Search
  • Follow NativePlanet
Share
» »வேதாளம் 'தல' அஜித்துடன் ஒரு டூர் போகலாம் வாங்க !!

வேதாளம் 'தல' அஜித்துடன் ஒரு டூர் போகலாம் வாங்க !!

'தல' அஜித் நடிப்பில் வெளியாகி உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுவருகிறது வேதாளம் திரைப்படம். தன்னுடன் பிறக்காத பெண்ணை தங்கச்சியாக ஏற்றுக்கொண்டு கொல்கத்தா நகரில் அமைதியான டாக்ஸி ஓட்டுனராக வாழும் அஜித் ஆர்வக்கோளாரில் சில ரவுடிகளை போலீஸில் சிக்க வைக்க அதனை தொடர்ந்து ரவுடிகள் அஜித்தை பழிவாங்க துரத்துகின்றனர். ஒரு கட்டத்தில் தனது உயிரினும் மேலான உறவாக மதிக்கும் லட்சுமி மேனனின் வாழ்கையில் ஏற்ப்பட்ட கஷ்டங்களுக்கு இந்த ரவுடிகளே காரணம் என்று தெரியவர அந்த ரவுடிகளை என்ன செய்கின்றார் அஜித் என்பதே தெறிக்க வைக்கும் வேதாளம் படத்தின் கரு.

இப்படத்தின் முதல் பாதியில் கொல்கத்தா நகரை அவ்வளவு அழகாக காண்பித்திருப்பார்கள். தனக்கென ஒரு தனி அடையாளத்தை கொண்டிருக்கும் கொல்கத்தா நகருக்கு வேதாளம் 'தல' அஜித்துடன் ஒரு டூர் போகலாம் வாருங்கள்.

கொல்கத்தா !!

கொல்கத்தா !!

தமிழ் சினிமாவில் டான் கதை என்றாலே மும்பை தான். நாயகனில் தொடங்கி துப்பாக்கி வரைக்கும் ஏராளமான படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த பாணியில் இருந்து விலகி புதிதாக தமிழ் சினிமாவில் அதிகம் காண்பிக்கப்படாத நகரமான கொல்கத்தாவில் தான் 'வேதாளம்' படத்தின் முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

கொல்கத்தா !!

கொல்கத்தா !!

இத்திரைப்படத்தில் தேர்ந்த ஒளிப்பதிவின் மூலம் கொல்கத்தா நகரை அத்தனை அழகாக காண்பித்திருக்கிறார்கள்.

அற்புதமான பூங்காக்கள், பழமையான கட்டிடங்கள் மற்றும் கோயில்கள், தனக்கென ஒரு தனி மொழி மற்றும் கலாச்சாரத்தை கொண்டிருக்கும் கொல்கத்தா நகரை வேதாளம் 'தல' அஜித்துடன் சேர்த்து சுற்றிப்பார்க்கலாம் வாருங்கள்.

விக்டோரியா மெமோரியல்

விக்டோரியா மெமோரியல்

1837-1901 வரை இங்கிலாந்து நாட்டின் அரசியாக இருந்த ராணி விக்டோரியா என்பவரின் நினைவாக கொல்கத்தா நகரில் உள்ள ஹூக்லி நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிறது விக்டோரியா நினைவு மாளிகை.

இங்கிலாந்து ராணி விக்டோரியா மறைந்து ஐந்து ஆண்டுகள் கழித்து 1906ஆம் ஆண்டு இந்த நினைவகத்திற்கான கட்டிடப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு பதினேழு ஆண்டுகள் கழித்து 1921இல் தான் இது கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது.

விக்டோரியா மெமோரியல்

விக்டோரியா மெமோரியல்

இந்தியாவில் இருக்கும் பளிங்கு கல்லினால் கட்டப்பட்ட மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றான இந்த மாளிகை இப்போது மத்திய கலாச்சார அமைச்சகத்தினால் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள மக்ரானா என்ற இடத்தில் கிடைக்கும் வெள்ளை பளிங்கு கற்களை கொண்டே இந்த அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது. இந்தியாவின் கட்டிடக்கலை அற்புதமான தாஜ்மஹாலும் இதே கல்லினால் தான் கட்டப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்டோரியா மெமோரியல்

விக்டோரியா மெமோரியல்

இந்த அரண்மனையின் முன்பாக ரெடேஸ் டெல் மற்றும் டேவிட் பிரைன் என்பவர்களால் வடிவமைக்கப்பட்ட 64 ஏக்கர் பரப்பளவிலான மிகப்பெரிய தோட்டம் ஒன்றும் அமைந்திருக்கிறது. இதன் நடுவே மறைந்த பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியா தனது அரியாசனத்தில் அமர்ந்திருப்பது போன்ற சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.

