Search
  • Follow NativePlanet
Share
» »'இந்தியாவின் நயாகரா' என்றழைக்கப்படும் அருவி எது தெரியுமா ?

'இந்தியாவின் நயாகரா' என்றழைக்கப்படும் அருவி எது தெரியுமா ?

யானை பூட்டி நேர்ப்புடைத்த நேர்புடைத்து உலகுக்கே சோறுபோட்ட தமிழ்நாட்டின் உயிர்நாடியாக, தாகம் தீர்க்கும் தாயாக இருப்பது காவிரி ஆறு தான். கர்னாடக மாநிலத்தில் உள்ள குடகு மலையில் தலைகாவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகும் காவிரி ஆறு கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷத்துடன் பிரவாகமெடுக்கும் இடம் தான் ஹொகேனக்கல் ஆகும்.

இந்த அருவியை பற்றிய பல சுவையான தகவல்களையும், இதனை எப்படி சென்றடைவது என்பதுபோன்ற விவரங்களையும் தமிழில் இருக்கும் ஒரே முழுமையான பயண இணையதளமான தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

 ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவி :

தமிழ்நாட்டில் தருமபுரி மாவட்டத்தில் மிகச்சரியாக தமிழக - கர்னாடக எல்லையில் அமைந்திருக்கிறது பிரம்மாண்டமான ஹொகேனக்கல் அருவி. தமிழகத்தில் எத்தனையோ அருவிகள் இருந்தாலும் அவை எல்லாவற்றைக் காட்டிலும் பெரியது இந்த ஹொகேனக்கல் அருவி தான்.

Sankara Subramanian

 ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவி :

இந்த அருவியை பார்க்கும் போது அமெரிக்காவில் இருக்கும் உலகின் மிக அதிக அளவு நீர்வரத்து உடைய அருவியான நயாகராவை பார்ப்பது போன்றே இருக்கும்.

இதனாலேயே ஹொகேனக்கல் அருவியானது 'இந்தியாவின் நயாகரா' என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறது.

Praveen

ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவி :

இந்த அருவிக்கு ஹொகேனக்கல் என்று பெயர் வர எதனால் வந்ததென்றால் கன்னட மொழியில் 'ஹொகே' என்றால் புகை என்றும் 'கல்' என்றால் பாறை என்றும் பொருள்படுகிறது. இந்த அருவியில் ஆக்ரோஷமாக நீர் விழுகும் போது புகை எழும்புவது போல இருப்பதால் 'ஹொகேனக்கல்' என்று பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது.

Chris Conway, Hilleary Osheroff

ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவி :

இந்த அருவி தமிழில் 'மரிகொட்டயம்' என்று விளிக்கப்படுகிறது. இந்த பெயர் பரவலாக மக்களுக்கு தெரியாத காரணத்தினால் தமிழகத்திலும் ஹொகேனக்கல் என்றே இந்த அருவி அறியப்படுகிறது.

Anbarasan Rajamani

ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவியில் கிட்டத்தட்ட 60அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த அருவியில் இருந்து காவிரி நேராக மேட்டூர் அணையை சென்றடைகிறது.

Saurabh Sahni

ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவி :

இங்கே வரும் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக பரிசல் சவாரி நடத்தப்படுகிறது. பரிசலில் சவாரி செய்து ஹொகேனக்கல் அருவிக்கு மிக அருகில் சென்று இதன் பிரம்மாண்டத்தை ரசித்து மகிழலாம்.

Ashwin Kumar

ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவி :

இங்கே பரம்பரை பரம்பரையாக மசாஜ் செய்யும் தொழிலும் நடைபெற்று வருகிறது. இங்குள்ள கைதேர்ந்த மசாஜ் நிபுணர்களிடம் மூலிகை எண்ணையில் மசாஜ் செய்துகொண்டு அப்படியே அருவியில் குளிப்பது உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும்.

CK

ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவி :

இங்குள்ள பரிசலில் மொத்தம் 8 பேர் வரை மட்டுமே அமர்ந்து செல்ல முடியும். பணத்திற்கு ஆசைப்பட்டு சிலர் அதிகமான அளவில் ஆட்களை ஏற்றிச் செல்வதால் விபத்துகள் நடக்கும் வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவேண்டியது நம்முடைய கடமையாகும் .

Chris Conway, Hilleary Osheroff

ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவி :

இந்த அருவியில்அப்போதே பிடிக்கப்பட்டு எண்ணையில் பொரித்துக்கொடுக்கப்படும் சுவையான மீன்கள் கிடைக்கின்றன. அவற்றை ருசித்து சாப்பிடலாம்.

இந்த ஹொகேனக்கல் அருவியானது பெங்களூரிலிருந்து 150 கி.மீ தூரத்திலும் சென்னையிலிருந்து 343 கி.மீ தூரத்திலும், சேலத்திலிருந்து 90கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுப்பயணிகள் சேலம், தர்மபுரி மார்க்கமாக ஹொகனேக்கல் சென்றடையலாம்.

Ashwin Kumar

ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவி :

ஹொகேனக்கல் அருவியை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

Suvajit Sengupta

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X