Search
  • Follow NativePlanet
Share
» »கோவளம் - கடற்கரைகளும், தென்னந்தோப்புகளும்!!!

கோவளம் - கடற்கரைகளும், தென்னந்தோப்புகளும்!!!

By

கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்துக்கு அருகில் 16 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பிரபலமான கடற்கரை சுற்றுலாத்தலம் இந்த ‘கோவளம்' ஆகும்.

கோவளம் எனும் பெயருக்கு மலையாள மொழியில் ‘தென்னந்தோப்பு பகுதி' என்பது பொருளாகும். பெயருக்கேற்றப்படியே இக்கடற்கரைப்பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் காணப்படுகின்றன.

கோவளம் ஹோட்டல் டீல்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

ஹவா பீச், லைட் ஹவுஸ் பீச், வலியத்துறா கடற்பாலம், சமுத்ரா பீச், விழிஞ்சம் ஃபிஷிங் ஹார்பர் போன்றவை கோவளம் நகரின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

கோவளத்தின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Ryan

லைட் ஹவுஸ் பீச்

லைட் ஹவுஸ் பீச்

கோவளம் கடற்கரைப்பரப்பின் தெற்குப்பகுதியில் இந்த லைட் ஹவுஸ் பீச் அமைந்துள்ளது. இந்த கடற்கரையின் நீர் தூய்மையாக காணப்படுவதால் பயணிகள் இங்கு நீந்திக்குளித்து மகிழலாம். ஜனவரி மாதக்குளிரிலும் இங்கு கடற்கரை நீர் வெதுவெதுப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

படம் : Mehul Antani

கலங்கரை விளக்கம்

கலங்கரை விளக்கம்

முற்காலத்தில் லைட் ஹவுஸ் பீச் அருகிலுள்ள குன்றின்மீது விழிஞ்சம் லைட் ஹவுஸ் என்ற கலங்கரை விளக்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலங்கரை விளக்கத்தை அடையாளமாக கொண்ட இக்கடற்கரைக்கு ‘லைட் ஹவுஸ் பீச்' என்று துவக்க காலத்தில் இங்கு விஜயம் செய்த ஐரோப்பியப்பயணிகள் பெயர் வைத்துள்ளனர். இரவு நேரத்தில் இந்த கலங்கரை விளக்கத்திலிருந்து வரும் வெளிச்சக்கீற்றுகள் கடற்கரையின் எழிலுக்கு இன்னும் கூடுதல் கவர்ச்சியை அளிக்கின்றன. இக்காட்சியை கண்டு ரசிப்பதற்காகவே இரவு நேரத்தில் எண்ணற்றோர் லைட் ஹவுஸ் பீச்சுக்கு வந்து செல்கின்றனர். மேலும் இதன் உச்சியிலிருந்து கோவளத்தின் மூன்று முக்கிய கடற்கரைகளையும் பிரிக்கும் பிளவுகளை நன்றாக பார்க்கலாம்.

படம் : Luciana Aguiar

வலியத்துறா கடற்பாலம்

வலியத்துறா கடற்பாலம்

கோவளம் நகரிலிருந்து 10 கி.மீ தொலைவில் திருவனந்தபுரத்தின் புறநகர்ப்பகுதியில் வலியத்துறா கடற்பாலம் அமைந்துள்ளது. 214 மீட்டர் நீளமுடைய வலியத்துறா கடற்பாலம் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். தற்போது பலவீனமடைந்துவிட்ட இந்த பாலப்பகுதியை மீனவர்கள் படகுகளை கடலில் புகுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர்.

படம் : കാക്കര

ஹவா பீச்

ஹவா பீச்

ஹவா பீச் கடற்கரை ‘ஈவ்ஸ் பீச்' என்று பிரசித்தமாக அறியப்படுகிறது. அக்காலத்தில் ஏராளமான ஐரோப்பிய பெண் சுற்றுலாப்பயணிகள் இங்கு மேலாடையின்றி சூரியக்குளியலில் ஈடுபடும் வழக்கத்தை கொண்டிருந்ததால் இப்பெயர் வந்துள்ளது. இருப்பினும் தற்போது இந்த வழக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.

படம் : BishkekRocks

விழிஞ்சம் ஃபிஷிங் ஹார்பர்

விழிஞ்சம் ஃபிஷிங் ஹார்பர்

விழிஞ்சம் ஃபிஷிங் ஹார்பர் என்று அழைக்கப்படும் மீன்பிடி துறைமுகப்பகுதியில் அலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையம் அமைந்துள்ளது. விழிஞ்சம் மீன்பிடி துறைமுகத்திற்கு வருகை தரும்போது இந்த அலை மின்னுற்பத்தி அமைப்புகளையும் பார்ப்பது நல்லது. நீங்கள் குழுவாக செல்லும் பட்சத்தில் இங்குள்ள தொழில் வல்லுனர்களில் ஒருவர் உங்களுக்கு இதன் தொழில் நுட்பம் மற்றும் நன்மைகளை விளக்கிக் கூறக்கூடும்.

படம் : Thejas Panarkandy

மீன்பிடி படகுகள்

மீன்பிடி படகுகள்

விழிஞ்சம் ஃபிஷிங் ஹார்பரில் நிறுத்தப்பட்டிருக்கும் மீன்பிடி படகுகள்.

