Search
  • Follow NativePlanet
Share
» »இந்திய சுதந்திர போராட்டத்தில் தியாகிகளின் ரத்தம் படிந்த இரண்டு இடங்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

இந்திய சுதந்திர போராட்டத்தில் தியாகிகளின் ரத்தம் படிந்த இரண்டு இடங்களை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

இந்திய தேசத்தின் 69ஆவது சுதந்திர தினவிழா நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இருப்பதை எல்லாம் சுரண்டி விட்டு உங்களால் ஒரு குண்டூசி கூட சொந்தமாக தயாரிக்க முடியாது என்று வெள்ளைக்காரன் சொல்லிவிட்டு சென்றான். அவன் நாட்டு செயற்கைகோள்களை அனுப்ப நம்மிடம் உதவி கேட்கிறான். ஒரே இன, ஒரே மொழி மட்டுமே பேசும் மக்கள் வாழும் நாடுகளே போரின் கோரப்பிடிகளில் இருக்கும் போது ஆயிரம் வெவ்வேறு மொழிகள் பேசும், வெவ்வேறு இன, பொருளாதார பின்னையுடைய மக்கள் வாழும் இத்திருநாடு அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் சம்பவங்களை தவிர்த்து தன்னளவில் அமைதிபூங்காவாகே இருந்து வருகிறது.

இன்று நாம் பேறுவகையுடன் சுதந்திரமாக, கம்பீரமாக நடைபோட நம் முன்னோர்கள் செய்த தியாகங்கள் ஏராளம். அந்த தியாகங்களை முழுமையாக உணர்ந்துகொள்ள இந்திய சுதந்திர போராட்டத்தின் அழிக்க முடியாத அங்கமாகிப்போன சில இடங்களுக்கு சென்று வரலாம் வாருங்கள்.

ஜாலியன் வாலாபாக் :

ஜாலியன் வாலாபாக் :

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் நடந்த ஆகப்பெரிய திட்டமிட்ட படுகொலை நிகழ்ந்தேறிய இடம் தான் இந்த ஜாலியன் வாலாபாக் பூங்காவாகும்.

பெண்கள், குழந்தைகள் என இங்கு திரண்டிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் எவ்வித இரக்கமும் இன்றி இங்கே சுட்டக் கொல்லப்பட்டனர்.

ஜாலியன் வாலாபாக் :

ஜாலியன் வாலாபாக் :

1919ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் தலைநகரான அமிர்தசரசில் இருக்கும் ஜாலியன் வாலாபாக் என்ற பூங்காவில் பஞ்சாபி புத்தாண்டு திருவிழாவான 'வைசாகி' என்ற பண்டிகையை கொண்டாடவும், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் நிகழ்த்திவரும் கொடுமைகளுக்கு எதிராக அமைதி வழியில் போராடவும் கூடியிருந்த ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் ஜெனரல் ஒ.டயர் என்பவரின் உத்தரவின் பேரில் குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டனர்.

Sivashankar96

ஜாலியன் வாலாபாக் :

ஜாலியன் வாலாபாக் :

இந்த பூங்காவில் கூட்டம் நடைபெற்ற ஏப்ரல் 13ஆம் தேதி காலையில் அப்போதைய பஞ்சாப் மாகாணத்தின் புதிய காவல் ஆணையராக பதவியேற்றிருந்த 'டயர்' என்பவரால் மக்கள் எந்த இடத்திலும் கூட்டம் போடக்கூடாது, ஊர்வலம் போன்றவை நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 ஜாலியன் வாலாபாக் :

ஜாலியன் வாலாபாக் :

டயர் பிறப்பித்த உத்தரவு பற்றி எதுவும் அறிந்திராத ஏராளமான மக்கள் இந்த பூங்காவில் கூடி புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதை பற்றிய தகவலறிந்த டயர் ஐம்பது கூர்க்கா துப்பாக்கி வீரர்களுடன் சென்று குறுகலான ஜாலியன்வாலாபாக் பூங்காவின் கதவுகளை அடைத்து நின்றனர்.

 ஜாலியன் வாலாபாக் :

ஜாலியன் வாலாபாக் :

அதன் பின்னர் ஜெனரல்.டயரின் உத்தரவின் படி ஐம்பது துப்பாக்கி வீரர்களும் தங்களிடம் இருக்கும் குண்டுகள் தீரும் வரை மக்களை சுட்டுக்கொன்றனர்.

பத்து நிமிடங்கள் நீடித்த இந்த துப்பாக்கி சூட்டின் முடிவில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். ஆயிரத்தி ஐநூறுக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்திருந்தனர்.

 ஜாலியன் வாலாபாக் :

ஜாலியன் வாலாபாக் :

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் கோரமான சம்பவம் அரங்கேறிய இந்த ஜாலியன்வாலாபாக் பூங்காவில் இன்றும் அந்த துப்பாக்கி சூட்டின் தடயங்கள் பாதுக்காப்படுகின்றன.

