Search
  • Follow NativePlanet
Share
» »குல்மார்க் - காஷ்மீரின் விளையாட்டு மைதானம்!

குல்மார்க் - காஷ்மீரின் விளையாட்டு மைதானம்!

By

மலர் மைதானம் என்ற பொருளில் 'குல்மார்க்' என்று அழைக்கப்படும் இந்த நகரம் ஆங்கிலேயர்களால் 1927-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதமான காலநிலை, எழில் ததும்பும் நிலக்காட்சிகள், மலர்கள் பூத்துக்குலுங்கும் மலர்த்தோட்டங்கள், அடர்ந்த பைன் மரக்காடுகள், அழகிய ஏரிகள் என அத்தனை வனப்பையும் தன்னகத்தே கொண்டிருக்கும் குல்மார்க், உலகெங்கும் இருந்து சுற்றுலாப்பயணிகளை தன்வசம் சுண்டி இழுத்துக்கொண்டிருக்கிறது.

குல்மார்க் ஹோட்டல்களும், கொஞ்சம் டீல்களும்

இமயமலையின் 12 புகழ்பெற்ற பனிக்கால சுற்றுலாத்தலங்கள்!

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

கோண்டோலா லிஃப்ட், நிங்கல் நல்லா, டிரங்க், கிலன்மார்க் ஆகியவை குல்மார்க்கின் பிரபலமான சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

படம் : Girish Suryawanshi

கோண்டோலா லிஃப்ட்

கோண்டோலா லிஃப்ட்

காஷ்மீர் மாநில அரசாங்கத்தால், பொமகல்ஸ்கை என்னும் பிரெஞ்சு நிறுவனத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படும் கோண்டோலா லிஃப்ட் எனும் கேபிள் கார் குல்மார்க்கின் முதன்மையான சுற்றுலா அம்சமாகும். 13500 அடி உயரத்தில் 5 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்யக்கூடிய இரண்டு தடங்களை சுற்றுலாப்பயணிகள் தேர்ந்தெடுக்கலாம். குல்மார்க்கிலிருந்து காங்க்டூர் வரை ஒன்றும் காங்க்டூரிலிருந்து அபர்வத் வரை ஒன்றுமாக இரண்டு தடங்களில் இப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோண்டோலாவிலிருந்து இமயமலைச் சிகரங்களையும், கோண்டோலா கிராமத்தையும் கண்டு ரசிப்பது த்ரில்லான அனுபவமாக இருக்கும்.

படம்

நிங்கல் நல்லா

நிங்கல் நல்லா

குல்மார்க்கிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது நிங்கல் நல்லா என்னும் அழகிய நீரோடை. அல்பத்தர் ஏரி மற்றும் அபர்வாத் சிகரத்திலிருந்து கோடையில் பனிக்கட்டிகள் உருகி பெருக்கெடுக்கும் பனிநீரால் ஆனது இந்த நீரோடை. புல்வெளிகள் அடர்ந்த இப்பகுதி குழந்தைகளுடன் குதூகலமாக நேரத்தை செலவழிக்க விரும்புபவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

படம் : Basharat Alam Shah

கிலன்மார்க்

கிலன்மார்க்

குல்மார்க்கிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கிலன்மார்க் சுற்றுலாத் தலத்துக்கு பயணிகள், பள்ளத்தாக்கில் உள்ள புல்வெளி மைதானங்களின் வழியே காலாற நடந்தே வந்துவிடலாம். இவ்விடத்திலிருந்து நங்கபர்வதத்தின் எழிலையும், இமயமலையின் பிரம்மாண்டமான அழகினையும், இரட்டைச் சிகரங்களான, நுன் மற்றும் குன் ஆகியவற்றின் கவின்மிகு காட்சியையும் கண்டு இன்புறலாம்.

படம் : Basharat Alam Shah

டிரங்க்

டிரங்க்

குல்மார்க்கிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள டிரங்க் ஒரு அற்புதமான சுற்றுலாத் தலம்.

படம் : Poonam Agarwal

அருகாமை சுற்றுலாத் தலங்கள்

அருகாமை சுற்றுலாத் தலங்கள்

குல்மார்க்கின் அருகாமை சுற்றுலாத் தலங்களாக சோனமார்க், பரமுல்லா, ஸ்ரீநகர், யஸ்மார்க் ஆகியவை அறியப்படுகின்றன.