விக்டோரியா மெமோரியல்

விக்டோரியா மெமோரியல்

இரவு நேரத்திலும், சுதந்திர தினம், குடியரசு தினம், தீபாவளி பண்டிகை போன்ற நாட்களிலும் ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது இந்த மாளிகை.

இந்த மாளிகையின் முன் 64ஏக்கரில் அமைந்த அற்புதமான தோட்டம் ஒன்றும் இருக்கிறது. இந்தியாவில் பிரிட்டிஷாரால் கட்டப்பட்ட மிகச்சிறந்த படைப்பான இதை கொல்கத்தா சென்றால் நிச்சயம் கண்டுகளியுங்கள்.

விக்டோரியா மெமோரியல்

விக்டோரியா மெமோரியல்

விக்டோரியா மெமோரியல் கட்டிடத்தின் கட்டுமான பணியின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்!!

ஹவ்ரா பாலம் :

ஹவ்ரா பாலம் :

விக்டோரியா மேமொரியலை போன்றே கொல்கத்தாவின் அடையாளங்களில் ஒன்றாக இருப்பதுஹவ்ரா பாலம் ஆகும்.

கொல்கத்தாவில் பாய்ந்தோடும் ஹூக்லி நதியின் மேல் ஹவ்ரா மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களை இணைக்கும் விதமாக இப்பாலம் கட்டப்பட்டிருக்கிறது.

Dilip Muralidaran

ஹவ்ரா பாலம் :

ஹவ்ரா பாலம் :

இந்த பாலத்தின் உண்மையான பெயர் 'ரவிந்திர சேது' என்பதாகும். நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் மற்றும் ஆசியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான வங்ககவி ரபிந்த்ரநாத் தாகூரை கவுரவிக்கும் விதமாக இப்பெயர் சூட்டப்பட்டது.

இருந்தாலும் இன்றும் பரலவாக ஹவ்ரா பாலம் என்றே இங்குள்ள மக்களால் விளிக்கப்படுகிறது.

Peter

ஹவ்ரா பாலம் :

ஹவ்ரா பாலம் :

ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் மேற்ப்பட்ட வாகனங்களும், ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மனிதர்களும் இந்த பாலத்தை கடந்து செல்கின்றனர்.

உலகின் மிக 'பிசியான' பாலமாகவும், உலகிலிருக்கும் ஆறாவது மிக நீளமான இரும்பு பாலமாகவும் இது திகழ்கிறது.

Manuel Menal

ஹவ்ரா பாலம் :

ஹவ்ரா பாலம் :

முதல் முறையாக கொல்கத்தா வருபவர்கள் இந்த பாலத்தில் காலாற ஒரு நடைபோடுங்கள். கொல்கத்தா நகரை உணர, இந்நகரம் மொத்தத்தையும் கண்டுரசிக்க நல்லதொரு வாய்ப்பாக இது அமையும்.

Veeresh Malik

ஈடன் கார்டன் :

ஈடன் கார்டன் :

கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொல்கத்தா என்றதும் நினைவுக்கு வரும் முதல் விஷயம் 'ஈடன் கார்டன்' மைதானம் தான். உலகில் இருக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான இங்கே வரலாற்று சிறப்புமிக்க பல கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன.

Anand Swaminathan

ஈடன் கார்டன் :

ஈடன் கார்டன் :

கிரிக்கெட்டின் 'கொலோசியம்' என்றழைக்கப்படும் இந்த மைதானத்தில் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 66,000பேர் அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்க முடியும்.

