Search
  • Follow NativePlanet
Share
» »திகிலூட்டும் குகைகள்!!!

திகிலூட்டும் குகைகள்!!!

By

மலை அல்லது குன்றுகளின் அடிவாரங்களில் இயற்கையாக அமைந்த அறைப் பகுதியே பொதுவாக குகை என அறியப்படுகிறது.

கற்காலங்களில் மனிதனின் வசிப்பிடமாக குகைகளே இருந்து வந்தன. குகையில் வாழ்ந்த அவன் குகைச் சுவர்களில் தீட்டிய ஓவியங்களும், குறியீடுகளும்தான் அன்றைய மொழி பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டது.

இன்றும் கூட பல இடங்களில் 1000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட குகைகளை காண முடிகிறது. இவைத்தவிர கசித்துளி படிவுகள், சுண்ணாம்பு போன்றவற்றால் உருவான பிற்கால குகைகளும் இந்தியாவில் நிறைய உள்ளன.

இவற்றில் சில வரலாற்று சிறப்புக்காகவும், திகில் அனுபவத்தை தருவதாலும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக திகழ்ந்து வருகின்றன.

கிரேம் லியாத் ப்ராஹ்

கிரேம் லியாத் ப்ராஹ்

மேகாலயா மாநிலத்தின் ஜெயின்டியா மலைப்பகுதியில் கிரேம் லியாத் ப்ராஹ் குகை அமைந்துள்ளது. 31 கி.மீ நீளம் கொண்ட இந்தக் குகை இந்தியாவின் நீளமான குகையாக கருதப்படுகிறது. இதேபோல அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் எண்ணற்ற குகைகள் மேகாலயா மாநிலத்தில் நிறைய காணப்படுகின்றன. அவற்றில் சில குகைகள் உலகின் மிக நீளமான மற்றும் மிக ஆழமான குகைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றன.

படம் : Biospeleologist

போரா குகைகள்

போரா குகைகள்

போரா குஹாலு என்று உள்ளூர் மொழியில் அழைக்கப்படும் போரா குகைகள் அனந்தகிரி குன்றின் ஒரு பகுதியாக இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் அமைந்திருக்கிறது. இந்த குகைகள் கடல் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் அமைந்திருப்பதோடு, இந்தியாவின் மிகப்பெரிய குகைகளில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. பெரும்பாலும் சுண்ணாம்புக் கற்களாலேயே உருவாகியிருக்கும் போரா குகைகள் 80 மீட்டர் ஆழம் கொண்டதால், இந்தியாவின் ஆழம் மிகுந்த குகையாக கருதப்படுகிறது. இதன் காரணமாக போரா குகைகள் வரலாற்று ஆய்வாளர்கள், அறிவியல் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை அதிக அளவில் ஈர்த்து வருகிறது.

பேலம் குகைகள்

பேலம் குகைகள்

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பேலம் என்ற கிராமத்தில் அமைந்திருக்கிறது இந்த திகிலூட்டும் பேலம் குகைகள். நீங்கள் இங்கு முதல்முறையாக செல்கிறீர்கள் என்றால் தனியாக எங்காவது சுற்றித் திரிந்து மாட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில் 3.5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகையில் உங்களை எங்கென்று தேடுவது?!

எடக்கல் குகைகள்

எடக்கல் குகைகள்

7000 ஆண்டுகளுக்கு முற்பட்ட குகைகளாக கருதப்படும் எடக்கல் குகைகள் கேரள மாநிலம் வயநாடு நகரத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. எடக்கல் குகைகளில் மொத்தம் மூன்று தொகுதிகளாக குகைகள் அமைந்திருக்கின்றன. இவை ஒவ்வொன்றும் வரலாற்றுக்கு முந்தைய காலங்களில் வாழ்ந்த மனித இருப்பின் சுவடுகளாக அறியப்படுகின்றன. இந்த குகைகளின் சுவர்களில் எண்ணற்ற தொன்மையான கல்வெட்டுகள், பல்வேறு விலங்குகள் மற்றும் மனிதர்களின் உருவங்கள், பழங்கால ஆயுதங்களின் வடிவங்கள், குறியீடுகள் போன்றவை பொறிக்கப்பட்டுள்ளன.

படம் : Vinayaraj

ராபர்ஸ் கேவ்

ராபர்ஸ் கேவ்

குச்சு பாணி என்ற பெயரிலும் அழைக்கப்படும் இந்த ராபர்ஸ் கேவ் டேராடூன் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அனார்வாலா எனும் கிராமத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இந்த குகை கொள்ளைக்காரர்கள் தங்கும் இடமாக இருந்ததாகவும், ஆங்கிலேயப்படைகளிலிருந்து தப்பிக்க அவர்கள் இங்கு பதுங்கி வசித்ததாகவும் கூறப்படுகிறது.

படம் : Alokprasad

Read more about: சாகசம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X