படம் : Koshy Koshy

விழிஞ்சம் கிராமம்

விழிஞ்சம் கிராமம்

கோவளம் நகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் விழிஞ்சம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் இங்குள்ள ஆயுர்வேத மசாஜ் மையங்களுக்கும், பீச் ரிசார்ட் விடுதிகளுக்கும் பிரசித்தி பெற்றுள்ளது. தமிழகத்தின் ‘புகார் நகரம்' போன்று பண்டைய காலத்தில் ஒரு முக்கியமான கடல் வாணிபக்கேந்திரமாகவும் துறைமுகமாகவும் இந்த விழிஞ்சம் கிராமம் திகழ்ந்திருப்பதற்கான தொல்லியல் ஆதாரங்கள் சமீபத்தில் கிடைத்துள்ளன.

படம் : Kerala Tourism

விழிஞ்சம் மசூதி

விழிஞ்சம் மசூதி

விழிஞ்சம் கிராமத்தில் உள்ள இஸ்லாமிய மசூதி.

படம் : Arun Jr

புளிங்குடி பீச்

புளிங்குடி பீச்

விழிஞ்சம் கிராமத்துக்கு அருகிலுள்ள புளிங்குடி பீச்.

படம் : Kerala Tourism

விழிஞ்சம் குடைவறைக்கோயில்கள்

விழிஞ்சம் குடைவறைக்கோயில்கள்

விழிஞ்சம் கிராமத்தில் உள்ள விழிஞ்சம் குடைவறைக்கோயில்கள் பெரும்பாலானவை 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணிவரை குடைவறைக்கோயில்களுக்குள் செல்ல அனுமதி உண்டு.

படம் : Harisub

சமுத்ரா பீச்

சமுத்ரா பீச்

சமுத்ரா பீச் எனும் கடற்கரைப்பகுதி கோவளத்திலுள்ள மூன்று முக்கியமான கடற்கரைகளுள் ஒன்றாகும். கோவளத்தின் வடகோடியில் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு மற்ற இரண்டிற்கு வருவதுபோல் அதிகம் பயணிகள் வருவதில்லை.

படம் : MGA73bot2

திருவல்லம் பரசுராம கோயில்

திருவல்லம் பரசுராம கோயில்

திருவல்லம் பரசுராமஸ்வாமி கோயில் கோவளத்துக்கு அருகில் 9 கி.மீ தொலைவில், கரமனா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கேரளா எனும் நிலப்பகுதியை உருவாக்கியதாக சொல்லப்படும் பரசுராம பஹவானுக்காக இந்த கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் 12 அல்லது 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

படம் : Deep Goswami

சௌரா

சௌரா

கோவளம் கடற்கரைப்பகுதியிலிருந்து 6 கி.மீ தூரத்திலுள்ள சௌரா, ஒரு மீன்பிடி கிராமமாகும். சௌரா கிராமத்தில் மலை மீது உள்ள ஒரு ஐயப்பன் கோயில் பிரசித்தமாக அறியப்படுகிறது. இக்கோயிலில் நவம்பர் மாதம் 15ம் தேதி துவங்கி 56 நாட்களுக்கு ஒரு திருவிழா அனுஷ்டிக்கப்படுகிறது. ஜனவரி 15ம் நாள் முடியும் இந்த திருவிழாவில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

படம் : Kerala Tourism

ஹால்சியோன் கேஸ்டில்

ஹால்சியோன் கேஸ்டில்

திருவிதாங்கூர் மஹாராணி சேது லட்சுமி பாயி என்பவருக்காக அவரது கணவர் ஸ்ரீ ராம வர்மா வலியக்கோயில் தம்புரான் என்பவரால் 1932ம-ஆம் ஹால்சியோன் கேஸ்டில் கட்டப்பட்டுள்ளது. இது திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினருக்கான பிரத்யேக ஓய்வு மாளிகையாக இருந்துவந்தபோதும் 1964-ஆம் ஆண்டில் கேரள அரசாங்கத்துக்கு விற்கப்பட்டுவிட்டது. கோவளம் அரண்மனை என்று பிரபலமாக அறியப்படும் இந்த மாளிகை ‘கோவளம் இன்டர்நேஷனல் பீச் ரிசார்ட்' வளாகத்திலேயே இடம் பெற்றுள்ளது. இந்த பாரம்பரிய விடுதியை பிரபலமான ‘லீலா குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்' நிறுவனம் ஒரு 5 நட்சத்திர விடுதியாக நடத்தி வருகிறது. (புகைப்படம் 1957-ல் எடுக்கப்பட்டது)

படம் : Dave Conner

அருவிக்கரா அணை

அருவிக்கரா அணை

கோவளம் நகரிலிருந்து 27 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அருவிக்கரா அணை மிகவும் புகழ்பெற்ற பிக்னிக் ஸ்தலமாகும்.

படம் : Jyothish Kumar P.G

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

கோவளம் ஹோட்டல் டீல்கள்

படம் : James Southorn

கோவளத்தை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

கோவளத்தை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடையலாம்?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Ronald Tagra

Read more about: கோவளம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X