Search
  • Follow NativePlanet
Share
» »திருமண வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு கட்டாயம் போய்வாங்க!

திருமண வேண்டுதல்களை நிறைவேற்றித் தரும் இந்த ஆஞ்சநேயர் கோவிலுக்கு கட்டாயம் போய்வாங்க!

பெங்களூருவில் உள்ள இந்த ஆ்ஞ்சநேயர் கோவில் மிகவும் சக்திவாய்ந்த பழமையான கோவிலாகும்.

By Udhaya

பெங்களூரு நகரம் பல ஆண்டுகளுக்கு முன்னர் பல்வேறு அரசர்கள் ஆண்ட கர்நாடகப்பகுதிகளின் தலைநகரமாகும். இங்கு வரலாற்று சிறப்பு மிக்க எண்ணற்ற கோவில்களும், சின்னங்களும் அமைந்துள்ளன.

ஆஞ்சநேய பக்தர்களின் முதன் முதற்கோவிலாகிய கரஞ்சி ஆஞ்சநேய கோவில் பெங்களூரு அருகிலுள்ள பசவனகுடியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் இது மிகப் பழமையான கோவிலாக கருதப்படுகிறது.

கரஞ்சி ஆஞ்சநேயர்கோவில்

கரஞ்சி ஆஞ்சநேயர்கோவில்

இந்த கோவில் சுற்றிலும் ரம்மியமான சூழலில் மரங்கள் நிறைந்த பகுதியில் காணப்படுகிறது. வேண்டிவர்களுக்கு வேண்டும் அருளை தந்து மக்களை காத்தருளும் ஆஞ்சநேயர், திருமண காரிய தடைகளை நீக்குவதாகவும் கூறப்படுகிறது.

PC : Brunda Nagaraj

சிலை

சிலை


18 அடி உயர சிலை இந்த கோவிலில் நிறுவப்பட்டுள்ளது. இதை பார்க்கும்போதே கோவிலின் பழமையை ஓரளவுக்கு கணிக்கமுடியும். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் செல்வம் பெருகும், தேடிய வரண் கிடைக்கும் என்கின்றனர் கோவிலுக்கு வரும் பக்தர்கள்.

PC : Brunda Nagaraj

மற்ற சாமி சிலைகள்

மற்ற சாமி சிலைகள்

தமிழ் பாரம்பரியத்தோடு மரத்தடியில் வைக்கப்பட்டுள்ள இந்த சிலைகளை தோஷம் போக்க அனேக பக்தர்கள் சுற்று வந்து வழிபட்டுச் செல்கின்றனர். மரத்தடி திண்ணையில் அமைக்கப்பட்டுள்ள நாக தோஷ சிலைகளை வணங்கினால் வாழ்வில் வரும் தோஷங்கள் அனைத்தும் தீரும் எனக் கூறப்படுகிறது.

PC : Brunda Nagaraj

எங்கே..எப்படி..எப்போது

எங்கே..எப்படி..எப்போது

கரஞ்சி ஆ்ஞ்சநேய சாமி கோவில் காலை 7 மணி முதல் மதியம் 12 வரையும், மாலை 4 முதல் 8 மணி வரையும் திறந்திருக்கும்.

கேஆர் மார்க்கெட் மற்றும் மெஜஸ்டிக்கிலிருந்து நிறைய பேருந்து வசதிகள் உள்ளன.

காந்தி பஜார் பேருந்து நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தொலைவில்தான் உள்ளது இந்த கோவில்.

PC : Brunda Nagaraj

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X