Search
  • Follow NativePlanet
Share
» »இந்த தமிழர்களின் நினைவாக நீங்க போக வேண்டிய இடங்கள் இவை

இந்த தமிழர்களின் நினைவாக நீங்க போக வேண்டிய இடங்கள் இவை

இந்த இடங்கள் தற்போது தமிழக அரசால் சுற்றுலாத் தளமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

By Udhaya

இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், இங்குள்ள களச் சூழலை பயன்படுத்தி சூழ்ச்சி செய்து எல்லா மன்னர்களையும் அடிமை படுத்தினர். தற்போதைய இந்தியாவின் அப்போதைய மன்னர்கள் தங்கள் தேசங்களை ஒப்படைத்துவிட்டனர்.மீறிய அனைவரும் கொல்லப்பட்டனர்.

இப்படி பல ஆண்டுகாலம் ஆங்கிலேய ஆட்சி நடைபெற்றுவந்தது. பல்வேறு வீரர்கள் சுதந்திரத்துக்காக போராடி இறுதியில் 1947ஆம் ஆண்டு இந்தியா தன்னிச்சையான நாடு என ஆங்கிலேயர்கள் சுதந்திரம் அறிவித்தனர்.

இந்த சுதந்திரத்துக்கு போராடிய தமிழகத்தை சேர்ந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட தமிழக அரசால் பராமரிக்கப்பட்டுவரும் பகுதிகளை நாம் இங்கு காண்போம்.

கயத்தாறு

கயத்தாறு

அந்நியர்கள் இந்தியாவை அடிமை செய்தபோது வெகுண்டெழுந்து போராடிய மிகச் சிலருள் பாஞ்சாலங்குறிச்சி மாமன்னன் கட்டபொம்மனும் ஒருவன்.

வீரபாண்டிய கட்டபொம்மன் 1760 ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தார். தெலுங்கு வம்சத்தினராயினும் இவர் தமிழையும் தமிழர்களையும் மிகவும் நேசித்து தமிழனாகவே வாழ்ந்தார்.

இவர் பிறந்ததால் பாஞ்சாலங்குறிச்சி வீரம் விளைந்த மண்ணாகிப் போனது.

துரோகிகளால் காட்டிக்கொடுக்கப்பட்டு இந்த கோட்டையில் தான் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார். இன்று இந்த இடம் சுற்றுலாத் தளமாக உள்ளது.

PC: wikipedia

நினைவுத் தூண்

நினைவுத் தூண்


திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கு சுற்றுலாவுக்கு வருபவர்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோட்டை இது. நம் மண்ணின் வீரம் காக்க செங்குருதி கொடுத்து உயிர் நீத்த நம் முன்னோரின் நினைவுகளை நாம் மறக்கக்கூடாது.

PC: selvakumar mallar

மதுரையில் நிறுவப் பட்டுள்ள கட்டபொம்மன் சிலை

மதுரையில் நிறுவப் பட்டுள்ள கட்டபொம்மன் சிலை

தூத்துக்குடி, எட்டயபுரம் போன்ற ஊர்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு பேருந்து வசதி உள்ளது. மேலும் சில இடங்களிலிருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கான தூரம்

ஒட்டப்பிடாரம் - 3 கி.மீ
எட்டயபுரம் - 23 கி.மீ
தூத்துக்குடி - 25 கி.மீ
கயத்தாறு - 40 கி.மீ
கோவில்பட்டி - 38 கி.மீ
திருச்செந்தூர் - 70 கி.மீ

PC: WIKI

ஒட்டப்பிடாரம் தூத்துக்குடி

ஒட்டப்பிடாரம் தூத்துக்குடி


நம் பட்டியலில் இந்த பகுதி இடம் பெற்றதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கப்பலோட்டியத் தமிழன் வஉசி பிறந்த பொன்னான இடம் இதான்.

1872ம் ஆண்டு ஒட்டப்பிடாரத்தில் பிறந்தவர் வஉ சிதம்பரனார். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

PC: Pearljose

செக்கு

செக்கு

சுதந்திரப் போராட்டத்தின் போது சிறையிலடைக்கப்பட்ட வஉசி செக்கிலுக்க வைக்கப்பட்டார். இதனால் அவருக்கு செக்கிழுத்தச் செம்மல் எனும் பட்டம் கொடுக்கப்பட்டது. அவர் சிறையில் இழுத்த செக்கு சென்னை காந்தி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

PC: Surya Prakash

தந்தை பெரியார் நினைவிடம்

தந்தை பெரியார் நினைவிடம்

ஈவேராமசாமி பெரியார் 1879 ஆம் ஆண்டு ஈரோட்டில் பிறந்தார். மனிதர்களை அடிமைப் படுத்தும் என சாதிகளையும், மதங்களையும், அதற்கு காரணம் கடவுள் கொள்கைதான் என அனைத்தையும் மறுத்தார்.

இவர் இறப்புக்கு பிறகு வேப்பேரியில் நினைவிடம் அமைக்கப்பட்டது.

PC: sibi

வைக்கம்

வைக்கம்

கேரள மாநிலம் வைக்கமில் அவருக்காக வைக்கப்பட்ட சிலை இது.

PC: Geprgekutty

எட்டயபுரம்

எட்டயபுரம்

தனது கவிதை வரிகளால் , பாடல்களால் தீராத விடுதலை வேட்கையை நாட்டு மக்கள் மத்தியில் ஊட்டியவர் பாரதி. சுப்பிரமணிய பாரதி எனும் இயற்பெயர் கொண்ட இவர் எட்டயபுரத்தில் பிறந்தார். தற்போது புணரமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள பாரதியின் எட்டயபுரத்து வீடு.

PC: Sundar

காமராசர் நினைவிடம்

காமராசர் நினைவிடம்

கல்விக் கண் திறந்த காமராசரின் புகழை அனைவரும் அறியும் வகையில் அவருக்கு மணிமண்டம், நினைவிடங்கள் பல தமிழகத்தில் உள்ளன.

PC: Surya Prakash.S.A

காமராசர் நினைவிடம்,கிண்டி

காமராசர் நினைவிடம்,கிண்டி

காமராசர் நினைவிடம்,கிண்டி


PC: Surya Prakash.S.A

Read more about: travel பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X