Search
  • Follow NativePlanet
Share
» »வாழ்நாளில் நாம் ஒரு முறையாவது இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்க வேண்டும். ஏன் தெரியுமா ?

வாழ்நாளில் நாம் ஒரு முறையாவது இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்க வேண்டும். ஏன் தெரியுமா ?

ஐரோப்பாவில் மனிதர்கள் எல்லோரும் மிருகங்களுக்கு இணையாக காட்டில் வசித்து கொண்டிருந்த போது, இருபெரும் அமெரிக்க கண்டங்களின் இருப்பையே மனித இனம் அறியாத போது, ஆப்ரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் பழங்குடிகள் வேட்டையாடி புசித்து, இலைகளை கொண்டு குடிசை வேய பழகிக்கொண்டிருந்த போது கங்கைக்கரையில் திரிகோணம விதி கற்பிக்கப்பட்டது, தெற்கே கம்பனும், வள்ளுவனும் இன் மொழி கொண்டு இலக்கியமும், மனிதர் எல்லோருக்குமான நன்னெறியும் வகுத்துக்கொண்டிருந்தனர், எகிப்திய பிரமிடுகளுக்கு இணையான கணித நுட்பத்துடன் வான் முட்டும் கோபுரங்கள் கட்டி ஆன்மீகமும், அறிவியலும் வளர்த்த நாடு 'இந்தியா'. அப்படிப்பட்ட இந்திய நாட்டினுள் பயணிப்பது நம் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும். அது எப்படி என்று இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

டிராவல் குரு தளத்தில் ஹோட்டல் கட்டணங்களில் 40% தள்ளுபை பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

வியப்பூட்டும் கட்டிடக்கலை :

வியப்பூட்டும் கட்டிடக்கலை :

வளர்ந்து வரும் இந்த நவீன யுகத்தில் கட்டிடங்கள் கட்டுவதில் ஏராளமான புதுமைகளை நாம் தினமும் காண்கிறோம். விண்ணை முட்டும் கட்டிடங்கள், கோடிகளை கொட்டி நினைத்து கூட பார்க்க முடியாத அளவு ஆடம்பர வசதிகள் என இக்கால கட்டிடங்களுக்கு எதுவும் இணையாகாது என நாம் நினைத்திருந்தால் இந்தியாவில் பயணம் மேற்கொள்கையில் அந்த எண்ணம் நிச்சயம் மாறும். அந்த அளவுக்கு அழகியலும், அறிவியலும் இணைந்த அற்புதமான கட்டிடங்களை இந்தியா முழுமைக்கும் நாம் காண முடியும்.

Photo: Flickr

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

இந்தியாவின் பெருமையை உலகுக்கு உணர்த்திய உன்னத கட்டிடங்களில் தாஜ் மஹால் முதன்மையானது. பெரும் பொருட்செலவில் இருபதாயிரம் கலைஞர்கள் இருபத்திரண்டு ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய இந்த கட்டிடத்திற்கு நிகரான ஒன்றை இன்றைய நவீன அறிவியல் யுகத்தில் எவராலும் கட்ட முடியவே இல்லை. ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் பேரழகுடன் வீற்றிருக்கும் இந்த கட்டிடத்தை நிச்சயம் சென்று பார்த்து ரசித்திட வேண்டும்.

Photo: Flickr

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

11ம் நூற்றாண்டிலிருந்தே ஆக்ரா நகரம் பற்றிய வரலாற்றுக்குறிப்புகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. இந்த புராதன நகரம் தனது நெடிய வரலாற்றில் பல ராஜவம்சங்களின் ஆட்சிக்குள் மாறி மாறி இருந்து வந்திருக்கிறது. எனவே ஒரு கலவையான கலாச்சாரம் இந்நகரத்தின் பாரம்பரியமாக வேரூன்றியிருக்கிறது.

