Search
  • Follow NativePlanet
Share
» »கோகர்ணா: ஆன்மிகம் மற்றும் ஆனந்தத்தின் உறைவிடம்

கோகர்ணா: ஆன்மிகம் மற்றும் ஆனந்தத்தின் உறைவிடம்

கோகர்ணா: ஆன்மிகம் மற்றும் ஆனந்தத்தின் உறைவிடம்

அற்புதமான கடற்கரை, மாநிலத்தில் இருக்கும் மிக முக்கியமான சிவன் கோயில்களில் ஒன்று இவை இரண்டும் தான் கோகர்ணா என்னும் உத்தர கன்னடா மாநிலத்தில் சிறிய நகரத்தின் அடையாளம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அற்புதமான அழகுடைய கோகர்ணா கடற்கரையை பற்றி யாரும் அறிந்திராமல் இருக்கையில் இதன் மாச்படாத அழகில் மயங்கி கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வர ஆரம்பித்த போது தான் இந்த கடற்கரையின் அருமை உள்ளூர் வாசிகளுக்கே புரிந்திருக்கிறது. சரி, வாருங்கள் அழகிய கோகர்ணாவுக்கு ஒரு சுற்றுலா சென்று வரலாம்.

கோகர்ணா:

Photo: Infoayan

கோகர்ணா என்றால் பசுவின் காதில் இருந்து உத்தித்தவன் என்று பொருள். அதாவது ஹிந்து கடவுள்கள் அனைவரும் பசுவில் இருந்து தோன்றியதாக ஒரு நம்பிக்கை உள்ளது. அதன் படி சிவபெருமான் பசுவினுடைய காதில் இருந்து உத்தித்திருக்கிறார். முக்கியமான சிவன் கோயில் அமைந்திருப்பதால் இந்த நகரம் இப்பெயர் பெற்றதாம்.


கோகர்ணாவின் கலாச்சாரம்:

Photo: Abhijit Shylanath

அழகான அதேசமயம் அந்த அழகை ரசித்தபடி சோம்பேறித்தனமான சூழ்நிலை. மறுபக்கம் எப்போதும் யாத்ரீகர்களால் நிறைந்து இருக்கும் சிவன் கோயில் என மாறுபட்ட இரண்டு கலாச்சாரங்களின் கூட்டு கலவையாக இந்த கோகர்ணா விளங்குகிறது. கன்னடா தான் இங்கு பரவலாக பேசப்படும் மொழி. மாராத்தி, துளு மற்றும் கன்னடா ஆகிய மொழிகளின் கலவையான கொண்கனியும் இங்கு பேசப்படுகிறது.

மகாபலேஷ்வர் கோயில்:

Photo: Nvvchar

இந்தியாவில் இருக்கும் முக்கியமான சிவன் கோயில்கள் என வகைப்படுத்தப்படும் ஜோதிர்லிங்க கோயில்களுள் முக்கியமானது இந்த மகாபலேஷ்வர் கோயில். சிவா பெருமானை ஆத்மலிங்கமாக நாம் இங்கே தரிசிக்கலாம். கர்னாடக மாநிலத்தில் உள்ள திராவிட கட்டிடக்கலையின் எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இந்த கோயில் திகழ்கிறது.

கோகர்ணா பீச்:

Photo: Axis of eran

ஒரு பக்கம் மேற்கு தொடர்ச்சி மலைகளும் மறுபக்கம் அரேபியப் பெருங்கடலும் இருக்க கோகர்ணாவின் அழகு நிறைந்த கடற்கரைகள் சுற்றுலாப்பயணிகளை சுண்டி இழுக்கிறது. இங்கு இந்தியன் பீச், நிர்வாணா என்னும் 3 கி.மீ நீளமுள்ள வெள்ளை மணல் கடற்கரை, முக்கியமான ஓம் பீச் போன்ற பெயருள்ள கடற்கரைகள் அமைந்திருக்கின்றன. இங்கிருக்கும் ஓம் பீச் தான் முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இன்னும் வர்த்தகத்தனம் மற்றும் அசுத்தம் இல்லாத கடற்கரையான இங்கு எந்த வித தொந்தரவும் இல்லாமல் நண்பர்களுடன் விளையாடியபடியும், குடும்பத்துடன் வந்து கடற்கரை மணலில் அமர்ந்து மனம் விட்டு பேசவும் அருமையான இடம் இந்த கோகர்ணா கடற்க்கரை.

கடற்க்கரை ஓரங்களில் சிறிய குடிசைகள் சுற்றுலா பயணிகளுக்காக வாடகைக்கு கிடைக்கிறது.

கோகர்ணாவை எப்படி அடைவது?

கோகர்ணா பெங்களுருவில் இருந்து 583 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. NH17இல் அமைந்திருக்கும் இந்த இடத்தை பேருந்து அல்லது கார் மூலம் சுலபமாக அடையலாம். பெங்களுருவில் இருந்து கோகர்ணா ரயில் நிலையத்திற்கு ரயில்களும் இயக்கப்படுகின்றன. அதே போல விமானம் மூலம் அடைய வேண்டும் என்றால் 250 கி.மீ தொலைவில் இருக்கும் மங்களூர் விமான நிலையம் வந்து அங்கிருந்து கார் மூலம் இந்த இடத்தை அடையலாம். அருமையாக ஒரு பொழுதை கழிக்க சிறந்த இடம் இந்த கோகர்ணா ஆகும்.

Read more about: karnataka beaches pilgrimage
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X