உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

ஒரே நாளில் கன்னியாகுமரியை நிறைவுடன் அனுபவிக்க இதை படிங்க!

Written by: Udhaya
Published: Wednesday, February 1, 2017, 10:00 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

ஆங்கிலேயர்களால் 'கேப் கோமோரின்' என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகே உருவாய் காச்தியளித்துக் கொண்டிருக்கிறது. இதன் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் திருநெல்வேலி மாவாட்டமும், வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் கேரள மாநிலமும் அமைந்திருக்கின்றன. கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் கன்னியாகுமரியிலுருந்து ஏறக்குறைய 85 km தொலைவில் அமைந்துள்ளது.

கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல. ஆயினும் கன்னியாகுமரியிலுள்ள கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன.

விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான் இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்.

இங்குள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் கன்னியாகுமரி கோயில், சித்தாறல் மலைக்கோயில் மற்றும் ஜெயின் நினைவுச் சின்னங்கள், நாகராஜ கோயில், சுப்பிரமணிய கோயில், திருநந்திக்கரை குகைக்கோயில் ஆகியவை அடங்கும்.

குடும்பம் மற்றும் நண்பர்களோடு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கவரப்படுவது இங்குள்ள கடற்கரைகளாலே. இதில் சங்குத்துறை, தேங்காப்பட்டினம் மற்றும் சொத்தவிளை கடற்கரைகள் மிகவும் பிரபலம்.

கன்னியாகுமரியில் எதையும் மிஸ் பண்ணாம அனுபவிக்கனும்னா இப்படி திட்டமிட்டுக்கொள்ளுங்கள். முந்தைய நாள் இரவே கன்னியாகுமரிக்கு வந்துவிடுங்கள். அதிகாலை சூரிய உதயம் காணலாம். அதிலிருந்து நாம் பயணத்தை தொடங்குவோம்.

நாள் 1

 

நேரம் காலை 5 மணி

இடம் கன்னியாகுமரி

காண்பது சூரிய உதயம்

அன்றைய நாளின் சூரிய உதயம் எப்போது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சரியாக அந்த நேரத்துக்கு முன்னரே கடற்கரைக்கு வந்து சேருங்கள். இந்த நாள் நல்ல நாளாக அமையட்டும்.

 

சூரிய உதயம்


அதிகாலை நேரத்தில் சூரிய உதயம் காண்பது அந்த நாளை மிக மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிகோலும், சூரியனை காண்பதென்பது நம்மை சுறுசுறுப்பாக்கும். அதிகாலையில் சூரிய உதயத்தைப் பார்த்துவிட்டு நாம் நமது பயணத்தைத் தொடர்வோம்.

 

Magnus Manske

விவேகானந்தர் நினைவு மண்டபம்

 

விவேகானந்தர் நினைவு மண்டபம், கடற்கரையிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரிய பாறையின்மீது அமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையிலிருந்து இங்கு செல்வதற்கு விசைப்படகுகள் இயக்கப்படுகின்றன.


Bhawani Gautam

 

விவேகானந்தர் நினைவு மண்டபம்

இந்த நினைவு மண்டபத்தில், ஸ்ரீபாத மண்டபம், சபா மண்டபம், தியான மண்டபம் என்று மூன்று பகுதிகள் உள்ளன. ஸ்ரீபாத மண்டபம் இருக்கும் பாறைப் பகுதியில்தான், பகவதியம்மன், சிவபெருமானை மணப்பதற்காக ஒற்றைக் காலில் நின்று தவம் செய்ததாகவும், அதனால், இந்தப் பாறையில் அவரது பாதத்தின் தடம் பதிந்துள்ளது என்று நம்ப‌ப்படுகிறது.

 


Nikhil B

 

விவேகானந்தர் நினைவு மண்டபம்

 

இதன் காரணமாக‌, இந்தப் பாறைக்கு ஸ்ரீபாதப் பாறை என்று பெயர் வந்தது. இதே பாறையில்தான், சுவாமி விவேகானந்தரும் ஞானம் பெற்றார் என்றும் நம்பப்படுகிறது. சபா மண்டபத்தில், விவேகானந்தர் நின்ற நிலையிலான பெரிய வெண்கலைச் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை பார்ப்பவர் அனைவரையும் கவரும் தன்மை கொண்டது. இம்மண்டபம், இந்துக் கோவிற் கலையம்சங்களைக் கொண்ட 12 கருங்கல் தூண்களையும், பேலூர் இராமகிருஷ்ண ஆலயத்தின் விமான அமைப்பின் அம்சத்தையும் கொண்டுள்ளது. கருங்கல்லின் நேர்த்தி, பளபளப்பு நம்மை பிரமிக்க வைக்கிறது.

