Search
  • Follow NativePlanet
Share
» »லட்சத்தீவுகள் - இந்தியப்பெருங்கடலின் சொர்க்கம்

லட்சத்தீவுகள் - இந்தியப்பெருங்கடலின் சொர்க்கம்

இந்தியப்பெருங்கடலில் கேரளக்க்கடற்க்கரையில் இருந்து 250 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் 30 பெரு மற்றும் சிறு தீவுகளை உள்ளடக்கியது தான் இந்த லட்ச்த்தீவுகள். இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசமாக இருக்கும் இந்த தீவுகள் சமீப ஆண்டுகளாக மிகப்பிரபலமான சுற்றுலாத்தளமாக மாறி வருகிறது. அசுத்தமே இல்லாத கடற்கரைகள், சுற்றிலும் கடலால் சூழ்ந்திருப்பதால் கிடைக்கும் பேரமைதி, இனிமையாக பழகும் மக்கள் போன்ற காரணங்களே போதும் நாம் வசிக்கும் இந்த கான்கிரீட் காடுகளை விட்டு கொஞ்ச நாட்கள் லட்சத்தீவுகளுக்கு சென்றுவர.

புகைப்படம்: Thejas

இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு மது அருந்துதல், தீவில் வசிக்கும் நாட்கள் போன்ற விஷயங்களில் அதிக கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்தியப்பெருநிலப்பரப்புக்கு வெளியே குறைந்த செலவில் நாம் சென்று வரக்கூடிய மிகச்சிறந்த சுற்றுலாத்தளம் என்றால் அது லட்சத்தீவுகள் மட்டுமே. சரி வாருங்கள் லட்சத்தீவில் நாம் சுற்றிப்பார்க்க என்னென்ன இடங்கள் உள்ளன என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.

மினிகாய் தீவு

புகைப்படம்: Thejas

இந்ததீவுகூட்டதின் இரண்டாவது பெரிய தீவான இங்கு குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் மினிகாயின் கலாச்சாரம் மற்ற லட்ச்சத்தீவுகளில் இருந்து பெரிதும் மாறுபட்டது. மாலத்தீவுகளுக்கு வெகு அருகில் அமைந்திருப்பதால் இங்கு மாலத்தீவின் கலாச்சார தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த தீவை சுற்றி இருக்கும் நீலப்பச்சை நிறக்கடல் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்கிறது. தோன்றிய போது எப்படி இருந்ததோ அப்படியே இன்றும் இருப்பது போல் உள்ளது இந்த தீவின் கடற்கரை. பெரும்பகுதி தென்னைமரங்களால் நிரம்பியிருக்கும் இந்த தீவு அமைதியாக இயற்கையை ரசிக்க விரும்பும் அனைவரும் ஒரு முறையாவது நிச்சயம் வரவேண்டிய இடம்.

அகத்தி தீவு

புகைப்படம்: Binu K S

கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து வெறும் 200கி.மீ தொலைவில் இருக்கும் இந்த தீவை பற்றி பெரும்பாலும் இது நாள் வரை நாம் அறியாமல் தான் இருந்திருப்போம். லட்ச்சதீவுகளின் நுழைவுவாயில் என்று சொல்லப்படும் இந்த தீவு மனிதர்களின் எந்த வித வர்த்தகப்பிடியிலும் சிக்காமலும், துளியும் கழிவுகளால் மாசுபடாமலும் இருக்கிறது.

இந்ததீவின் சிறப்பம்சம் என்றால் அது இங்கிருக்கும் கடலடி நீச்சல் (Scooba Diving) தான். ஆக்சிஜென் சிலிண்டரை தோளில் சுமந்தபடி கடலுக்கு அடியில் சென்று அங்கு வாழும் விசித்திரமான கடல் உயிரினங்களையும், பவளப்பாறைகளையும் வெகுஅருகில் கண்டு ரசிக்கும் வாய்ப்பினை பெறலாம்.

இவைதவிர சுவைமிகுந்த டியுனா மீன்கள் அதிகம் பிடிபடும் இடமான அகதி தீவில் உள்ளூர்வாசிகளின் சமையலையும் ருசிபார்க்க மறந்து விடாதீர்கள்.

கவரட்டி

புகைப்படம்: Vishal Bhave

லட்ச்சதீவின் தலைநகரமான இந்த குட்டித்தீவு கேளிக்கை கொண்டாட்டங்களின் மையமாக திகழ்கிறது. இங்கு பெரும்பான்மை மக்கள் இஸ்லாமியர்களாக இருப்பதால் அக்டோபர் மாதத்தில் வரும் ஈத் உல் ப்ஹ்திர் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த சமயத்தில் இங்கிருக்கும் உஜ்ரா மசூதி விழாகோலமாக காட்சி தருகிறது. ஓணம் திருவிழாவும் இங்கு செப்டெம்பர் மாதத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

லட்சத்தீவுகள் - இந்தியப்பெருங்கடலின் சொர்க்கம்

புகைப்படம்: Thejas

மற்ற தீவுகளைபோலவே இங்கும் ஸ்கூபா டைவிங் போன்ற கடல் விளையாட்டுகள் உள்ளன. இங்கு நிலவும் வெதுவெதுப்பான சூழ்நிலை வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகளை வர வைக்கின்றது.

ரம்யமான இந்த லட்சத்தீவுகளுக்கு செல்லும் முன்பு லட்ச்சதீவு அரசிடம் முன்னனுமதி பெற வேண்டும். கேரளாவில் இருந்து தொடர்ச்சியாக கப்பல் போக்குவரத்து இந்த தீவுக்கு உள்ளது. மேலும் பெங்களுருவில் இருந்து விமான சேவையும் உள்ளது. வாழ்கையில் ஒருமுறையாவது நீங்கள் நிச்சயம் செல்லவேண்டும் இடங்கள் இவை.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X