படம் : June West

சோனமார்க்

சோனமார்க்

தங்கச் சமவெளி என்று பொருள்படும் சோனமார்க் நகரம் குல்மார்க்கிலிருந்து 127 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சோனமார்க்கின் சுற்றுலாத் தலங்கள்

சோனமார்க் ஹோட்டல் டீல்கள்

படம் : Kashmir Pictures

சோனமார்க் பள்ளத்தாக்கு

சோனமார்க் பள்ளத்தாக்கு

சோனமார்க் பள்ளத்தாக்கின் எழில்மிகு காட்சி.

படம் : Girish Suryawanshi

சோனமார்க் செல்லும் வழி

சோனமார்க் செல்லும் வழி

குல்மார்க்கிலிருந்து சோனமார்க் செல்லும் வழி.

படம் : Girish Suryawanshi

பரமுல்லா

பரமுல்லா

குல்மார்க்கிலிருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பரமுல்லா நகரம் நீண்ட வரலாற்றை கொண்டது. கி. மு 2306-ஆம் ஆண்டு ராஜ பிம்சினா என்ற அரசரால் இந்த நகரம் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

பரமுல்லா சுற்றுலாத் தலங்கள்

படம் : Muzaffar Bukhari

ஸ்ரீநகர்

ஸ்ரீநகர்

'பூலோக சொர்க்கம்' மற்றும் 'கிழக்கின் வெனிஸ்' என்ற பெயர்களால் அழைக்கப்படும் ஸ்ரீநகர், குல்மார்க்கிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீநகர் சுற்றுலாத் தலங்கள்

ஸ்ரீநகர் ஹோட்டல் டீல்கள்

படம் : Basharat Shah

யஸ்மார்க்

யஸ்மார்க்

குல்மார்க்கிலிருந்து 97 கிலோமீட்டர் தொலைவில் யஸ்மார்க் எனும் இந்த அழகிய சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது.

படம் : Basharat Alam Shah

பனிச்சறுக்கு

பனிச்சறுக்கு

காஷ்மீர் பகுதிகளிலேயே பனிச்சறுக்கு விளையாட்டு குல்மார்க்கில்தான் மிகவும் பிரபலம். இங்கு 1927-ஆம் ஆண்டிலேயே ஆங்கிலேயர்களால் துவங்கப்பட்ட பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்று உள்ளது. இந்த ரிசார்டை அடைய 400 மீட்டர் உயரத்தில் கேபிள் காரில் நீங்கள் பயணம் செய்ய வேண்டும். இப்படியாக ஒரு சிறிய சாகசப் பயணம் உங்களை ரிசார்ட்டின் உச்சிக்கு கொண்டு சேர்த்துவிடும்.

ஹெலி-ஸ்கையிங்

ஹெலி-ஸ்கையிங்

குல்மார்க் பகுதியில் பனிச்சறுக்கு சீசன் டிசம்பரில் தொடங்கி ஏப்ரல் பாதியில் முடிவடையும். இச்சமயங்களில் குல்மார்க்கில் பனிச்சறுக்கு வீரர்களுக்காக 'ஹெலி-ஸ்கையிங்'-யையும் ரிசார்ட் ஏற்பாடு செய்துகொடுக்கிறது. இந்த ரிசார்ட்தான் ஆசியாவிலுள்ள ஒரே ஹெலி-ஸ்கையிங் ரிசார்ட். அதுமட்டுமல்லாமல் உலகிலேயே கனடாவுக்கு பிறகு ஹெலி-ஸ்கையிங் செய்வதற்கு குல்மார்க்தான் சிறந்த இடமாக கருதப்படுகிறது. அதாவது ஹெலி-ஸ்கையிங் என்பது கேபிள் கார் இன்றி ஹெலிகாப்டர் மூலம் நீங்கள் பனிமூடிய சிகரத்தின் உச்சியை அடைந்து பின்னர் அங்கிருந்து கீழே பனிச்சறுக்கு செய்து வரவேண்டும். அதோடு உங்களை பின்தொடர்ந்து ஹெலிகாப்டரும் வரும்.