Photo: Flickr

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

டெல்லிக்கு அருகிலேயே இருப்பதால் டெல்லிக்கு விஜயம் செய்பவர்கள் ஒரு நாள் விரைவுச்சுற்றுலாப்பயணமாக இந்த ஆக்ரா நகரத்துக்கு வந்து செல்கின்றனர்.
இருப்பினும் தாஜ் மஹாலோடு ஆக்ராவின் இதர முக்கியமான அம்சங்களையும் தரிசிக்க நினைக்கும் பயணிகளுக்கான தங்கும் வசதிகள் இங்கு நிறையவே உள்ளன. தனிச்சுற்றுலாவாக செல்வதற்கு ஆக்ராவிற்கு அருகிலேயே ஃபதேபூர் சிக்ரி மற்றும் மதுரா போன்ற இடங்கள் உள்ளன.

Photo: Flickr

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

யமுனை ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. அக்பரின் கல்லறை மாளிகையும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்றாகும். சினி கா ரௌஜா, திவான் இ ஆம், திவான் இ காஸ் ஆகிய கட்டமைப்புகள் முகலாயர் காலத்து மேன்மையை பிரதிபலிக்கின்றன.

Photo: Flickr

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

ஆக்ரா நகரை பற்றிய மேலதிக விவரங்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்

தாஜ் மஹால் :

தாஜ் மஹால் :

நீரில் பிரதிபலிக்கும் அழகிய தாஜ் மஹால்.

Photo: Flickr

தஞ்சை பெரிய கோயில் :

தஞ்சை பெரிய கோயில் :

வட இந்தியாவில் தாஜ் மஹால் என்றால் தென் இந்தியாவில் அதற்கு நிகரான ஒரு கட்டிடம் தஞ்சை பெரிய கோயிலாகும். சோழ மாமன்னன் ராஜராஜ சோழனால் 1010ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். தாஜ் மகாலை காட்டிலும் 500 வருடங்கள் பழமையானது. எந்த வித தொழில்நுட்பங்களின் உதவியும் இல்லாமலேயே டன் கணக்கான எடையுள்ள கற்களை பல மீட்டர் உயரத்திற்கு கொண்டு சென்று விமான கோபுரத்தை அமைத்துள்ளனர். அதே போன்று இந்த கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட மிகப்பெரிய நந்தியும் உள்ளது.

Photo: Flickr

தஞ்சை பெரிய கோயில் :

தஞ்சை பெரிய கோயில் :

அது மட்டும் இல்லாமல் இக்கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மற்றும் கோயில் கட்டும் பணிக்கு நன்கொடை அளித்த அனைவரது பெயரும் கோயிலை சுற்றியுள்ள சுவர்களில் பொறிக்கப்பட்டுள்ளன. ஆயிரம் வருடங்களை கடந்தும் அதே கம்பீரத்துடன் வீற்றிருக்கும் இந்த கோயில் பழங்கால இந்தியாவை புரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்களில் முதன்மையானது.

Photo: Flickr

தஞ்சை பெரிய கோயில் :

தஞ்சை பெரிய கோயில் :

தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட நந்தி சிலை.

Photo: Flickr

தஞ்சை பெரிய கோயில் :

தஞ்சை பெரிய கோயில் :

தன் குருவுக்கு பின் ராஜ ராஜ சோழன் பணிவுடன் நிற்பது போன்று வரையப்பட்ட ஓவியம் தஞ்சை பெரிய கோயிலில் பல நூற்றாண்டுகள் கழித்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Photo: Flickr

சுவையான உணவுகள் :

சுவையான உணவுகள் :

இந்தியாவில் விளைந்த மிளகு மற்றும் இதர நறுமண தானியங்களுக்கான தேடலே இந்தியாவிற்கும் மேற்குலக நாடுகளுக்கும் தொடர்பு ஏற்பட காரணம் எனலாம். இந்தியாவை பற்றி பேசும் போதோ அல்லது இந்தியாவில் பயணிக்கும் போதோ நாம் தவிர்த்துவிட முடியாத முக்கிய அம்சம் இந்திய உணவுகள். சமீபத்தில் அமெரிக்காவில் வெளியான ஆராய்ச்சி முடிவுகள் படி உலகின் மிக சுவையான உணவுகளாக இந்திய உணவுகள் தேர்ந்தேடுக்கப்பட்டிருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சரி, அப்படி இந்திய உணவுகளில் என்னதான் சிறப்பு? தெரிந்துகொள்ள அடுத்த பக்கத்திற்கு வாருங்கள்.

