Search
  • Follow NativePlanet
Share
» »இங்கே கிளிக் செய்யுங்கள்...புதையல் திறக்கப்படும் !!

இங்கே கிளிக் செய்யுங்கள்...புதையல் திறக்கப்படும் !!

இந்தியா என்னும் இந்த உன்னதமான தேசத்தை முழுமையாக சுற்றிப்பார்க்க ஒரு ஆயுள் நிச்சயம் போதாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எத்தனையோ விதமான கலாச்சாரங்கள், எண்ணிலடங்கா மனிதர்கள், அற்புதமான இயற்கை காட்சிகள், மதிப்பிடமுடியாத வரலாற்று பொக்கிஷங்கள் என புதுமையை தேடுவோரின் புதையலாக இந்தியா இருக்கிறது.

அபப்டிப்பட்ட சிறப்புவாய்ந்த இந்த இந்திய நாட்டின் சில அற்புதமான பயண புகைப்படங்களை கண்டு மகிழ்வோம் வாருங்கள்.

சன்ஸ்கர் :

சன்ஸ்கர் :

ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் எந்த அடிப்படை வசதிகளுமே இல்லாத கிராமத்தில் தன் கால்நடைகளுக்கான தீவனத்தை சுமந்து செல்லும் ஒரு பெண்.

sandeepachetan.com travel photography

சன்ச்கர் :

சன்ச்கர் :

லடாக் பகுதிக்கு அருகில் இருக்கும் நகரமான சன்ச்கர் நகரில் இருக்கும் பழமையான ஒரு வீடு.

sandeepachetan.com travel photography

அமர்நாத் யாத்திரை :

அமர்நாத் யாத்திரை :

அமர்நாத் யாத்திரைக்காக வந்திருக்கும் மிகவும் உடல் பருமனான ஒருவரை நான்கு பேர் உயரமான மலைப்பாதையில் தூக்கி செல்கின்றனர்.

sandeepachetan.com travel photography

இயற்கையின் எல்லையில்லா அழகு :

இயற்கையின் எல்லையில்லா அழகு :

இந்தியாவில் இருக்கும் அற்புதமான சுற்றுலாத்தலங்களில் ஒன்றான லடாக்கில் இருக்கும் சோ மோரிரி என்ற அற்புதமான ஏரியின் புகைப்படம். லடாக்கின் தலைநகரான லேஹ்வில் இருந்து வெகுதொலைவில் இருப்பதால் அதிகளவில் இங்கு சுற்றுலாப்பயணிகள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

sandeepachetan.com travel photography

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

சூரியனும், மழையும் தாஜ்மஹாலுடன் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கின்றன.

sandeepachetan.com travel photography

துறவிகள் ! :

துறவிகள் ! :

சன்ச்கரில் உள்ள புக்தல் புத்த மடாலயத்தில் மதிய உணவுக்காக காத்திருக்கும் பௌத்த துறவிகள். வெளி உலகுடன் கிட்டத்தட்ட முற்றிலுமே தொடர்பற்ற இடமாக இந்த மடாலயம் இருக்கிறது.

sandeepachetan.com travel photography

பரபரப்பான சந்தை :

பரபரப்பான சந்தை :

அதிகாலை பரபரப்பில் இருக்கும் மும்பை மீன் சந்தை.

sandeepachetan.com travel photography

பக்தி :

பக்தி :

ஹிந்து நம்பிக்கையின் ஆதி கடவுளான சிவ பெருமானின் வசிப்பிடமாக கருதப்படும் அமர்நாத் பனி கோயிலுக்கு தன் கைகளை கொண்டே நடந்து செல்லும் ஒரு யாத்ரீகர்.

sandeepachetan.com travel photography

பீமாஷங்கர் :

பீமாஷங்கர் :

மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள பீமாஷங்கர் என்ற இடம் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அதே சமயம் இயற்கை அழகு நிறைந்த ஓரிடமாகும். இங்கு தான் இந்தியாவில் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்று அமைந்திருக்கிறது.

sandeepachetan.com travel photography

காத்திருப்பு ! :

காத்திருப்பு ! :

கையில் துப்பாக்கியுடன் இரண்டு காவலர்கள் காத்திருக்க அவர்களுக்காக தோசை சுட்டுக்கொண்டிருக்கும் சிறுவன். இது நிகழ்ந்த இடம் வாரணாசி ஆகும்.

