உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

புகழ்பெற்ற வரலாற்று நகரமான பல்கருக்கு ஒரு பயணம்! வாங்க போகலாம்…

Written by: Balakarthik Balasubramanian
Published: Saturday, August 12, 2017, 9:00 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments


மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் காணப்படும் இடம் தான் பல்கர் ஆகும். இந்த மாபெரும் நகரத்தில் வரலாற்று இடங்களும், சமயம் சார்ந்த இடங்களும் காணப்படுகிறது.


நீர் அலைகளை விரும்பும் நபர் நீங்களென்றால், இந்த குளுமை நீரோட்டம் உங்கள் மனதினை வெகுவாக கவரும். நீங்கள் கண்டிப்பாக வந்து செல்ல வேண்டிய ஒரு இடமாக பல்கர் காணப்படுகிறது. சிக்கோ தயாரிப்பிற்கு பெயர் பெற்ற இந்த இடம்; ஓர் விழாவை சிறப்புடன் கொண்டாட, அதன்பிறகே அப்பழத்திற்கு அப்பெயர் வந்ததாக சொல்லப்படுகிறது.


பதினாறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த கெல்வா கோட்டை போர்த்துகீசியர்களால் கட்டப்பட, சிவாஜி தன்னுடைய தற்காப்புக்கு இதனை பயன்படுத்தினார் என்பதும் நமக்கு தெரியவருகிறது. வரலாறு, கலை, கட்டிடக்கலை என பல சுவாரஸ்யமான தகவலை நாம் தெரிந்துக்கொள்ள அழகிய இடமாக இது அமைகிறது.

எப்படி நாம் செல்வது? இந்த இடத்தை காண சிறந்த நேரங்கள் எவை?

 

ஆரம்ப புள்ளி: மும்பை
முற்றுப்புள்ளி: பல்கர்

இவ்விடத்தை காண சிறந்த நேரங்கள்: வருடம் முழுவதும் வந்து செல்ல ஏற்ற இடமாக பல்கர் காணப்படுகிறது.

பல்கரை நாம் அடைவது எப்படி?

தண்டவாள மார்க்கமாக செல்வது:

பல்கரில் இரயில் நிலையம் ஒன்று காணப்பட, அதனை பல்கர் ரயில் நிலையம் என்றழைக்கின்றனர். இங்கிருந்து மகாராஷ்டிராவின் பல முக்கிய நகரங்களுக்கு சேவை இயக்கப்பட, இங்கிருந்து புதுதில்லி, பெங்களூரு, மைசூரு, ஜாம் நகர், சென்னை என பல நகரங்களுக்கும் சேவை இணைக்கப்பட்டுள்ளது.

சாலை மார்க்கமாக செல்வது:

பல்கரை நாம் அடைய சிறந்த வழியாக சாலை வழி அமைகிறது. இந்த நகரமானது சாலையுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்க, பல முக்கிய நகரங்களில் இருந்து பல்கருக்கு தினசரி பேருந்துகளும் இயக்கப்படுகிறது. மும்பையிலிருந்து பல்கருக்கு ஒட்டுமொத்தமாக 115 கிலோமீட்டர் தூரம் வருகிறது.

Mrugakshibole05

 

வழியின் வரைப்படம்:


இங்கே இரண்டு வழிகள் செல்ல, அவற்றை நாமும் பின்தொடர்ந்து செல்வோம்.
வழி 1:
மும்பை - முலான்ட் கிழக்கு - தானே - ஷிர்சாத் - மனோர் - பல்கர் (தேசிய நெடுஞ்சாலை வழி 48)
வழி 2:
மும்பை - கண்டிவல்லி கிழக்கு - போரிவாலி கிழக்கு - காஷிமீரா - நைகோன் கிழக்கு - மனோர் - மேற்கு எக்ஷப்ரஸ் நெடுஞ்சாலை வழி பல்கர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை வழி 48.
உங்களில் யாராவது முதல் வழியை தேர்ந்தெடுப்பீர்கள் என்றால், தோராயமாக 2 மணி நேரம் 13 நிமிடங்கள் தேசிய நெடுஞ்சாலை 48இன் வழியாக பல்கரை அடைய நமக்கு தேவைப்படுகிறது. இந்த வழியாக, நாம் பெயர் பெற்ற நகரங்களான தானே, மனோர் என பல இடங்களை அடைகிறோம்.
இந்த சாலைகள் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டிருக்க, நல்லதோர் வேகத்தில் இந்த தூரத்தை நம்மால் அடைய முடிகிறது. மேலும் இதன் தூரமானது இவ்வழியாக நாம் வர, 115 கிலோமீட்டர்கள் ஆகிறது.
ஒருவேளை நீங்கள் வழி 2ஐ தேர்ந்தெடுப்பீர்களாயின், தோராயமாக 3 மணி நேரங்கள் நமக்கு தேவைப்பட, 109 கிலோமீட்டர், மும்பையிலிருந்து பல்கருக்கு வர நமக்கு தேவைப்படுகிறது. இதற்கான வழியாக மேற்கு எக்ஷப்ரஸ் நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலை 48 காணப்படுகிறது.

தானேவில் காணப்படும் சிறுக்கடைகள்:

 

நீங்கள் முதல் வழியை தேர்ந்தெடுப்பீர்கள் என்றால், மும்பையிலிருந்து அதிகாலையில் எழுந்து செல்ல இரண்டு காரணங்கள் உண்டாகிறது. ஒன்று, நகரத்தின் கூட்ட நெரிசலை நாம் தவிர்க்க, மற்றுமொன்று... நெடுஞ்சாலை கூட்ட நெரிசலை நாம் தவிர்க்க.

