Search
  • Follow NativePlanet
Share
» »ஹேவ்லாக் தீவு - இங்க வந்தீங்கன்னா திரும்பி போக மனசு வராது!

ஹேவ்லாக் தீவு - இங்க வந்தீங்கன்னா திரும்பி போக மனசு வராது!

By Staff

அந்தமான் தீவுக்கூட்டங்களில் மிக முக்கியமான தீவாகவும், ஆசியாவிலேயே மிக அழகான கடற்கையாக கருதப்படும் ராதா நகர் கடற்கரை அமைந்துள்ள இடமாகவும் ஹேவ்லாக் தீவு உலக சுற்றுலாப் பயணிகளிடம் தனி கவனத்தை பெற்றிருக்கிறது.

நீங்கள் இந்தியாவில் பிறந்தவராக இருப்பின் ஹேவ்லாக் தீவு நீங்கள் வாழ்வில் கட்டாயம் காணவேண்டிய அற்புதங்களில் ஒன்று.

முக்கியமாக இயந்திர வாழ்க்கை வாழும் மாநகரவாசிகள் இந்த தீவுக்கு ஒரு முறை வந்து பார்த்தால் திரும்பி போக மனதில்லாமல் இங்கேயே தங்கிவிடுவார்கள்!

மதுரையை எரித்த பிறகு கண்ணகி எங்கே சென்றாள் தொடரும் மர்மம்மதுரையை எரித்த பிறகு கண்ணகி எங்கே சென்றாள் தொடரும் மர்மம்

இயற்கை வனப்பு!

இயற்கை வனப்பு!

அடர்ந்த மழைக்காடுகள் போர்த்திய மலைகள், கடலோரம் வரை நீரைத் தொட்டுக்கொண்டு நிற்கும் நெடிதுயர்ந்த மரங்கள் என ஆழமற்ற மரகதப்பச்சை நிற கடலால் சூழப்பட்டது ஹேவ்லாக் தீவு.

படம் : Sankara Subramanian

5 கடற்கரை கிராமங்கள்

5 கடற்கரை கிராமங்கள்

ஹேவ்லாக் தீவில் கோவிந்தா நகர், ராதா நகர், பிஜோய் நகர், ஷ்யாம் நகர், கிருஷ்ணா நகர் என 5 அழகிய கடற்கரைப்பகுதிகளை கொண்ட கிராமங்கள் அமைந்துள்ளன.

படம் : mattharvey1

ஆசியாவின் அழகான கடற்கரை

ஆசியாவின் அழகான கடற்கரை

ஹேவ்லாக் தீவிலுள்ள கடற்கரைகளில் ராதா நகர் கடற்கரையை ‘ஆசியாவிலேயே மிகச்சிறந்த அழகான கடற்கரை' என்று பிரபலமான ‘டைம்' பத்திரிகை 2004-ஆம் ஆண்டில் தேர்வு செய்தது.

படம் : Sankara Subramanian

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

காலனிய ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேய தளபதியாக இருந்த ஹென்றி ஹேவ்லாக் என்பவரது பெயரே இந்த தீவுக்கு வைக்கப்பட்டுள்ளது.

படம் : Dr. K. Vedhagiri

ஃபெர்ரி படகுப்பயணம்

ஃபெர்ரி படகுப்பயணம்

போர்ட் பிளேர் நகரத்திலிருந்து வடகிழக்கே 55 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹேவ்லாக் தீவுக்கு ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை ‘ஃபெர்ரி' சொகுசு படகுகள் (போர்ட் பிளேரிலிருந்து) இயக்கப்படுகின்றன. இவற்றுக்கான கட்டணமாக 300 முதல் 500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

படம் : Sankara Subramanian

கட்டுமரப் பயணம்

கட்டுமரப் பயணம்

போர்ட் பிளேரிலிருந்து ஹேவ்லாக் தீவு செல்வதற்கு ஃபெர்ரி படகை தவிர கட்டுமரத்திலும் பயணிக்கலாம். ஆனால் ஃபெர்ரி பயணத்தைவிட கட்டுமரப் பயணம் அற்புதமான அனுபவமாக இருக்கும். இதற்கான கட்டணம் ஃபெர்ரி படகைவிட சற்று கூடுதலாக இருக்கும்.

படம் : Sankara Subramanian

ஹெலிகாப்டர் பயணம்

ஹெலிகாப்டர் பயணம்

ஃபெர்ரி மற்றும் கட்டுமரப் பயணத்தில் விருப்பமில்லாதவர்களுக்கு பவான் ஹான்ஸ்' ஹெலிகாப்டர் சேவைகளும் போர்ட் பிளேரிலிருந்து ஹேவ்லாக் தீவுக்கு கிடைக்கின்றன.

