் புகைப்படங்கள் ஒரு பார்வை.

Karthik Easvur

Read more about: forts tamilnadu adventure
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X