பாராகிளைடிங்

பாராகிளைடிங்

காஷ்மீரில் சோனாமார்க், குல்மார்க் பகுதிகளில் பாராகிளைடிங் விளையாட்டு பிரபலமாக உள்ளது. இதற்கான சிறந்த சீசனாக மே முதல் ஜூன் வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலுமான காலங்கள் கருதப்படுகின்றன.

கோல்ஃப் விளையாட்டு

கோல்ஃப் விளையாட்டு

ஸ்ரீநகர் மற்றும் குல்மார்க் பகுதிகளில் காணப்படும் பசுமையான கோல்ஃப் மைதானங்களில் குறைந்த வெப்பநிலை காரணமாக சமவெளிகளில் விளையாடுவதை விட நீங்கள் நீண்ட நேரம் கோல்ஃப் விளையாட முடியும். ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலங்கள் கோல்ஃப் விளையாட சிறந்த காலங்களாக கருதப்படுகின்றன.

குல்மார்க் செல்லும் சாலை

குல்மார்க் செல்லும் சாலை

குல்மார்க் செல்லும் ஆபத்தான சாலை.

படம் : Basharat Alam Shah

ஆபத்தான வளைவு

ஆபத்தான வளைவு

குல்மார்க் செல்லும் ஆபத்தான சாலையில் ஒரு பயணிகள் பேருந்து.

படம் : Basharat Alam Shah

ஸ்லெட்ஜ் பனிச்சறுக்கு

ஸ்லெட்ஜ் பனிச்சறுக்கு

குல்மார்க்கில் ஸ்லெட்ஜ் எனப்படும் சக்கரம் இல்லாத வண்டியில் பனிச்சறுக்கில் ஈடுபடும் பயணிகள்


படம் : Colin Tsoi

ஸ்ட்ராபெர்ரி பள்ளத்தாக்கு

ஸ்ட்ராபெர்ரி பள்ளத்தாக்கு

குல்மார்க்கில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பள்ளத்தாக்கு.

படம் : Basharat Alam Shah

ஜீரோ பாலம்

ஜீரோ பாலம்

குல்மார்க்கிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் ஜீலம் நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள ஜீரோ பாலம்.

படம் : Basharat Alam Shah

குல்மார்க்கின் பனிமலைகள்

குல்மார்க்கின் பனிமலைகள்

மேகம் மூடும் குல்மார்க்கின் பனிமலைகள்!

படம் : Abhishek Shirali

கோண்டோலா கேபிள் கார்

கோண்டோலா கேபிள் கார்

உயரத்தில் சென்றுகொண்டிருக்கும் கோண்டோலா கேபிள் கார்.

படம் : Basharat Alam Shah

அஃபர்வாத் சிகரத்திலிருந்து...

அஃபர்வாத் சிகரத்திலிருந்து...

அஃபர்வாத் சிகரத்திலிருந்து குல்மார்க்கின் தோற்றம்.

படம் : Basharat Alam Shah

ஸ்கை லிஃப்ட்

ஸ்கை லிஃப்ட்

குல்மார்க்கின் உச்சியிலுள்ள பனிச்சறுக்கு ரிசார்ட்டுக்கு ஸ்கை லிஃப்ட்டில் செல்லும் பயணிகள்.

படம் : Rudolph.A.furtado

புனித மேரி தேவாலயம்

புனித மேரி தேவாலயம்

குல்மார்க்கில் பனியால் மூடப்பட்டிருக்கும் புனித மேரி தேவாலயம்.

படம் : Rudolph.A.furtado

குரங்குகள்

குரங்குகள்

குல்மார்க் பகுதியில் காணப்படும் குரங்குகள்.

படம் : Peter

பனிச்சறுக்குக்கு தயார்!

பனிச்சறுக்குக்கு தயார்!

பனிச்சறுக்கு செய்ய மலையுச்சியில் காத்திருக்கும் பனிச்சறுக்கு வீரர்கள்.

படம் : Peter

குல்மார்க்கில் எங்கு தங்கலாம்?

குல்மார்க்கில் எங்கு தங்கலாம்?

குல்மார்க் ஹோட்டல் டீல்கள் : http://bit.ly/1nd2qJs

படம் : Basharat Alam Shah

குல்மார்கை எப்போது மற்றும் எப்படி அடைவது?

குல்மார்கை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Colin Tsoi

Read more about: hill stations
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X