படம் : Senorhorst Jahnsen

கால்நடை பயணம்

கால்நடை பயணம்

ஹேவ்லாக் தீவுக்கு சென்றடைந்தபின் கால்நடையாகவே சுற்றித்திரிந்து தீவின் அழகம்சங்களையும், கடற்கரைகளையும், குடில்களையும், கடைகளையும் நிதானமாக பார்த்து ரசிப்பது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்.

படம் : marek.krzystkiewicz

பவளப்பாறை

பவளப்பாறை

ராதாநகர் கடற்கரைப்பகுதியில் ஸ்படிகம் போன்று மரகதப்பச்சை ஜொலிப்புடன் மின்னும் கடல்நீருக்கு அடியில் காட்சியளிக்கும் பவளப்பாறை வளர்ச்சிகளை சுற்றுலாப் பயணிகள் விதவிதமான வடிவங்களில் கண்டு மகிழலாம்.

படம் : ichat

எலிஃபண்ட் பீச்

எலிஃபண்ட் பீச்

ராதாநகர் கடற்கரைக்கு வெகு அருகிலேயே எலிஃபண்ட் பீச் அமைந்துள்ளது. இந்த கடற்கரைக்கு நீங்கள் ராதா நகர் கடற்கரையிலிருந்து நடந்தே சென்றுவிடலாம். நடக்க முடியாதவர்கள் 100 ரூபாய் கட்டணத்தில் ஆட்டோ மூலமாகவும் செல்லலாம். அது மட்டுமல்லாமல் இங்கு டாக்ஸி வசதிகள் மற்றும் வாடகை ஸ்கூட்டர்கள் போன்றவையும் ‘ஒரு நாள் வாடகைக்கு குறைந்த கட்டணத்தில் கிடைக்கின்றன.

படம் : Senorhorst Jahnsen

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

அந்தமான் தீவுகளின் சிறப்பம்சமான ‘ஸ்கூபா டைவிங்' இந்த ஹேவ்லாக் தீவிலும் பிரதான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இருப்பினும் அதிக ஆழத்திற்கு டைவிங் செய்ய தேவைப்படும் வசதிகளான ‘ஸ்பீட் போட்' எனப்படும் அதிவேக மோட்டார் படகுகள் மற்றும் ‘டிகம்ப்ரஷன் சேம்பர்கள்' போன்றவை அந்தமான் தீவுகளில் இல்லை.

படம் : Arun Katiyar

3 வகை ஸ்கூபா டைவிங்

3 வகை ஸ்கூபா டைவிங்

முதல் முறை டைவிங் செய்பவர்கள், கொஞ்சம் அனுபவம் மிக்கவர்கள் மற்றும் நிறைய அனுபவம் உள்ள சாகசவிரும்பிகள் என்று மூன்று தரப்பினருக்கான ‘ஸ்கூபா டைவிங்' கடல் மூழ்கு பயண வசதிகள் இந்த தீவில் வழங்கப்படுகின்றன.

படம் : Arun Katiyar

ஈடு இணை இல்லா டைவிங்!

ஈடு இணை இல்லா டைவிங்!

ஸ்படிகத்தெளிவுடன் காட்சியளிக்கும் நீருக்கடியில் மூழ்கி விதவிதமான வண்ண மீன்கள், கடல் உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் வித்தியாசமான தோற்றத்துடன் அசையும் பவளப்பாறை வளர்ச்சிகள் போன்றவற்றை கண்ணுக்கருகே ரசிக்கும் அனுபவத்துக்கு ஈடு இணை எதுவுமேயில்லை என்பதை ஹேவ்லாக் தீவில் ஒரு முறை டைவிங் பயணம் மேற்கொண்டபிறகு ஒப்புக்கொள்வீர்கள்.

படம் : Arun Katiyar

டிரெக்கிங்

டிரெக்கிங்

ஸ்கூபா டைவிங் தவிர டிரெக்கிங் அல்லது மலையேற்றத்துக்கும் ஹேவ்லாக் தீவு பிரசித்திபெற்றுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்காகவே வழிகாட்டிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த மலையேற்ற சுற்றுலா சேவைகளை பல்வேறு தனியார் சுற்றுலா நிறுவனங்கள் வழங்குகின்றன.

படம் : Sankara Subramanian

பிஜோய் நகர்

பிஜோய் நகர்

கடற்கரைகள், ஸ்கூபா டைவிங், பவளப்பாறைகள், டிரெக்கிங் ஆகிய விஷயங்களை தாண்டி ஹேவ்லாக் தீவிலுள்ள பிஜோய் நகர் எனும் கிராமம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். இங்கு கைவினைப்பொருட்கள் மற்றும் கடற்சிப்பிகளில் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் போன்றவற்றை நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

படம் : Sankara Subramanian

யானைச் சவாரி

யானைச் சவாரி

எலிஃபண்ட் பீச்சில் யானைச் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Foreign Devil Corresponden

பறக்கும் தட்டு

பறக்கும் தட்டு

ராதா நகர் கடர்கரையில் பறக்கும் தட்டு விளையாடும் வெளிநாட்டு சுற்றலாப் பயணிகள்.

