Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிக மகிழ்ச்சியான இடத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

உலகின் மிக மகிழ்ச்சியான இடத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

பயணங்கள் எப்போதுமே நமக்கு மகிழ்ச்சியை தருபவை. அதிலும் இயற்கை அழகு பொங்கும் மலை வாசஸ்தலங்களை பற்றி சொலவே தேவையில்லை. நகர வாழ்கையில் நமக்கு கிடைக்காத அமைதியான சூழ்நிலை, அசுத்தம் இல்லாத காற்று, தூய்மையான நீர் போன்றவை மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும்.

இதனாலேயே குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதுமையான இடமொன்றுக்கு பயணம் செய்வது வாழ்கையை அத்தனை அழகானதாக மாற்றும். அப்படி வெளிஉலகுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத அற்புதமான மலை வாசஸ்தலம் ஒன்றை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம். கீழே சொல்லப்படும் இடம் தான் இந்தியாவில் இருக்கும் உலகின் மிக மகிழ்ச்சியான இடமாகவும் சொல்லப்படுகிறது. பயணத்தை துவங்குவோம் வாருங்கள்.

கசோல் :

கசோல் :

இமய மலையின் இயற்கை வரம் பெற்ற மாநிலங்களில் ஒன்றான ஹிமாச்சல பிரதேசத்தில் எழில் கொஞ்சும் அழகுடன் பர்வத நதியின் கரையில் அமைந்திருக்கிறது இந்த கசோல் என்னும் ஊர்.

Parthiv Haldipur

கசோல் :

கசோல் :

மனிதனின் சுவடுகள் அதிகம் தடம் பதிக்காத இந்த ஊர் சமீப காலமாக மலையேற்றம் & கேம்பிங் போன்ற விஷயங்களுக்காக மிகவும் பிரபலமாகி வருகிறது.

இந்தியர்களை காட்டிலும் வெளிநாட்டவர்கள் மத்தியில் இந்த ஊர் மிகவும் விரும்பப்படுகிறது என்று சொல்லும் அளவுக்கு இங்கே வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஏராளமான அளவில் வருகின்றனர்.

Parthiv Haldipur

கசோல் :

கசோல் :

கடல் மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த கசோல் நகரம் சர் கணவாய், யங்கர் கணவாய், கிரி கங்கா கணவாய் போன்ற இடங்களுக்கு மலையேற்றம் செல்ல விரும்புகிறவர்களுக்கு 'பேஸ் கேம்ப்'ஆகவும் செயல்படுகிறது.

Ashish Gupta

கசோல் :

கசோல் :

ஏற்கனவே சொன்னது போல இந்தியர்களை காட்டிலும் வெளிநாட்டவர்கள் இந்த ஊருக்கு அதிக அளவில் வருகின்றனர். அதிலும் குறிப்பாக இஸ்ரேல் நாட்டவர்கள் வருடம் முழுக்கவும் கசோலுக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இவர்களுக்காகவே இங்குள்ள கடைகளில் உள்ள பெயர் பலகைகள் ஹீப்ரு மொழியிலும் எழுதப்படுகின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

Devendra Makka

கசோல் :

கசோல் :

கசோல் முழுக்கவே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் இயற்கை காநிடங்கள் ஏராளமாக இருக்கின்றன.

வானுயர்ந்த மலைகளும், பாய்ந்தோடும் நதிகளும், மரங்களும், வன உயிரினங்களும் நாம் வேறு ஏதோ மாய உலகுக்குள் வந்துவிட்டது போன்ற உணர்வை தரும்.

Parthiv Haldipur

கசோல் :

கசோல் :

அற்புதமான இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுக்கும் ஆசை உங்களுக்கு இருந்தால் கசோலை விட சிறந்ததொரு இடம் இருக்கவே முடியாது.

Parthiv Haldipur

கசோல் :

கசோல் :

இந்த கசோலுக்கு அருகில் இருக்கும் நாகரம் என்றால் அது குல்லு மாவட்டத்தின் தலைநகரமான குல்லு நகரம் தான்.

ஆப்பிள் மற்றும் பைன் மர தோட்டங்கள் நிறைந்த இந்த நகரமும் சுற்றிபார்க்க நல்லதொரு இடமாகும்.

Parthiv Haldipur

கசோல் :

கசோல் :

இயற்கையை ரசிப்பதை தாண்டி வேறு ஏதேனும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என விழைபவர்கள் இங்குள்ள உணவகங்களில் கிடைக்கும் இஸ்ரேலிய நாட்டு உணவுகளை வாங்கி சுவைத்து மகிழுங்கள்.

Raman Sharma

கசோல் :

கசோல் :

இங்கு நிலவும் அருமையான சூழல், இயற்கை அழகு, வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை என ஒரு முழுமையான அனுபவத்தை வழங்க தேவையான அனைத்து அம்சங்களையும் கொண்டிருப்பதால் இந்தியாவின் மிகவும் மகிழ்ச்சியான இடங்களில் ஒன்றாக 'கசோல்' குறிப்பிடப்படுகிறது.

Parthiv Haldipur

கசோல் :

கசோல் :

அதிக குளிர் இல்லாத மார்ச் முதல் ஜூலை வரையிலான காலகட்டம் இந்த கசோலுக்கு செல்ல சிறந்ததாகும்.

வித்தியாசமான மற்றும் தனிமையான ஓரிடத்திற்கு செல்லவேண்டும் என விரும்புகிறவர்கள் இந்த கசோலுக்கு நிச்சயம் சென்று வாருங்கள்.

Parthiv Haldipur

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X