Search
  • Follow NativePlanet
Share
» »கண்ணூர் - என்ன ஊருப்பா இது...

கண்ணூர் - என்ன ஊருப்பா இது...

கண்ணூர் - என்ன ஊருப்பா இது...

கண்ணூர், கேரளத்தின் செழுமை மிக்க நகரங்களுள் ஒன்றாகும். பிரிட்டிஷ் காலத்தில் கண்ணனூர் அதாவது கிருஷ்ண பகவானின் ஊர் என இவ்வூரின் பெயர் வழங்கப்பட்டிருக்கிறது, பின்னர் அது மருவி கண்ணூர் என்றாகியிருக்கிறது. நெசவுத் தொழிலுக்கு பெயர் போன கண்ணூரில் அழகழகான கடற்க்கரைகளும், ஏராளமான கோயில்களும் உண்டு. மேலும் தெய்யம் என்னும் பாரம்பரிய நடனக்கலையும் இதன் அடையலாங்கலாக உள்ளன.

கண்ணூர் - என்ன ஊருப்பா இது...

Photo: Stefanie Härtwig

வாருங்கள் கண்ணூரில் இருக்கும் சில அற்புதமான இடங்களுக்கு சிறிய சுற்றுலா ஒன்று சென்று வருவோம்.

முழுப்பிளாங்காட் பீச், கண்ணூர்:

கண்ணூர் - என்ன ஊருப்பா இது...

Photo: Neon

ஆசியாவில் இருக்கும் ஒரே டிரைவ் இன் பீச் அதாவது வாகனம் ஓடுவதற்கு தகுந்த உறுதியான நிலப்பரப்பை உடைய கடற்க்கரை என்ற பெருமையை கண்ணூரில் இருக்கும் முழுப்பிளாங்காட் பீச் பெற்றுள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதத்தில் பீச் திருவிழாவை ஆயிரக்கணக்கான இளைஞர்களும், சாகச பயணிகளும் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த கடற்கரை தலச்சேரியிலிருந்து 8 கி.மீ தூரத்திலும், கண்ணூர் நகரத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும் அமைத்துள்ளது.

பேரளசேரி படிக்கிணறு:

கண்ணூர் - என்ன ஊருப்பா இது...

கண்ணூர் கண்ணூர் நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் கண்ணூர்-கூத்துபரம்பா நெடுஞ்சாலையில் உள்ள பேரளசேரி எனும் சிறு நகரில் இந்தப் பேரளசேரி படிக்கிணறு அமைந்துள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் கட்டிடக்கலை நுட்பத்துடன் அமைந்திருக்கும் கிணற்றின் தோற்றம் ராஜஸ்தானிய படிக்கிணறுகளை ஒத்திருக்கிறது.

தர்மதம் ஐலேண்ட்:

கண்ணூர் - என்ன ஊருப்பா இது...

Photo: ShajiA

கண்ணூர் நகரத்திலிருந்து 17 கி.மீ தூரத்தில் தர்மதம் ஐலேண்ட் அமைந்துள்ளது. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தீவுத்திட்டு தென்னை மரங்கள் மற்றும் பசுமையான தாவரச்செழிப்புடன் காட்சியளிக்கிறது. இந்த தீவுக்கு சென்று வர தனியார் படகு சேவைகள் உண்டு.

பழசி அணை:

கண்ணூர் - என்ன ஊருப்பா இது...

Photo: Vinayaraj

தமிழ் நாட்டில் கட்டபொம்மனுக்கு இணையாக கேரளத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட ராஜாவான பழசிராஜாவின் பெயர் இந்த அணைக்கு வைக்கபட்டுள்ளது. இது கண்ணூர் நகரத்திலிருந்து 35 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தின் சுற்றுலா வளர்ச்சிக் குழுமம் இந்த அணைத்தேக்கத்தில் படகுச்சவாரி சேவைகளை சுட்ட்றுலாப் பயணிகளுக்காக ஏற்பாடு செய்துள்ளது. அணையை ஒட்டியே உள்ள ஒரு தோட்ட பூங்காவில் பல பொழுதுபோக்கு அம்சங்களை பயணிகளுக்காக கொண்டுள்ளது.

எப்படி போவது கண்ணுருக்கு?

கண்ணூரில் இருக்கும் ஹோட்டல்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X