Search
  • Follow NativePlanet
Share
» »விவேகானந்தர் தனது குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தது எங்கே தெரியுமா?

விவேகானந்தர் தனது குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்தது எங்கே தெரியுமா?

By Naveen

மேற்கு வங்காளம் இந்திய திருநாட்டிற்கு வழங்கிய கொடை அளப்பரியது. சுபாஷ் சந்திர போஸும், ரபிந்தரநாத் தாகூரும் விவேகானந்தரும் பிறந்த மண் அது. இந்தியாவிலேயே இங்கே தான் அதி சுவையான இனிப்புகள் கிடைக்கின்றன என்றும் சொல்லலாம். ஒரு முறை சுவைத்தாலே போதும் ரசகுல்லாவுக்கும், மிஷ்டி தோய்க்கும் இணையென்று எதுவும் இவ்வுலகில் உண்டோ என கேட்போம்.

அதோடு செழுமையான மொழியும், சகஸ்ர வருடங்களுக்கும் மேலான வரலாறு கொண்ட மேற்கு வங்காளத்தின் மிகவும் பிரபலமான காளி கோயில் ஒன்றினை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள். இதைப்பற்றி தெரிந்தவுடன் இங்கே செல்லாமல் இருக்கவே முடியாது.

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

மேற்கு வங்காளத்தின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக, அம்மாநிலத்தின் மிகப்பிரபலமான ஆன்மீக ஸ்தலமாகவும் திகழும் கோயில் ஹூக்லி நதியின் கிழக்கு கரையில் அமைந்திருக்கும்தக்ஷிநேஸ்வர் காளி கோயில் ஆகும்.

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

இக்கோயில் ஹவ்ராஹ் பாலத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில்தக்ஷிநேஸ்வர் என்ற ஊரில் அமைந்திருக்கிறது.

இக்கோயிலில் மூலவராக காளி 'பவதாரணி' ரூபமாக வீற்றிருக்கிறார்.

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

இந்த கோயில் 18ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் வாழ்ந்த 'ராணி ரஷ்மோனி' என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது.

பெரும் காளி பக்தையான ராணி ரஷ்மோனி வங்காளத்தின் மிகப்பெரிய நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார்.

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

காளியின் மீது கொண்ட பேரன்பினாலும், அதீத பக்தியினாலும் அவரை தரிசிக்க காசிக்கு புறப்படத் தயாரிக்கொண்டிருந்த ராணியின் கனவில் தோன்றிய காளி தேவி ஹூக்லி நதிக்கரையில் தக்ஷிநேஸ்வர் தனக்கொரு கோயில் எழுப்பும்படி கேட்டுக்கொண்டதாகவும், அதன்படியே பெரும் பொருட்செலவு செய்து ராணி ரஷ்மோனி இக்கோயிலை கட்டியதாகவும் சொல்லப்படுகிறது.

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

1847ஆம் ஆண்டு கோயில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1855 ஆண்டு மே மாதம் 31 தேதி ஸ்நான யாத்திரைக்கு பிறகு காளி மாதா சிலை இக்கோயிலில் ஸ்தாபிக்கப்பட்டது.

160 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கோயிலை கட்டி முடிக்க ஒன்பதாயிரம் ருபாய் செலவாகியிருக்கிறது.

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

இங்கு வீற்றிருக்கும் காளி கோயில் பிரபலமாக முக்கிய காரணம் ஸ்ரீ ஸ்ரீ ஜகதீஸ்வரி மாகாளி கோயில் என்று நாமம் சூட்டப்பட்ட இக்கோயிலின் முதல் தலைமை அர்ச்சகராக ராம்குமார் என்பவற்றின் சகோதரர் ஆவார்.

அது யார் என கேட்கிறீர்களா?. அவர் தான் கடாதார் சதோபாத்யா என்ற இயற்ப்பெயர் கொண்ட பின்னாளில் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று உலகம் முழுக்க அறியப்பட்ட ஆன்மீக குரு ஆவார்.

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

19ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமான ஆன்மீக குருவாக போற்றப்படும் ராமகிருஷ்ண பரமஹம்சர் 30 ஆண்டுகள் தன் சிஷ்யர்களுடன் தங்கி ஆன்மீக பணியில் ஈடுபட்டது இக்கோயிலில் தான்.

இன்றும் பரமஹம்சர் வாழ்ந்த அறைகளை இங்கே நாம் பார்க்கலாம்.

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

இங்கே தான் துடிப்பான, ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சிறுவனாக இருந்த சுவாமி விவேகானந்தர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் போதனைகள் பெற்று அவர் இயற்கை எய்தும் வரை அவரது சீடராக இக்கோயிலில் வாழ்ந்தார்.

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

வங்காள கட்டிட என்ற பழமையான 'நவ ரத்தினா' முறைப்படி கட்டப்பட்டுள்ள இக்கோயிலின் கருவறையில் பவ தாரணியாக மிக உக்கிரமாக காட்சி தருகிறார் துர்க்கை அம்மன்.

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

இக்கோயில் வளாகத்தில் 'ஆட் சலா' என்ற வங்காள கட்டிட முறைப்படி கிழக்கு பார்த்தப்படி இருக்கும் ஒரே மாதிரியான பன்னிரண்டு சிவன் கோயில்கள் இருக்கின்றன.

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

ராமகிருஷ்ணரின் மனைவியான சாராதா தேவி அவர்கள் துறவு வாழ்க்கை வாழ்ந்த அறை !!

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

தக்ஷிநேஸ்வர் காளி கோயில்

அடுத்த முறை கொல்கத்தா செல்லும் வாய்ப்புக்கிடைத்தால் நிச்சயம் இந்த கோயிலுக்கு செல்ல மறந்துவிடாதீர்கள்.

இக்கோயில் அமைந்திருக்கும் கொல்கத்தா நகரை பற்றிய மேலும் பல தகவல்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்துகொள்ளுங்கள்.

கொல்கத்தா ஹோட்டல்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X