Photo: Flickr

நாவூறும் சுவை :

நாவூறும் சுவை :

இந்தியாவில் ஒவ்வொரு பகுதியிலும் அப்பகுதிக்கென தனித்துவமான சுவையுடைய உணவுகள் இருக்கின்றன. உதாரணமாக லக்னோ நகரில் புலாவ் வகை உணவுகள், ஆலப்புழாவில் கரி மீன், ராஜஸ்தானில் செம்மறி ஆட்டுகுழம்பு, செட்டிநாட்டு நாட்டுக்கோழி வறுவல் போன்றவை அந்தந்த பகுதிகளில் மட்டுமே கிடைக்கும் அதி சுவையான உணவுகள் ஆகும். இந்த உணவுகளை ஒருமுறை சுவைத்திடவாவது இந்தியா முழுக்க பயணிக்க வேண்டும்.

photo: Flickr

நாவூறும் சுவை :

நாவூறும் சுவை :

ஹைதராபாத் பிரியாணி இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பெரும்பாலும் அசைவப் பிரியர்கள் அனைவராலும் ஹைதராபாத் பிரியாணி விரும்பப்படுகிறது. இந்திய சமையல் பாணியின் அங்கமாகக் கருதப்படும் ஹைதராபாத் பிரியாணி முன்பு நிஜாம் அரண்மனை சமையலறையில் மீன், காடை, இறால், மான் மற்றும் முயல் உட்பட 49 வகைகளில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரியாணி உலகப் பிரபலம் என்பதால் இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் ஹைதராபாத் பிரியாணி உணவகங்களை பார்க்க முடிகிறது.

Photo: Flickr

நாவூறும் சுவை :

நாவூறும் சுவை :

தலச்சேரி பிரியாணி கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரி பகுதியில் பிரபலமாக அறியப்படும் தலச்சேரி பிரியாணி மலபார் பிரியாணி, கோழிக்கோடு பிரியாணி, கண்ணூர் பிரியாணி, கேரளா பிரியாணி என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த பிரியாணி தலச்சேரி மட்டுமல்லாமல் கேரளாவின் பிற பகுதிகளான மலப்புரம், காசர்கோட், கோழிக்கோடு ஆகிய மலபார் பகுதிகளிலும் பிரபலம்.

Photo: Flickr

நாவூறும் சுவை :

நாவூறும் சுவை :

லக்னோ அவதி பிரியாணி :

லக்னோவுக்கும், பிரியாணிக்கும் எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு இருந்துகொண்டே இருக்கிறது. அதாவது பிரியாணி வகைகளில் லக்னோ பிரியாணிதான் முதலாவகதாக உருவானது என்று நம்பப்படுகிறது. லக்னோ மற்றும் ஒரு சில உத்தரப் பிரதேச பகுதிகளில் பேசப்படும் அவதி மொழியிலிருந்து அவதி பிரியாணி எனப் இந்த பிரியாணிக்கு பெயர் வந்தது. இது புக்கா பிரியாணி என்று பெயராலும் அழைக்கப்படுகிறது. இந்த பிரியாணியை தவிர லக்னோ கபாப் இந்தியா முழுவதும் பிரபலம்.

Photo: Flickr

மிரள வைக்கும் சாகசங்கள் :

மிரள வைக்கும் சாகசங்கள் :

சாகசங்கள் இல்லாத எதுவுமே சீக்கிரம் அலுத்து விடும். பயணங்களும் அப்படித்தான். இனிமையானவையாக கொண்டாட்டம் மிக்கவையாக மட்டும் இல்லாமல் சவால் மிகுந்ததாகவும் பயணங்கள் அமையும் போது தான் அவை புதுமையான அனுபவத்தை தருவதாக, என்றென்றைக்கும் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். சரி, இந்தியாவில் அப்படிப்பட்ட சாகச பயணங்கள் என்னென்ன தெரியுமா ?