Nomad Tales

 

திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி

 

திருவள்ளுவர் கன்னியாகுமரியின் முக்கிய அடையாளங்களின் ஒன்று. இது மிகப்பெரிய கற்களால் செய்த தமிழ் புலவர் திருவள்ளுவரின் சிலையாகும். இதன் உயரம் 133 அடி. இச்சிலை விவேகாந்தர் பாறைக்கு அடுத்து நிறுவப்பட்டிருக்கிறது.

Ve.Balamurali

 

திருவள்ளுவர் சிலை, கன்னியாகுமரி

 

இதன் மேடையின் உயரம் 38 அடியாகும். இது திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளின் 38 அறத்துப்பாலை குறிக்கும். மேடையின் மேல் இருக்கும் சிலையின் உயரம் 95 அடியாகும். இது 25 இன்பத்துப்பாலையும் 70 பொருட்பாலையும் குறிக்கும். இச்சிலையை செதுக்கிய சிற்பியின் பெயர் Dr. வி. கண்பதி ஸ்தபதி.

 

Nataraja

 

காந்தி மண்பம்

 

மகாத்மா காந்தி இறக்கும் போது அவரின் வயதை குறிக்கும் விதமாக, இந்த நினைவகத்தின் உள்வடிவமைப்பு கிட்டத்தட்ட 79 அடி உயரத்தில் அமைக்கப்பட்டது. ஒவ்வொரு வருடம் October 2-ஆம் தேதி மதிய வேளையிலே, காந்தியின் அஸ்தி கரைக்கப்படுவதற்க்கு முன் வைக்கப்பட்ட இடத்தில், சூரிய கதிர்கள் நேரடியாக விழும்படி இக்கட்டிடம் வடிவமைக்கப்பட்டிருப்பது இதன் மற்றொரு மிகப்பெரிய சிறப்பாகும்.

Parvathisri

 

காந்தி மண்பம்

 


காந்தி நினைவகம் கன்னியாகுமரி கோயிலுக்கு மிக அருகாமயில் தான் உள்ளது. இந்த நினைவகத்தின் மற்றொரு சிறப்பு இங்குள்ள நூலகம். இங்கே நம் நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னால் வெளிவந்த பழைய புத்தகங்கள், துண்டு பிரசுரங்கள் மற்றும் இதழ்களும் இருக்கின்றன. இந்த நூலகம் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும்.

Tony Jones

 

காந்தி மண்டபம்

ஆரோக்யநாதர் ஆலயம்

 

வாவத்துரை என்பது கன்னியாகுமரியில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம். இது அங்குள்ள செயின்ட் ஆரோக்கிய நாதர் கத்தோலிக் கிறிஸ்துவ தேவாலயத்திற்கு புகழ் பெற்றது

இந்த தேவாலயம் செயின்ட் ஆரோக்கிய நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டது. எப்போதும் மக்களை நோயிலிருந்து காப்பாற்றி அனைவருக்கும் நல்ல உடல் நலத்தை அளிப்பவரே ஆரோக்கிய நாதர். கடற்கரையோரம் நீல வண்ண வானத்து பின்னணியில் எண்ணிலடங்கா எழிலோடு காட்சியளிக்கிறது இந்த தேவாலயம்.

காலை 11 மணிக்கெல்லாம் கன்னியாகுமரியை சுற்றிப்பார்த்துவிட்டு அருகிலுள்ள வட்டகோட்டை நோக்கி புறப்படுவோம். வாங்க...

Michael

 

வட்டக்கோட்டை, கன்னியாகுமரி

 

கால் மணி நேரத்துக்குள் வட்டகோட்டை வந்துவிடலாம். இங்கு காண்பதற்கு இனிய காட்சிகள் உங்களை வரவேற்கும்.

வட்டக்கோட்டை கன்னியாகுமரியிலிரிந்து 6 km தொலைவில், வடகிழக்கு திசை நோக்கி உள்ளது. இது தோரயாமாக 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

Infocaster

 

வட்டக்கோட்டை, கன்னியாகுமரி

 

திருவாங்கூர் சமஸ்தானத்தால் கட்டப்பட்ட கடல் கோட்டைகளில் இதுவே கடைசி கோட்டை. இந்த கோட்டை தே லேன்னாய் என்ற டச்சுக் கடற்படை அதிகாரியால் எழுப்பப்பட்டது.

 

Infocaster

 

வட்டக்கோட்டை, கன்னியாகுமரி

 

கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில், பல ஓய்வறைகள், காவல் கோபுரங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளும் உள்ளன. இக்கோட்டையின் உட்புறச் சுவர்களில் காணப்படும், செதுக்கிய மீன்களின் சித்திரங்கள், அவை பாண்டியர்களின் சின்னம் என்பதை குறிக்கின்றன.