நீங்கள் நெடுஞ்சாலையில் செல்ல, உங்களுடைய காலை உணவினை முடித்துக்கொள்ள எண்ணற்ற வாய்ப்புகள் உங்களுக்கு அமைகிறது. சுவையூட்டும் வடாபாவில் தொடங்கி, மசாலா பாவ், போஹா என பல உணவுகள் நெடுஞ்சாலை வழிகளில் நமக்கு கிடைக்கிறது.

Kshirsagarrahul

 

தானேவில் காணப்படும் சிறுக்கடைகள்:


தானேவில் நாம் நிறுத்த சுவையான காலை உணவுகள் காரணமாக அமைய, காலை உணவினை நாம் முடித்துக்கொண்டு, அந்த இடங்களை சுற்றி பார்க்கிறோம். ‘தானா' என உள்ளூர் பாசையில் இதனை அழைக்கப்பட, ‘ஏரிகளின் நகரம்' என்றும் இதனை நாம் அழைப்பதோடு; இந்த நகரத்தில் ஒட்டுமொத்தமாக 30 ஏரிகள் அருகில் காணப்படுகிறது.

அவற்றுள் மிகவும் அழகானதாக மசுன்டா டலோ காணப்பட, இதனை ‘டலோ பாலி' என்றும் அழைப்பர். இந்த ஏரியில் படகு சவாரி மற்றும் நீர் ஸ்கூட்டி வசதிகள் காணப்பட, இங்கே காணும் மற்ற பிரசித்திபெற்ற ஏரிகளாக உப்வான் ஏரி, டன்சா ஏரி, கசரல்லி டலோ, மகாமலி டலோ, சித்தேஷ்வர் டலோ, பிரம்மல டலோ, கோசலே டலோ, ரைலாதேவி டலோ என பல ஏரிகள் காணப்படுகிறது.

கணேஷ்புரி ஆலயம், ஜவஹர் அரண்மனை, மனாஸ் மந்தீர் சஹாபூர், சல்செட்டே தீவு என பல இடங்கள் காணப்பட, அவை நம்மை பெரிதும் ஈர்க்கிறது.

Mandar Dewalkar

 

இலக்கு: பல்கர்:

 

இங்கே ஏதோ ஒன்று ஈர்க்கப்பட, அனைத்து விதமான வயதினருக்கும் ஏற்ற இடமாக இது விளங்குகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரது நேரத்தையும் இந்த பல்கர் இனிமையானதாக மாற்ற, இந்த இடத்தை காண வரும் சுற்றுலா பயணிகளின் மனதில் நீங்கா ஆசையை நிறைவுசெய்து மீண்டும் மீண்டும் இங்கே நம்மை வரத்தூண்டும் என்பதே உண்மை.

பிரசித்திபெற்ற கடற்கரைகளுள் ஒன்றாக கெல்வா கடற்கரை காணப்படுகிறது. இந்த கடற்கரை பரந்து விரிந்து காணப்பட இதன் சுற்றளவு 8 கிலோமீட்டராக இருக்கிறது. இது தூய்மையான இடங்களுள் ஒன்றாக காணப்பட, யாரும் கண்டிராத மற்றும் அமைதியான கடற்கரையாகவும் நம் நாட்டில் காணப்படுகிறது. இந்த இடத்தை சுற்றி சுரு மரங்களும் காணப்படுகிறது.

%u9648%u9706

 

 

கெல்வா கோட்டை:

 

கடற்கரையில் காணப்படும் மற்றுமோர் ஈர்ப்பாக கெல்வா கோட்டை காணப்படுகிறது. பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட இவ்விடம், சிவாஜியால் கைப்பற்றப்பட்டதாகும். இந்த கோட்டையானது, சுவற்றின் மேல் நாம் ஏற பயன்பட, இந்த கோட்டையை சிவாஜி தற்காப்புக்காக பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.

Himanshu Sarpotdar

 

ராமாலயம்:


இங்கே காணப்படும் மற்றுமோர் ஈர்ப்பாக ராமாலயம் காணப்படுகிறது. புராணத்தின்படி, ராமன் தன்னுடைய இளைய சகோதரனுடன் இணைந்திருக்க, மஹிரவன் மற்றும் அஹிரவனால் லக்ஷமணன் சிறையில் அடைக்கப்பட, ஹனுமான் அவனை காப்பாற்றியதாகவும், அன்று முதல் இந்த இடமானது ஹிந்துக்களுக்கு முக்கியமானதோர் இடமாக விளங்குவதாகவும் தெரியவருகிறது.

Raja Ravi Varma

 

ஷிர்கோன் கோட்டை:

 

ஷிர்கோன் கடற்கரைக்கு அருகில் இக்கோட்டை காணப்பட, இங்கே பிரசித்திபெற்ற மராட்டிய ஆட்சியாளரான சிவாஜி வசித்ததாகவும் நம்பப்படுகிறது.
மற்ற வரலாற்று கோட்டைகளை போன்று இந்த கோட்டையிலும் சரிபார்க்கப்பட, அதன் மூலமாக எதிரிகளின் அசைவுகளையும், அரச குடும்ப வழக்கத்தை பாதுகாத்ததும் தெரியவருகிறது.

Nishadthakur

 

Read more about: travel, history
English summary

Head To The Historical Town Of Palghar From Mumbai

Head To The Historical Town Of Palghar From Mumbai
Please Wait while comments are loading...