Lyle Vincent

குழந்தைகளும் தகப்பனும் :

குழந்தைகளும் தகப்பனும் :

கோயில்களின் நகரமான காஞ்சீபுரத்தில் பாகன் நடுவே அமர்ந்திருக்க கால்களில் விலங்குகள் ஏதும் இன்றி அலங்காரத்துடன் ஒய்யாரமாக நிற்கும் யானைகள்.

McKay Savage

குமரி :

குமரி :

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் இருக்கும் வள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும்.

Nithi Anand

படகு பயணம் :

படகு பயணம் :

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏரிகளின் மாவட்டம் என்று அழைக்கப்படும் நைனித்தலில் ரம்யமானதொரு மாலைப்பொழுதில் படகு பயணம் சுற்றுலாப்பயணிகள். வார இறுதி விடுமுறைகளை கொண்டாட சிறப்பான இடங்களில் ஒன்றாக இது சொல்லப்படுகிறது.

sandeepachetan.com travel photography

அதிரப்பள்ளி அருவி :

அதிரப்பள்ளி அருவி :

கேரள மாநிலத்தில் உள்ள திரிச்சூர் மாவட்டத்தில் இருக்கிறது பிரமாண்டமான இந்த அதிரப்பள்ளி அருவி. புன்னகை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் வெளி உலகிற்கு பிரபலமான காரணத்தால் 'புன்னகை மன்னன்' அருவி என்றும் இது அழைக்கப்படுகிறது.

Mehul Antani

கர்நாடகாவில் திபெத்தியர்கள் ! :

கர்நாடகாவில் திபெத்தியர்கள் ! :

காஷ்மீர் மற்றும் இந்திய திபெத் எல்லைகளை தாண்டி பௌத்தர்கள் இந்தியாவில் அதிகம் வசிக்கும் இடம் கர்நாடக மாநிலத்தில் கூர்க் நகருக்கு அருகில் அமைந்திருக்கும் பைலகுப்பே ஆகும். கிட்டத்தட்ட 70,000 க்கும் அதிகமான திபெத்திய பௌத்தர்கள் இங்கே வசிக்கின்றனர். இங்குள்ள பைலகுப்பே தங்க புத்த கோயிலில் கல்வி கற்கும் மாணவர்கள்.

sandeepachetan.com travel photography

காதலின் அடையாளம் :

காதலின் அடையாளம் :

காதலின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் தாஜ்மஹால் என்னும் உன்னத கலைப்படைப்பை காண வருடத்தின் எல்லா நாட்களும் உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் வந்தவண்ணம் இருக்கின்றனர்.

sandeepachetan.com travel photography

பக்தி பெரியது ! :

பக்தி பெரியது ! :

தாஜ்மஹால் என்னும் உன்னதத்தை கட்டிய ஷாஹ் ஜகான் என்ற முகலாய பேரரசனால் கட்டப்பட்ட மற்றுமொரு அற்புத படைப்பு இந்தியாவின் மிகப்பெரிய மசூதியும், ஆசியாவின் ஒன்பதாவது மிகப்பெரிய மசூதியுமான 'ஜம்மா மசூதி' ஆகும். புதுதில்லியின் சிறந்த கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக இந்த மசூதி திகழ்கிறது.

