Search
  • Follow NativePlanet
Share
» »இடுக்கி - இயற்கையின் கம்பீரப் புன்னகை!!!

இடுக்கி - இயற்கையின் கம்பீரப் புன்னகை!!!

By

பசுமையான அடர் வனங்களை ஆடையாக போர்த்திக்கொண்டு, வானை முட்டும் சிகரங்களை கிரீடங்களாக அணிந்துகொண்டு கடவுளின் சொந்த தேசமான கேரளாவில், அசத்தல் அழகோடு காட்சியளித்துக்கொண்டிருக்கிறது இடுக்கி மாவட்டம்.

அதுமட்டுமல்லாமல் உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றான ஆனமுடி சிகரம், உலகிலேயே 2-வது பெரிய வில்லணை ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட பெருமையுடன் உலக சுற்றுலாப் பயணிகளை கம்பீரமாக வரவேற்கிறது இடுக்கி.

இடுக்கி ஹோட்டல் டீல்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

இடுக்கி வில்லணை, குறிஞ்சிமலா சரணாலயம், ராமக்கல்மேடு, தொம்மன்குத்து அருவி, செறுதோணி அணை, குளமாவு உள்ளிட்ட இடங்கள் இடுக்கி மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

இடுக்கியின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Baiju Jose

இடுக்கி வில்லணை

இடுக்கி வில்லணை

உலகிலேயே 2-வது மிகப்பெரிய வில்லணையாக அறியப்படும் 'இடுக்கி வில்லணை', பெரியார் ஆற்றின் குறுக்கே, குருவமலை மற்றும் குறத்திமலை என்ற இரு மலைகளை இணைத்து அதி பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

மேலும்...

படகுச் சவாரி

படகுச் சவாரி

இடுக்கி வில்லணையில் படகுப் பயணம் செல்லும் அனுபவம் மிகவும் சிறப்பானதாகும். 5 நபர்கள் அமரும் வசதிகொண்ட படகில் 15 நிமிடங்கள் பயணம் செய்யலாம். இதற்காக 5 நபர்களுக்குமாக சேர்த்து 450 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

படம் : Rameshng

தொம்மன்குத்து அருவி

தொம்மன்குத்து அருவி

7 அடுக்கு நீர்வீழ்ச்சி என்ற பெயராலும் இந்த நீர்வீழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. படிக்கட்டுகள் போன்ற இந்த 7 பாறையடுக்குகளில் நீர் வழிந்தோடி வருவது பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இங்கு பாறையேற்றம், நடைபயணம், மலையேற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டு பயணிகள் பொழுதை கழிக்கலாம். இவை தவிர மிதமான பொழுதுபோக்குகளான படகுச்சவாரி, மீன்பிடித்தல் மற்றும் குதிரைச்சவாரி போன்றவற்றிலும் பயணிகள் இங்கு ஈடுபடலாம்.

படம் : Bimal K C

தொம்மன்குத்துவின் சுற்றுப்புறம்

தொம்மன்குத்துவின் சுற்றுப்புறம்

தொம்மன்குத்து அருவியின் சுற்றுப்புற பகுதி.

படம் : Dhruvaraj S

ராமக்கால்மேடு

ராமக்கால்மேடு

ராமக்கால்மேடு எனும் பெயருக்கு ராமபிரானின் பாதம் பட்ட மண் என்பது பொருளாகும். அதாவது சீதாதேவியை தேடி ராமர் இப்பகுதிக்கு வந்தபோது இந்த மலையில் அவர் காலடி பட்டதால் இம்மலைப்பகுதி ராமக்கால்மேடு என்ற பெயர் பெற்றதாக சொல்லப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த மலையிலிருந்து ஒரு புறம் கேரள பூமியின் வனப்பையும் மறு புறம் தமிழ்நாட்டின் எழிலையும் ரசிக்க முடிவதை இதன் சிறப்பம்சமாக சொல்லலாம்.

குறவன் குறத்தி சிலை

குறவன் குறத்தி சிலை

ராமக்கால்மேடு பகுதியில் உள்ள குறவன் குறத்தி சிலை.

படம்

செறுதோணி அணை

செறுதோணி அணை

இடுக்கி வில்லணைக்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த செறுதோணி அணை, வில்லணையைப் போலவே பிரபலமான சுற்றுலாத் தலமாகும்.

பைனாவு

பைனாவு

இடுக்கி அணை மற்றும் செறுதோணி அணை ஆகிய இரண்டு முக்கியமான அணைப்பகுதிகளும் இந்த இடத்திலிருந்து 7 கி.மீ தூரத்திலேயே உள்ளன. இனிமையான சூழல் மற்றும் ரம்மியமான இயற்கை எழில் போன்றவற்றுக்கு இந்த பைனாவு பிரசித்தி பெற்றுள்ளது

படம் : Prasad Pillai

குளமாவு

குளமாவு

குளமாவு நகரம் இடுக்கி மாவட்டத்திலுள்ள பிரசித்தமான மலைவாசஸ்தலங்களில் ஒன்றாகும். குளமாவு அணைக்கும், செறுதோணி அணைக்கும் இடையே படகுப்போக்குவரத்து மூலமாக உல்லாச சவாரி செய்யும் அனுபவம் அற்புதமானது.

