Search
  • Follow NativePlanet
Share
» »கொண்டாட்டங்களின் தலைநகரம் - கோவா

கொண்டாட்டங்களின் தலைநகரம் - கோவா

ஆசை நூறுவகை வாழ்வில் நூறு சுவை என்றால் அவை அத்தனையும் அனுபவிக்க விரும்பினால் கண்ணை மூடிக்கொண்டு நண்பர்களை கூட்டிக்கொண்டு நாம் வர வேண்டிய இடம் கோவா தான். இந்தியாவின் கேளிக்கை தலைநகரம் என்று சொல்லும் அளவு விதவிதமான கொண்டாட்டங்கள் அங்கே உண்டு. மனதை மயக்கும் கடற்கரையில் துள்ளல் ஆட்டம் போடத்தூண்டும் பாடலை கேட்டபடி தீரத்தீர நிரம்பும் மதுவை பருகி வாழ்கையை விருப்பம் போல வாழலாம் வாருங்கள்.

அஞ்சுனா பீச்:

புகைப்படம்: altf

அட்டகாசமாக பீச் பார்ட்டியில் கலந்துகொண்டு அசத்த நினைப்பவர்கள் வர வேண்டிய இடம் இந்த அஞ்சுனா பீச். அதிலும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கத்தைவிட பார்டிகள் களைகட்டும். பவுர்ணமி அன்று நடைபெறும் முழு இரவு பார்டிகள் இந்த இடத்தின் தனித்துவம். இங்கிருக்கும் பப்களில் அதிரச்செய்யும் 'டிரான்ஸ்' இசை பார்டிகளின் போது நம்மை நடனமாட தூண்டும்.

கொண்டாட்டங்களின் தலைநகரம் - கோவா

புகைப்படம்: Ipshita Bhattacharya

எப்படி அடையலாம்: மபுசவில் இருந்து 8கி.மீ தொலைவிலும், பனாஜியில் இருந்து 18 கி.மீ தொலைவிலும் உள்ளது. ரயில் மூலம் வருபவர்கள் திவிம் ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும்.

பல்லோலம் பீச்:

புகைப்படம்: Vaibhav San

கோவாவில் இன்னும் அதிகம் மாசு படாத அழகான கடற்கரைகளில் ஒன்று தான் பல்லோலம் பீச். இது பிறை நிலா வடிவில் அமைந்திருக்கிறது. இங்கே வரும் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கு என்றே தாய்லாந்தில் இருப்பது போல் மரத்தால் செய்யப்படும் தற்காலிக குடியிருப்புகள் இருக்கின்றன.

புகைப்படம்: Christian Haugen

அதிகமாக பார்ட்டி நடக்கும் இடமாக இல்லாவிட்டாலும் சீசன் காலங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகளால் நிரம்பி வழிகிறது. இதற்க்கு வெறும் 1கி.மீ தூரத்திலேயே பட்நேம் பீச், கொலம் பீச் இருப்பதால் காலாற அங்கு வரை நடந்தது சென்று வரலாம்.

பட்நேம் பீச்:

புகைப்படம்: Aleksandr Zykov

இரண்டு மலைக்குன்றுகளுக்கு நடுவே இருக்கும் இந்த பட்நேம் பீச் சமீப காலமாக சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மிகப்பிரபலம் அடைந்தது வருகிறது. மிகவும் சிறிய கடற்கரையான இது கடற்கரையில் அமைதியாக அமர்ந்த்தபடி சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்க நினைப்பவர்களுக்கும் சரி, பார்டிகளில் புகுந்து இரவை வசப்படுத்த நினைப்பவர்களுக்கும் சரி மிகச்சிறந்த தேர்வு. கட்டுபடியாக கூடிய விலையில் கடற்கரை ஓரத்தில் ஹோட்டல்கள் மற்றும் சிறிய குடிசைகள் வாடகைக்கு கிடைக்கின்றன.
எப்படி அடையலாம்: சவுத் கோவில் இருக்கும் இந்த இடத்தை 45 கி.மீ தொலைவில் இருக்கும் மார்கோ ரயில் நிலையம் வந்து அங்கிருந்து தனியார் வாடகை வாகனங்கள் மூலம் அடையலாம்.

கொல்வா பீச்:

புகைப்படம்: Eustaquio Santimano

இந்திய சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விரும்பப்படும் கடற்கரையான இங்கு குறைவான செலவில் கடற்கரையை அனுபவிக்க நினைப்பவர்களின் ஆசையை நிறைவேற்றும் இடமாகும். இங்கு கிடைக்கும் கடல் உணவுகள் மிகவும் பிரபலமானது. சிறிய அளவிலான உணவகங்கள், பார்கள் இங்கு நிறைய உள்ளன. மற்ற கடற்கரைகளை போல இங்கு பெரிய அளவில் இரவு பார்டிகள் நடக்காது என்பது ஒரு குறை.

எப்படி அடையலாம்? இது மார்கோ ரயில் நிலையத்தில் இருந்து 8கி.மீ தொலைவில் உள்ளது. பனாஜியில் இருந்து அதிகமாக பேருந்து வசதியும் உண்டு.

வகெடோர் பீச்:

புகைப்படம்: Amit Rawat

துள்ளும் டிரான்ஸ் இசையில் விடிய விடிய பார்ட்டி செய்ய நினைப்பவர்களின் சொர்க்கம் இந்த வகெடோர் பீச். மூன்று பகுதிகளாக இருக்கும் இந்த கடற்கரையில் பிக் வகெடோர் பகுதியில் இந்தியர்கள் அதிகமாக வசிக்கின்றனர். லிட்டில் வகெடோர் எனப்படும் டெல் அவிவ் பீச்சில் இஸ்ரேலியர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இதற்க்கு அருகில் இத்தாலியர்கள் அதிகம் வசிக்கும் ஸ்பகெட்டி பீச் உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஒன்றாக பார்ட்டி கொண்டாடும் இடம் என்பதால் புத்தாண்டு காலங்களில் இந்த இடம் களைகட்டுகிறது. முன்னரே தெளிவாக திட்டமிட்டு வந்தால் கொண்டாட கோவாவை விட சிறந்த இடம் எதுவுமே இருக்க முடியாது.

Read more about: goa beaches in goa goa toursim
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X