படம் : Sankara Subramanian

மீனவர்

மீனவர்

ஹேவ்லாக் தீவில் கடலில் தன்னந்தனியாக மீன் பிடிக்கும் மீனவர்.

படம் : mattharvey1

பரக்கூடா

பரக்கூடா

ஹேவ்லாக் தீவில் கிடைக்கக்கூடிய பரக்கூடா எனப்படும் ஒருவகை மீன். மிகவும் சுவையான இந்த மீனை நீங்கள் ஹேவ்லாக் தீவிலுள்ள உணவகங்களில் ருசிக்கலாம்.

படம் : Arun Katiyar

சமைக்கப்பட்ட பரக்கூடா

சமைக்கப்பட்ட பரக்கூடா

சமைக்கப்பட்ட பரக்கூடா மாமிசம்.

படம் : Arun Katiyar

ஃபுல் மூன் கஃபே

ஃபுல் மூன் கஃபே

பரக்கூடா மீன் உணவுக்கு பிரசித்திபெற்ற ஃபுல் மூன் கஃபே.

படம் : Arun Katiyar

ஸ்கூபா பயணம்

ஸ்கூபா பயணம்

ஸ்கூபா டைவிங் செய்வதற்கு ஃபெர்ரி படகில் செல்லும் சுற்றலாப் பயணிகள்.

படம் : Arun Katiyar

சூரிய அஸ்த்தமனக் காட்சி

சூரிய அஸ்த்தமனக் காட்சி

ராதா நகர் கடற்கரையில் சூரிய அஸ்த்தமனக் காட்சி.

படம் : Sankara Subramanian

ஸ்கூபா கருவிகள்

ஸ்கூபா கருவிகள்

ஸ்கூபா டைவிங் செய்வதற்கு தேவையான ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்ட கருவிகள்.

படம் : Arun Katiyar

சிவப்பு கொடி

சிவப்பு கொடி

ஃபெர்ரி படகின் உச்சியில் பறக்கும்சிவப்பு கொடி, அந்தப் பகுதியில் சிலர் ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட்டுள்ளனர் என்பதை மற்ற படகுகளுக்கும், ஏனைய ஃபெர்ரி படகுகளுக்கும் தெரிவிக்கும்.

படம் : Arun Katiyar

முன்ஜோ ரிசார்ட்

முன்ஜோ ரிசார்ட்

ஹேவ்லாக் தீவின் பிரபலமான ரிசார்ட்டுகளில் ஒன்றான முன்ஜோ ரிசார்ட்.

படம் : Joseph Jayanth

காலாபாதர் பீச்

காலாபாதர் பீச்

ஹேவ்லாக் தீவிலுள்ள மற்றொரு அழகிய கடற்கரை இந்த காலாபாதர் பீச்.

படம் : Vikramjit Kakati

காட்டேஜ்கள்

காட்டேஜ்கள்

கடலோரத்தில் உள்ள காட்டேஜ்கள்

படம் : Arun Katiyar

ஸ்படிக நீர்

ஸ்படிக நீர்

எலிஃபண்ட் பீச் கடற்கரைப்பகுதியில் காணப்படும் ஸ்படிகம் போன்ற நீர்ப்பரப்பு.

படம் : Shimjithsr

காடு

காடு

எலிஃபண்ட் பீச்சுக்கு அருகேயுள்ள அழகிய காடு.

படம் : Kai Hendry

நீச்சல்

நீச்சல்

எலிஃபண்ட் பீச் பகுதியில் தூய்மையான கடல் நீரில் நீந்தித்திளைக்கும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Shimjithsr

சிறிய கலங்கரை விளக்கு

சிறிய கலங்கரை விளக்கு

ஹேவ்லாக் தீவின் கடற்கரை ஒன்றில் அமைந்துள்ள சிறிய கலங்கரை விளக்கு.

படம் : Shimjithsr

பதிவு செய்யும் இடம்

பதிவு செய்யும் இடம்

ஸ்கூபா டைவிங் செய்வதற்கு பணம் செலுத்தி பதிவு செய்யும் இடம்.

படம் : Arun Katiyar

ஹேவ்லாக் தீவில் எங்கு தங்கலாம்?

ஹேவ்லாக் தீவில் எங்கு தங்கலாம்?

ஹேவ்லாக் தீவு ஹோட்டல்கள்

படம் : Sankara Subramanian

ஹேவ்லாக் தீவை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

ஹேவ்லாக் தீவை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Ana Raquel S. Hernandes

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X