படம் : Seb Powen

இரவிக்குளம் நேஷனல் பார்க்

இரவிக்குளம் நேஷனல் பார்க்

இரவிக்குளம் நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசியப்பூங்காவானது மூணார் மலைவாசஸ்தலத்தை ஒட்டி, மேற்குத்தொடர்ச்சி மலையில் 97 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த தேசியப்பூங்காவோடு சின்னார் வனப்பகுதி மற்றும் இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் போன்றவை இணைந்து ஒட்டுமொத்தமாக மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்பகுதியிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் பாதுகாப்பு சரகமாக விளங்குகின்றன. இந்த தேசியப்பூங்காவில் 26 வகையான பாலூட்டிகளும், 132 வகையான பறவை இனங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இனப்பெருக்க காலமான ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும், மழைக்காலத்திலும் இந்த பூங்காவுக்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

படம் : Sreeraj PS aka Ezhuttukari

ஆனமுடி

ஆனமுடி

தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி' இரவிக்குளம் தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் டிரெக்கிங் (மலையேற்றம்) செய்யலாம்.

படம் : Arunguy2002

ஆனயிறங்கல் நீர்த்தேக்கம்

ஆனயிறங்கல் நீர்த்தேக்கம்

ஆனயிறங்கல் எனும் சுற்றுலா ஸ்தலம் மூணாரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆனயிறங்கல் அணை மற்றும் ஏரிப்பகுதியில் யானைகள் கூட்டமாக வந்து நீர் அருந்தும் காட்சியை பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள டாட்டா நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலைத்தோட்டத்தில் பயணிகள் நடந்து ரசிக்க அனுமதிக்கப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும். பொத்தன்மேடு சுற்றுலா ஸ்தலமும் இங்கு அருகிலேயே உள்ளதால் இந்த இரண்டு இடங்களையும் ஒரே பயணத்தில் முடித்துவிடுவது சிறந்தது. மேலும் தங்கி ஓய்வெடுத்து ரசிப்பதற்கேற்றவாறு இங்கு பல ரிசார்ட் விடுதிகள் அமையப்பெற்றுள்ளன.

படம் : Rameshng

பீர்மேடு

பீர்மேடு

பீர்மேடு மலைவாசஸ்தலம் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகள், அழகிய அருவிகள், பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களுடன் இயற்கை காதலர்களின் விருப்பமான சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. எனவே நீங்கள் சுற்றுலா வரும்போது தேயிலை, ஏலக்காய், ரப்பர் மற்றும் காப்பி தோட்டங்கள் மலைக்குன்றுகளில் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து பிரம்மாண்டமாக காட்சியளிப்பதை பார்த்து ரசிக்கலாம். இவைதவிர பெரியார் புலிகள் பாதுகாப்பு காடுகளுக்கும் சென்று வரலாம். இந்த மலைவாசஸ்தலம் கோட்டயம் நகருக்கு கிழக்கே 75 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

ஹில் வியூ பார்க்

ஹில் வியூ பார்க்

இடுக்கியிலிருந்து 1.5 கி.மீ தூரத்திலேயே இந்த ஹில் வியூ பார்க் அமைந்துள்ளது. 8 ஏக்கர் பரப்பளவில் ஒரு மலைப்பாறைத் திட்டின்மீது இந்த பூங்கா காணப்படுகிறது. இயற்கையாகவே உருவாகிய ஒரு ஏரி ஒன்றும் இதனுள்ளே எழிலைக்கூட்டும் விதத்தில் காட்சியளிக்கிறது.

படம் : Rameshng

கல்வாரி மலை

கல்வாரி மலை

இடுக்கியிலிருந்து 5 கி.மீ தூரத்தில் கட்டப்பனா - இடுக்கி சாலையில் கல்வாரி மலை அமைந்துள்ளது. கல்வாரி மலை மீதிருந்து அருகில் காணப்படும் எல்லா இயற்கைக்காட்சிகளையும் பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்கலாம். இங்கிருந்து ஒரு கோணத்தில் பார்த்தால் இடுக்கி அணையையும் ஐயப்பன் கோயிலையும் பார்க்க முடிகிறது.

படம் : Rameshng

தூவானம் அருவி

தூவானம் அருவி

இடுக்கி மாவட்டத்தில் உள்ள மரயூர் எனும் அழகிய சிறு கிராமத்தில் தூவானம் அருவி அமைந்துள்ளது.

படம் : Ajith U

தொலைதூரத் தோற்றம்

தொலைதூரத் தோற்றம்

தூவானம் அருவியின் தொலைதூரத் தோற்றம்.

படம் : Dhruvaraj S

தொடுபுழாவிலிருந்து...

தொடுபுழாவிலிருந்து...

இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழாவிலிருந்து இடுக்கி செல்லும் வழி.

படம் : green umbrella

கல்லார்குட்டி அணை

கல்லார்குட்டி அணை

இடுக்கியிலிருந்து 19 கி.மீ தொலைவில் கல்லார்குட்டி அணை அமைந்துள்ளது.

படம் : Balachand

எங்கு தங்குவது?

எங்கு தங்குவது?

இடுக்கி ஹோட்டல் டீல்கள் : http://bit.ly/1pwbuV5

படம் : manu sankerms

இடுக்கியை எப்போது மற்றும் எப்படி அடைவது?

இடுக்கியை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Vinayaraj

Read more about: இடுக்கி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X