Search
  • Follow NativePlanet
Share
» »இதுவரை பார்த்திராத நம்ம சென்னையின் அரிய புகைப்படங்கள்

இதுவரை பார்த்திராத நம்ம சென்னையின் அரிய புகைப்படங்கள்

சென்னை, இந்த நகரத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா என்ன ?. வாழ்கையில் சாதிக்கவேண்டும் என்ற கனவுடன் வரும் ஒவ்வொருவரையும் அரவணைத்து செல்லும் ஒரு இடம் உலகத்தில் உண்டென்றால் அது சென்னை தான். கல்வி, வேலை என பல காரணங்களுக்காக நம் சொந்த ஊரை விட்டு வந்து சென்னையில் குடியிருந்தாலும் விடுமுறைக்காக சில நாட்கள் ஊருக்கு போகும் போது கூட சென்னையை மிஸ் பண்ணத்தான் செய்கிறது மனது. அப்படி நம் ஒவ்வொருவருக்கும் ரொம்பவும் ஸ்பெஷலான சென்னை நகரின் அரிய பழைய புகைப்படங்களின் தொகுப்பை காண்போம் வாருங்கள்.

மேக் மை ட்ரிப் தளத்தில் விமான கட்டணங்களில் 15%தள்ளுபடி பெறுவதற்கான கூப்பனை இங்கே பெற்றிடுங்கள்

மெரினா பீச் :

மெரினா பீச் :

மெரினா பீச் இல்லாத சென்னையை நம்மில் பலரால் நினைத்து கூட பார்க்க முடியாது. சினிமா தியேட்டர்களை விட்டால் சென்னையில் பொழுது போக்க ஒரே வழி இந்த கடற்கரைக்கு வருவது தான்.

மிகச்சரியாக 100 வருடங்களுக்கு முன்பு அதாவது1905ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

Photo:India Illustrated

சென்னை சட்டக்கல்லூரி:

சென்னை சட்டக்கல்லூரி:

சென்னையின் மிகப்பரப்பரப்பான பகுதிகளில் ஒன்றான ஜார்ஜ் டவுன் பகுதியில் அமைந்திருக்கும் சென்னை சட்டக்கல்லூரியின் பழைய புகைப்படம்.

இப்புகைப்படமும் 1905ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதே.

Photo:India Illustrated

சென்னை உயர்நீதி மன்றம் :

சென்னை உயர்நீதி மன்றம் :

பல சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதி மன்றம் பேரிஸ் கார்னர் பகுதியில்அமைந்திருக்கிறது. 1905ஆம் ஆண்டு எடுக்கபப்ட்ட புகைப்படமிது.

Photo: Wikimedia

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்.

Photo:India Illustrated

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

பழைய மூர் மார்கெட் கட்டிடத்தின் புகைப்படம்.

Photo:India Illustrated

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமும், மெட்ராஸ் கிரிக்கெட் கிளப்பும்.

Photo : Wikimedia

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

ஆற்காடு நவாப்பின் அரண்மனையாக திகழ்ந்த சேப்பாக்கம் மாளிகை.

Photo: Wikimedia

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னை மாநகரின் பழங்கால வரைபடம்.

Photo: Wikimedia

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

1843ஆம் ஆண்டு கட்டப்பட்ட மெட்ராஸ் வங்கி கட்டிடத்தின் புகைப்படம். இது தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமையகமாக செயல்பட்டு வருகிறது.

Photo: Wikimedia

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

மெட்ராஸ் கிளப் அல்லது அடையார் கிளப் என அழைக்கப்படும் இந்த இடம் 1832ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்தியாவில் இருக்கும் இரண்டாவது மிகப்பழமையான கிளப் இதுவாகும்.

photo: Wikimedia

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

ராஜாஜி ஹால் என அழைக்கப்படும் இந்த கட்டிடம் 1800-1802ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டிருக்கிறது. மைசூர் போரில் திப்பு சுல்தானுக்கு எதிரான போரில் பிரிட்டிஷ் படைகளின் வெற்றியை நினைவுகூரும் விதமாக இது கட்டப்பட்டிருக்கிறது.

Photo: Wikimedia

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

பொது தபால் நிலைய கட்டிடம். இது சென்னையில் உள்ள ராஜாஜி சாலையில் பெரிஸ் கார்னர் பகுதியில் அமைந்திருக்கும் மிகப்பழமையான கட்டிடமாகும்.

Photo: Wikimedia

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அடுத்து சென்னையின் மிக முக்கியமான ரயில் நிலையமேன்றால் அது எக்மோர் ரயில் நிலையம் தான். வாகன நெரிசலோ, மக்கள் கூட்டமோ இல்லாத அக்கால எக்மோர் ரயில் நிலையத்தின் புகைப்படம்.

Photo: Wikimedia

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

இன்றைய தமிழக அரசின் தலைமை செயலகமாக இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் ஒரு பகுதி.

Photo: Wikimedia

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

சென்னையின் அரிய புகைப்படங்கள் :

நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த சென்னை நகர வீதி ஒன்று.

photo: Wikimedia

Read more about: chennai old photos
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X