Photo: Flickr

உறைந்த சன்ச்கர் நதியில் நடைபயணம் :

உறைந்த சன்ச்கர் நதியில் நடைபயணம் :

இந்தியாவில் இருக்கும் மிக அபாயகரமான சாகச பயணங்களில் ஒன்றாக சொல்லப்படுவது காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மாவட்டத்தில் உள்ள சன்ச்கர் என்னும் இடத்தில் பாயும் சாதர் நதி குளிர் காலத்தில் முற்றிலுமாக உறைந்திருக்கும் போது அங்கு ட்ரெக்கிங் செய்வதாகும். இதன் பின்னணியில் இருக்கும் சோகம் என்னவெனில் சாதர் நதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த நதி உறைந்திருக்கும் போது மட்டுமே அதன் மேல் நடந்து வந்து வெளி உலகுடன் தொடர்பு கொள்கின்றனர். கோடை காலத்திலும், மழை காலத்திலும் நதி சீறிப்பாயும் என்பதால் இங்கு வசிக்கும் மக்கள் வெளி உலகத்துடன் முற்றிலும் தொடர்பற்று வாழ்கின்றனர்.

Photo: Flickr

உறைந்த சன்ச்கர் நதியில் நடைபயணம் :

உறைந்த சன்ச்கர் நதியில் நடைபயணம் :

நவ நாகரீக நகரங்களில் வாழ்ந்தே பழக்கப்பட்டவர்கள் இப்படிப்பட்ட மிக கடினமான சூழலில் வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையை அறிந்து கொள்வதற்கும், சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை பெறவும் இது போன்ற சாகச பயணங்கள் நிச்சயம் நமக்கு உதவியாக இருக்கும்.

Photo: Flickr

உறைந்த சன்ச்கர் நதியில் நடைபயணம் :

உறைந்த சன்ச்கர் நதியில் நடைபயணம் :

குளிர் காலம் முடிந்த பிறகு சீறிப்பாயும் இந்த நதியில் 'ராப்டிங்' என்ற மிதவை படகில் பயணிக்கும் சாகசமும் நடத்தப்படுகிறது. உறைந்த நதியில் நடப்பதற்கு சற்றும் குறைவில்லாத சாகசம் இந்த ரப்டிங் ஆகும்.

Photo: Flickr

ஆன்மிகம் :

ஆன்மிகம் :

இந்தியா உலகுக்கு அளித்த மிகப்பெரும் கொடை ஆன்மீகமாகும். ஆன்மிகம், யோகா மற்றும் தியானத்தின் சிறப்புகளை உணர்த்த மேலை நாடுகள் தங்கள் அன்றாட வாழ்கையின் முக்கிய அங்கமாகவே இவற்றை கடைபிடிக்க துவங்கிவிட்டன. அதே போல ஆன்மீக தேடல் உள்ளவர்களால் மிகவும் விரும்பப்படும் இடமாகவும் இந்தியா திகழ்கிறது.

Photo: Flickr

காசி - உலகின் மிக பழமையான நகரம்

காசி - உலகின் மிக பழமையான நகரம்

பெனாரஸ் என்றும் காசி என்றும் அழைக்கப்படும் வாரணாசி, தொடர்ச்சியாக மக்களின் வசிப்பிடமாக விளங்கும் உலகின் பழமையான நகரங்களுள் ஒன்றாகும். இங்கு கங்கை நதியில் ஒரு முங்கு முங்கி எழுந்தால் செய்த பாவங்கள் அனைத்திலிருந்தும் விமோச்சனம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.

photo: Flickr

காசி - உலகின் மிக பழமையான நகரம்

காசி - உலகின் மிக பழமையான நகரம்

இந்த நகரில் முக்தியை நோக்கி காத்திருக்கும் ஏராளமான வயோதிகர்களை நாம் காண முடியும்.

Photo: Flickr

காசி - உலகின் மிக பழமையான நகரம்

காசி - உலகின் மிக பழமையான நகரம்

இந்த நகருக்கு ஒருமுறை பயணம் சென்று வந்தாலே வாழ்க்கையை பற்றிய மொத்த புரிதலையும் மாற்றிவிடும். காசி நகரை பற்றிய மேலதிக தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X