Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் இவை!

இந்தியாவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள் இவை!

இந்தியாவில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படங்கள்

By

ஹாலிவுட் சினிமாவை கண்டு நாமெல்லாம் கனவு கண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவுக்காக ஹாலிவுட் இப்போது ஏங்கிக்கொண்டிருக்கிறது.

இந்தியாவில் 80-களின் தொடக்கத்தில் ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் 2000-த்துக்கு பிறகு வெளியான ஸ்லம்டாக் மில்லினியர், லைப் ஆஃப் பை போன்ற படங்களால் உலக சினிமா இன்று இந்தியாவை மொய்த்துக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் லைப் ஆஃப் பை போன்ற படங்களில் காட்டப்பட்ட இடங்கள் படம் வெளிவந்த பிறகு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக மாற, அம்மாநில சுற்றுலாத்துறைகளும் அவ்விடங்களை மேம்படுத்த தொடங்கியுள்ளன.

இந்திய சினிமா டூயட் பாடவும், சண்டை போடவும் வெளிநாடுகளுக்கு செல்வது போல இன்று வெளிநாட்டு படங்கள் இந்தியாவை தேடி வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.

ஸ்லம்டாக் மில்லினியர்

ஸ்லம்டாக் மில்லினியர்

எல்லா புகழையும் இறைவனுக்கு கொடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் ஆஸ்கார் கனவை எட்டிபிடித்த படம் ஸ்லம்டாக் மில்லினியர். இந்த திரைப்படம் மும்பையின் பல்வேறு பகுதிகளில் படம்பிடிகப்பட்டது. அதிலும் குறிப்பாக ஜுஹூ குடிசை பகுதிகள் படம்பிடிக்கப்பட்டிருக்கும் விதம் மிகவும் சிறப்பானது. மேலும் படத்தின் சில காட்சிகள் ஆக்ராவிலும் படமாக்கப்
பட்டன.

லைப் ஆஃப் பை

லைப் ஆஃப் பை

2012-ல் ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்ததோடு வசூலில் உலக அளவில் அசுர சாதனை படைத்த லைப் ஆஃப் பை திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படம்பிடிக்கப்பட்டது நம்ம பாண்டிச்சேரிலேயும், மூணார்லேயும்தான். அதாவது படத்தோட ஆரம்பத்துல வர மிருகக்காட்சி சாலையெல்லாம் பாண்டிச்சேரி. அதன் பிறகு மூணாரில் சுப்பிரமணியன் கோயில், மவுண்ட் கார்மல் சர்ச் மற்றும் இஸ்லாமிய மசூதி மூன்றும் ஒரே மலையில் அமைந்திருக்கும் அதிசயத்தை லைப் ஆஃப் பை படத்தில் காட்டியிருப்பார்கள். அதுமட்டுமல்லாமல் படத்தின் 3D வேலைகள் ஹைதராபாத் மற்றும் மும்பையில்தான் மேற்கொள்ளப்பட்டன.

மிஷன் இம்பாசிபிள்

மிஷன் இம்பாசிபிள்

டாம் குரூஸ் ஆக்ஷனில் கலக்கியெடுத்த மிஷன் இம்பாசிபிள் 4 படத்தின் சில காட்சிகள் பெங்களூர் மற்றும் மும்பையில் படமாக்கபட்டிருக்கின்றன. அதிலும் படத்தின் கிளைமேக்ஸ் காட்சி பெங்களூரில் உள்ள சன் நெட்வொர்க் அலுவலகத்தில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டிருக்கும் விதம் ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டுவந்துவிடும். (படம் : சென்னை சன் நெட்வொர்க் அலுவலகம்)

தி மித்

தி மித்

ஆக்ஷன் மன்னன் ஜாக்கி ஜான் நம்ம கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத்துடன் இணைந்து கலக்கிய 'தி மித்' திரைப்படம் கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த படத்தில் வரும் களரி சம்பந்தமான காட்சிகள் கேரளாவின் கோழிக்கோடில் எடுக்கப்பட்டதுடன், அதில் இடம்பெற்ற களரி வீரர்கள் நடக்காவு களரி பள்ளியை சேர்ந்தவர்கள். மேலும் கர்நாடகா ஹம்பியில் உள்ள விருபாக்‌ஷா கோயில் இப்படத்தில் முக்கிய இடம் வகிக்கிறது.

தி டார்க் நைட் ரைசஸ் (பேட்மேன்)

தி டார்க் நைட் ரைசஸ் (பேட்மேன்)

பேட்மேன் பட வரிசையில் இன்செப்ஷன் புகழ் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான தி டார்க் நைட் ரைசஸ் இந்தியாவின் பல இடங்களில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் அந்த படத்தின் மிகவும் பிரபலமான ஒரு சண்டை காட்சி ஒன்று ராஜஸ்தான் ஆபானேரியில் உள்ள சாந்த் பாவ்ரி படிக்கனற்றில்தான் எடுக்கப்பட்டது. அதோடு அப்படத்தில் வரும் பாதாள சிறையின் வெளிப்புற காட்சிகளும், வேறு சில காட்சிகளும் படம்பிடிக்கப்பட்ட இடங்கள் ஜோத்பூரில் உள்ள மெஹ்ரான்கர் கோட்டை மற்றும் இதர பகுதிகள்.

ஆக்டோபுஸி

ஆக்டோபுஸி

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில்தான் 1983-ஆம் ஆண்டு 'ஆக்டோபுஸி' என்ற ரோஜர் மூர் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படம் எடுக்கப்பட்டது. இந்த திரைப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் லேக் பேலஸ், ஜக் மந்திர் மற்றும் மன்சூன் பேலஸில் படம்பிடிக்கப்பட்டன. அதோடு ஷிவ் நிவாஸ் பேலஸ் என்ற ஹோட்டலில்தான் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் தங்கியிருந்தார். மேலும் உதய்பூரின் மயக்கும் அழகின் பின்னணியில் ஜேம்ஸ் பாண்ட் படத்தின் விறுவிறுப்பான சண்டை காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட விதம் அற்புதம்.

காந்தி

காந்தி

இந்தியாவின் பெருமையை நம்மை ஆண்ட பிரிட்டிஷ் மண்ணிலிருந்து வந்த இயக்குனர் ஒருவர் உலகுக்கு எடுத்துரைத்த அற்புத பொக்கிஷம் காந்தி. இந்த திரைப்படத்தின் காட்சிகள் ராஷ்ட்ரபதி பவன், இந்தியா கேட், ராஜ்பாத், போர்பந்தர், ஹைதராபாத் ஹவுஸ், மும்பை, புனே, பாட்னா, உதய்பூர் போன்ற இடங்களில் படம்பிடிக்கப்பட்டன. மேலும் இந்த திரைப்படம் மொத்தம் 8 ஆஸ்கார் விருதுகளை அள்ளிக்குவித்தது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X