1864ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானம் இன்று உலகில் இருக்கும் மிகப்பழமையான மைதானங்களில் ஒன்றாகும். கிரிக்கெட் பார்க்க ரொம்ப பிடிக்குமென்றால் வாழ்கையில் ஒருமுறையேனும் ஈடன் கார்டனில் இந்தியா விளையாடும் போட்டியை காணுங்கள்.

Anand Swaminathan

தக்ஷினகாளி கோயில் :

தக்ஷினகாளி கோயில் :

கொல்கத்தா நகரில் ஹூப்ளி நதியின் கிழக்கு கரையை ஒட்டி அமைந்திருக்கிறது தட்சினேஸ்வர் என்ற ஊர். இந்த ஊரின் அடையாளமாக இருப்பது இங்குள்ள காளி மாதா கோயிலாகும். இங்கே காளி பவதாரிணியாக வழிபடப்படுகிறார்.ஸ்ரீ ஸ்ரீ ஜகதீஸ்வரி மாகாளி கோயில் என்று நாமம் சூட்டபப்ட்ட இக்கோயிலின் முதல் தலைமை அர்ச்சகராக ராம்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் தனக்கு உதவியாக கோயில் பணிகளை கவனித்துக்கொள்ள தன்னுடைய இளைய சகோதரனையும் உடன் அழைத்து வந்தார்.

அவர்தான் பின்னாளில் மிகப்பெரிய ஆன்மீக குருவாக மாறிய ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவர்.

தக்ஷினகாளி கோயில் :

தக்ஷினகாளி கோயில் :

தட்சினேஸ்வர் காளி மாதாவின் அருளால் ஞானமடைந்த ராமகிருஷ்ண பரமஹம்சர் 30 வருடங்கள் இந்த காளி கோயிலில் தனது சீடர்களுடன் வாழ்ந்திருக்கிறார். ராமகிருஷ்ணரின் போதனைகளை கேட்பதற்காகவும், காளி மாதாவை தரிசிப்பதற்க்காகவுமே ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு யாத்திரை வந்திருக்கின்றனர்.

தக்ஷினகாளி கோயில் :

தக்ஷினகாளி கோயில் :

தட்சினேஸ்வர் காளி கோயிலில் இருக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சர் வாழ்ந்த அறை.

தக்ஷினகாளி கோயில் :

தக்ஷினகாளி கோயில் :

பழமையான 'நவ ரத்தினா' என்ற வங்காள கட்டிட முறைப்படி கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கருவறையில் பவ தாரணியாக மிக உக்கிரமாக காட்சி தருகிறார் துர்க்கை அம்மன்.

தக்ஷினகாளி கோயில் :

தக்ஷினகாளி கோயில் :

தட்சினேஸ்வர் காளி கோயிலை நிறுவியவரும் தன் வாழ்நாள் முழுக்க பெரும் காளி பக்தையாக வாழ்ந்தவருமான ராணி ரஷ்மோனி அவர்களுக்கும் ஒரு சிறிய கோயில் இந்த தட்சினேஸ்வர் காளி கோயில் வளாகத்திலேயே இருக்கிறது.

கொல்கத்தாவில் நாம் நிச்சயம் செல்லவேண்டிய ஆன்மீக ஸ்தலங்களில் இக்கோயில் மிக முக்கியமானதாகும்.

பிர்லா மந்திர் கோயில்

பிர்லா மந்திர் கோயில்

தட்சினேஸ்வர் கோயிலுக்கு அடுத்தபடியாக கொல்கத்தா நகரில் இருக்கும் முக்கியமான ஆன்மீக ஸ்தலம் தான் பிர்லா மந்திர் கோயிலாகும்.

கிருஷ்ணர் கோயிலான இது நாடறிந்த தொழிலதிபர்களான 'பிர்லா' குடும்பத்தினரால் கட்டப்பட்டதாகும். 1970ஆம் ஆண்டு தொடங்கி 1996ஆம் ஆண்டில் தான் இது கட்டிமுடிக்கப்பட்டிருக்கிறது.

Kolkatan

கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தா நகரில் இருக்கும் சுற்றுலாத்தலங்கள் பற்றிய தகவல்களையும், அங்கிருக்கும் ஹோட்டல்கள் பற்றிய விவரங்களையும் தமிழில் இருக்கும் ஒரே பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் தெரிந்துகொள்ளுங்கள்.

Read more about: kolkata ajith monuments
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X