Search
  • Follow NativePlanet
Share
» »சுற்றுலாவின் போது எப்படியெல்லாம் பணத்தை மிச்சம் பிடிக்கலாம் தெரியுமா?

சுற்றுலாவின் போது எப்படியெல்லாம் பணத்தை மிச்சம் பிடிக்கலாம் தெரியுமா?

By Naveen

தெரியாத இடங்களுக்கு புதிதாக சுற்றுலா செல்லும்போது நாம் நினைத்ததைக்காட்டிலும் பணம் அதிகம் செலவாகி தவித்த கதை நம் எல்லோரிடமும் ஒன்றாவது இருக்கும். எவ்வளவு கவனமாக திட்டமிட்டாலும் திடீர் செலவுகள் நம் பர்ஸை பதம் பார்த்துவிடும். சந்தோசமாக இருக்க சுற்றுலா சென்றுவிட்டு பண நெருக்கடியில் தவிப்பதை எப்படி தவிர்ப்பது?. மற்ற பல வழிகளிலும் எப்படியெல்லாம் சுற்றுலா செல்லும் போது பணத்தை சேமிக்க முடியும் என்றும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

எந்த நேரத்தில் செல்வது?

எந்த நேரத்தில் செல்வது?

பெரும்பாலும் பீக் சீசனில் பிரபலமான சுற்றுலாத்தலங்களுக்கு செல்வதை தவிர்த்து விடுங்கள். காரணம் அப்போது என்ன விலை சொன்னாலும் சுற்றுலாப்பயணிகள் வாங்கித்தான் ஆக வேண்டும் என்று தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்றவற்றில் அநியாய கட்டணம் வசூலிக்கப்படும்.

பீக் சீசனில் செல்லாம் வேறு எப்போது செல்வது என கேட்பவர்கள் பீக் சீசன் துவங்குவதற்கு இரண்டு வாரங்கள் முன்போ, பின்போ சென்றால் அந்த இடத்தை அனுபவத்த மாதிரியும் இருக்கும், செலவும் குறைவாக இருக்கும்.

fdecomite

விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நேரம்

விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் நேரம்

ஓரிடத்திற்கு விமானத்தில் தான் சுற்றுலா செல்லப்போவது என்று முடிவு செய்துவிட்டால் முடிந்த வரை மூன்று மாதங்களுக்கு முன்பே விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிடுங்கள்.

காரணம், பயணத்திற்கான நேரம் நெருங்க நெருங்க விமான டிக்கெட்டின் விலை அதிகரிக்கப்படும். இப்படி முன்னரே திட்டமிட்டு முன்பதிவு செய்வதன் மூலம் குறைந்தது சில ஆயிரங்களையாவது சேமிக்கலாம்.

Katie Lips

டூர் பேகேஜுகளை தேர்ந்தெடுங்கள்:

டூர் பேகேஜுகளை தேர்ந்தெடுங்கள்:

சாதரான டிராவல்ஸ் முதல் சர்வதேச அளவில் சுற்றுலா சேவைகளை வழங்கிவரும் நிறுவனங்கள் வரை முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு பல்வேறு விதமானடூர் பேகேஜுகளை வழங்கிவருகின்றன.

இப்படி டூர் பேகேஜுகளை தேர்ந்தெடுத்து செல்லும்போது ஹோட்டல் மற்றும் பயண கட்டணங்களில் 30% வரை தள்ளுபடி பெறமுடியும்.அலைச்சலும் குறையும்.

Moyan Brenn

ரயில்களில் செல்லாம்:

ரயில்களில் செல்லாம்:

நீங்கள் செல்லவிருக்கும் இடத்தை ஒன்று அல்லது ஒன்றரை நாளுக்குள் அடைந்துவிட முடியும் என்றால் விமானத்தில் செல்வதை தவிர்த்து ரயில்களில் செல்லுங்கள்.

4பேருக்கு மேல் சுற்றுலா செல்வதாக இருந்தால் இப்படி செய்வதன் மூலம் நிறைய சேமிக்க முடியும் என்பதோடு ரயில் பயணங்களின் போது இந்தியாவின் ஆன்மாவை கண்கூடாக பார்க்கும் வாய்ப்பையும் பெறலாம்.

காஸ்ட்லியான உணவுகளை தவிர்க்கலாமே:

காஸ்ட்லியான உணவுகளை தவிர்க்கலாமே:

சுற்றுலா வரும் இடத்தில் ஹோட்டலுக்கு சென்று விதவிதமான உணவுகளை ஒரு பிடிபிடிக்காமல் அளவாக அளவான விலையுள்ள ஹோட்டல்களில் சாப்பிடுங்கள்.

காரணம் பிரபலமான சுற்றுலாத்தலங்களில் சாதாரண ஹோட்டல்களில் கூட உணவுகள் மிக அதிக விலைக்கு தான் விற்கப்படும். பெரிய ஹோட்டல்களில் சொல்லவே வேண்டாம்.

Angie Torres

நாட்டுப்புறங்களுக்கு செல்லுங்கள்:

நாட்டுப்புறங்களுக்கு செல்லுங்கள்:

வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றால் அங்கிருக்கும் பிரபலமான சுற்றுலாத்தலங்களுக்கு மட்டுமே செல்லாமல் அந்நாட்டின் நாட்டுப்புற பகுதிகளுக்கும் சுற்றுலா செல்லுங்கள். செலவு குறைவு என்பதுடன் அந்நாட்டின் உண்மையான உணர்வை உணர இது உதவியாக இருக்கும்.

Zach Dischner

யோசனை சொல்லுங்களேன்...

யோசனை சொல்லுங்களேன்...

இதுபோல உங்களுக்கும் பிரபலமான சுற்றுலாத்தலங்களுக்கு சென்று அங்கே வித்தியாசமான வழிகளில் பணத்தை சேமித்திருக்கிறீர்களா?.

பிரபலமான இடங்களில் குறைந்த விலையில் சிறந்த சேவை அளிக்கும் ஹோட்டல்கள் பற்றி தெரியுமா?. அவற்றை கமன்ட் பகுதியில் பகிர்ந்திடுங்கள்.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X