M M

குதுப் :

குதுப் :

தில்லியில் இருக்கும் பழைமையான கட்டிடங்களில் ஒன்றான குதுப் மினார் தூணில் பொறிக்கப்பட்டுள்ள குரான் வாசகங்கள் .

sandeepachetan.com travel photography

இரண்டாவது குளிரான இடம் ! :

இரண்டாவது குளிரான இடம் ! :

சைபீரியாவுக்கும் பிறகு மனிதன் வசிக்கும் உலகின் இரண்டாவது மிகக்குளிரான இடம் காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மாவட்டத்தில் உள்ள 'டிராஸ்' என்ற நகரமாகும். குளிர் இல்லாத கோடை காலத்தில் சென்றால் சற்றும் மாசுபடாத இந்த இடத்தின் இயற்கை பேரழகை கண்டு லயிக்கலாம்.

sandeepachetan.com travel photography

ரங்கோலி !!:

ரங்கோலி !!:

விநாயகர் சதுர்த்தியை வரவேற்கும் விதமாக ஆண்களும் பெண்களும் இணைந்து பிரமாண்டமான ரங்கோலி கோலமிடுகின்றனர்.

sandeepachetan.com travel photography

சுதந்திரம் !! :

சுதந்திரம் !! :

சன்ஸ்கர் பள்ளத்தாக்கில் சுதத்திரமாக சுற்றித்திரியும் குதிரை.

sandeepachetan.com travel photograph

ராஜ உலா :

ராஜ உலா :

கோட்டைகளுக்கு புகழ்பெற்ற இடமான ராஜஸ்தானில் யானைகளின் மீது அமர்ந்தபடி அம்பர் கோட்டையை சுற்றிப்பார்க்கும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள்.

sandeepachetan.com travel photography

அந்தப்புரம் :

அந்தப்புரம் :

'கணேஷ்போல்' என்றழைக்கப்படும் ஜெய்பூர் மகாராஜாவின் அந்தப்புரத்தின் அலங்காரமிக்க நுழைவு வாயில்.

sandeepachetan.com travel photography

கணபதி பாபா மோரியா !!:

கணபதி பாபா மோரியா !!:

மும்பை நகரில் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு பகுதியாக ஆற்றில் கரைக்கப்படுவதர்க்காக கொண்டுவரபப்டும் விநாயகர் சிலை.

sandeepachetan.com travel photograph

உரியடி !:

உரியடி !:

மும்பையில் நடக்கும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உரியடி செய்வதற்காக மனித கோபுரம் அமைக்கும் முயற்சியில் இருக்கும் இளைஞர்கள்.

sandeepachetan.com travel photography

கனவுப்பயணம் !:

கனவுப்பயணம் !:

இந்தியாவில் பேரழகு நிறைந்திருக்கும் அற்புதமான சாலைகளில் ஒன்றான லெஹ் - மணாலி சாலையில் பயணிக்கும் இருவர்.

sandeepachetan.com travel photography

மலர் குளத்தின் நடுவே மாளிகை:

மலர் குளத்தின் நடுவே மாளிகை:

கிழக்கின் வெனிஸ் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் உதய்பூர் நகரில் மன் சாகர் என்ற செயற்கை ஏரிக்கு நடுவே கட்டப்பட்டுள்ள எழில்மிகு மாளிகை.

Chris JL

ஐஸ் வண்டிக்காரர் :

ஐஸ் வண்டிக்காரர் :

சென்னை மரீனா கடற்கரையில் அந்திசாயும் நேரத்தில் குழந்தைகளுக்காக காத்திருக்கும் ஐஸ் வண்டிக்காரர்.

Vinoth Chandar

கங்கா ஆரத்தி :

கங்கா ஆரத்தி :

கங்கா ஆரத்திக்கு தயாராக இருக்கும் காசியின் படித்துரை.

Christopher Michel

கங்கா ஆரத்தி :

கங்கா ஆரத்தி :

சீறிவரும் ஜல்லிக்கட்டு காளையை அதன் திமிலை பிடித்து அடக்க துணியும் வீரர்.

Vinoth Chandar

Read more about: amarnath varanasi kerala ladak
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X