என்றேனும் ஒருமுறை பஞ்சாப் சென்றால் கட்டாயம் இந்த பூங்காவுக்கு சென்று வாருங்கள்.

 ஜாலியன் வாலாபாக் :

ஜாலியன் வாலாபாக் :

ஜாலியன்வாலாபாக் பூங்காவை அடைவதற்கான மிக குறுகலான வழி.

 ஜாலியன் வாலாபாக் :

ஜாலியன் வாலாபாக் :

படுகொலை சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்கு பிறகு எடுக்கப்பட்ட ஜாலியன்வாலாபாக் பூங்காவின் அரிய புகைப்படம்.

 ஜாலியன் வாலாபாக் :

ஜாலியன் வாலாபாக் :

ஜாலியன்வாலாபாக் பூங்காவின் இன்றைய தோற்றம்.

இந்த பூங்காவை பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் தெரிந்துகொள்ளுங்கள்.

காலாபாணி சிறைச்சாலை :

காலாபாணி சிறைச்சாலை :

இந்திய சுதந்திர போராட்டத்தின் கொடூரமான நினைவுகளை தாங்கி நிற்கும் மற்றொரு இடம் வங்கப்பெருங்கடலில் உள்ள அந்தமான் நிகோபார் தீவில் இருக்கும் காலாபாணி சிறைச்சாலை ஆகும்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடிய அனேக சுதந்திர போராட்ட வீரர்கள் இந்திய பெருநிலப்பரப்பில் இருந்து நாடு கடத்தப்பட்டு கொடுமையான இந்த சிறையில் வைத்து வதைக்கப்பட்டனர்.

காலாபாணி சிறைச்சாலை :

காலாபாணி சிறைச்சாலை :

1896ஆம் ஆண்டு துவங்கி 1906 ஆம் ஆண்டு வரை பத்து ஆண்டுகள் இந்த சிறையின் கட்டுமான பணிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த சிறையை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை கொண்டே பிரிட்டிஷ் அரசாங்கம் கட்டியிருக்கிறது.

கடும் மழையினாலும், விஷப்பாம்புகளின் கடியாலும், மலேரியா, காலரா போன்ற தொற்று நோய்களாலும் ஆயிரக்கணக்கான கைதிகள் இந்த சிறையின் கட்டுமான பணியின் போது இறந்திருக்கின்றனர்.

காலாபாணி சிறைச்சாலை :

காலாபாணி சிறைச்சாலை :

பர்மாவில் இருந்து வரவழைக்கப்பட்ட செங்கற்கள், மரங்களை கொண்டு ஏழு பிரிவுகளாக இந்த சிறை வளாகம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த வளாகத்தில் மொத்தம் 693 அறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு சிறை அறையும் மிகக்குறுகலாக, கைதிகளை தனிமையில் அடைத்து சித்தரவதை செய்வதற்கு உகந்த வகையில் ஒரே ஒருவரை மட்டும் அடைக்கும் அளவுக்கு சிறியதாக கட்டப்பட்டிருக்கின்றன.

காலாபாணி சிறைச்சாலை :

காலாபாணி சிறைச்சாலை :

இந்த சிறையில் இந்திய சுதந்திர போராட்ட வீரரும், பின்னாளில் மகாத்மா காந்தியின் படுகொலையில் குற்றவாளியாக தேடப்பட்ட வீர் சாவர்கர், பஞ்சாப் வீரனான பகத் சிங்கின் கூட்டாளியான மகாவீர் சிங் போன்றவர்கள் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.

காலாபாணி சிறைச்சாலை :

காலாபாணி சிறைச்சாலை :

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு சுதந்திர போராட்டத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் மத்திய அரசின் சுற்றுலாத்துரையினால் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

காலாபாணி சிறைச்சாலை :

காலாபாணி சிறைச்சாலை :

அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட்பிளேரில் அமைந்திருக்கும் இந்த சிறைச்சாலையில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக சுற்றுலாப்பயணிகள் இங்கு அனுமதிக்கப்படும் நாட்களில் ஒலி - ஒளி நிகழ்ச்சியும், ஆவணப்பட திரையிடலும் நடக்கிறது.

காலாபாணி சிறைச்சாலை :

காலாபாணி சிறைச்சாலை :

இந்த இடத்தில் தான் நூற்றுக்கும் மேற்ப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் நமது சுதந்திரத்துக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்திருக்கின்றனர்.

இந்த சிறைச்சாலை அமைந்திருக்கும் போர்ட் பிளேர் நகரை பற்றிய மேலும் பல தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

அனைவருக்கும் தமிழ் நேடிவ் பிளானட் தளத்தின் சார்பாக இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.

Read more about: amritsar punjab andaman port blair
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X