Dileeshvar

 

வட்டக்கோட்டை, கன்னியாகுமரி

 

கோட்டையின் மேல் பகுதியில் இருக்கும் அணிவகுப்பு மைதானத்திலிருந்து பார்த்தால் கடலின் கணநேர காட்சியை காணலாம். அணிவகுப்பு மைதானத்தின் ஒரு பகுதியிலருந்து பார்த்தால் வங்காள விரிகுடாவை கண்டு ரசிக்கலாம். மைதானத்தின் மறுபக்கத்திலிருந்து பார்த்தால், தெளிந்த அமைதியான அரபிக்கடலை கண்டு களிக்கலாம்.

மதிய உணவு இடைவேளை வந்ததும் அருகில் கிடைக்கும் கடைகளில் உணவு அருந்தலாம். அல்லது பெரிய ஹோட்டல்களுக்கு வட்டகோட்டையிலிருந்து வெளியே வந்து கன்னியாகுமரி நோக்கி செல்லும் வழியில் நிறைய ரெஸ்ட்டாரென்ட்கள், ஹோட்டல்களைக் காணலாம். மதிய உணவை முடித்து விட்டு சிறிது நேரம் இளைப்பாறலாம். பின் இரண்டு மணிக்கெல்லாம் நாம் கிளம்பிவிடவேண்டும். நாம் அடுத்து காண்பது சிதறால் மலைக்கோயில்.

Dileeshvar

 

சிதறால் மலைக்கோயில்

 

சிதறால் என்ற சின்ன கிராமம் கன்னியாகுமரியிலிருந்து 45 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலம். இதிலுள்ள மலைக்கோயிலும் ஜெயின் நினைவுச் சின்னங்களுமே இந்த ஸ்தலத்தின் புகழுக்குக் காரணமாக விளங்குகின்றன.

Karthi.dr

 

சிதறால் ஜெயின்கோயில்

 

சித்தாறல் மலைக்கோயில் ஒரு குன்றின் மேல் அமைந்துள்ளது. இந்த குன்றின் மேல் உள்ள குகையில், பாறைகளில் செதுக்கிய ஊழிய கடவுள்கள் மற்றும் ஜெயின் தீர்தங்கரார்களின் உருவங்களை காணலாம்.

இந்த சிற்பங்களும் செதுக்கள்களும், குகைப் பாறையின் உட்புறமும் வெளிபுறமும் பல உள்ளன. குகைக் கோயிலை அடைய 10 நிமிட தூரம் குன்றின் மேல் நடக்க வேண்டும்.

Karthi.dr

 

சிதறால் மலைக் கோயில்

சிதறாலிலுள்ள ஜெயின் நினைவுச் சின்னங்கள் வளமான பண்பாட்டிற்கு எடுத்துக்காட்டு. கடவுள்களுக்கு கொடுக்கும் மரியாதையாக எண்ணி பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருவதுண்டு.

இங்கிருக்கும் ஜெயின் நினைவுச் சின்னங்களாகிய விக்கிரகங்களும் பாறைக் கூடாரங்களும் 9-11 நூற்றாண்டுகளில் வடிவமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. என்னதான் வெயிலாக இருந்தாலும் மதியம் 3 மணிக்கெல்லாம் இங்கு நல்ல காற்று வீசும், அடர்ந்த மலைகளும் காடுகளும் புது வசந்தத்தை இங்கு உருவாக்கும். திரும்ப 4 மணிக்கெல்லாம் மீண்டும் கன்னியாகுமரி செல்லவேண்டும்.

Infocaster

 

மாத்தூர் தொங்கு பாலம், திருவட்டாறு

 

மாத்தூர் தொங்கு பாலம் திருவட்டாறு அருகே இருக்கிறது. உண்மையில் இது நீரை எடுத்துசெல்ல உதவும் ஒரு குழாய். இந்த பாலம் பாரலீ நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது. அருகாமையில் இருக்கும் மாத்தூர் என்னும் சிறிய கிராமத்தின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்டி இருக்கிறார்கள்.

Samemohamed

 

மாத்தூர் தொங்கு பாலம்

மாத்தூர் தொங்கு பாலம், திருவட்டாறு


Infocaster

 

மாத்தூர் தொங்கு பாலம்

மாத்தூர் தொங்கு பாலம், திருவட்டாறு

Infocaster

 

மாத்தூர் தொங்கு பாலம்,

மாத்தூர் தொங்கு பாலம், திருவட்டாறு

Infocaster

 

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

 

 

Infocaster

 

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

 

 

Infocaster

 

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

சூரிய மறைவு


சூரிய மறைவு மாலை 5 மணிக்கெல்லாம் கிட்டதட்ட கன்னியாகுமரியை நெருங்கிவிடவேண்டும். மாலை சூரிய மறைவு, சந்திர எழுச்சி காண வேண்டியவர்கள் முன்கூட்டியே அந்த இடத்துக்கு வந்து சேர்வது சிறப்பு.

English summary

Kanyakumari tour- how to utilize the full day

Let enjoy Kanyakumari tour with full satisfaction
Please Wait while comments are loading...