Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் பழமையான புத்த மடாலயத்தை பற்றி தெரியுமா?

இந்தியாவில் பழமையான புத்த மடாலயத்தை பற்றி தெரியுமா?

By Staff

ஹிந்துமதம் போன்றே பௌத்தமும் இந்தியாவில் தோன்றிய வாழ்க்கை நெறிகளில் ஒன்றாகும். 10ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியா வரை பரவியிருந்த பௌத்தம் இன்று இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலான மக்களாலேயே பின்பற்றப்படுகிறது. இலங்கை, சீனா, ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளிலும், இந்தியாவில் திபெத்தை ஒட்டிய பகுதிகளில் மட்டுமே பௌத்தம் பரவலாக பின்பற்றப்படுகிறது.

இந்தியாவில் பழமையான புத்த மடாலயத்தை பற்றி தெரியுமா?

Pamri

புத்தர் பிறந்த இடம், அவர் ஞானமடைந்த இடம் என பௌத்த மதத்தின் புனித ஸ்தலங்கள் இந்தியாவில் ஏராளமாக உண்டு. அவற்றில் ஒன்று தான் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக் நகருக்கு அருகில் இருக்கும் ரும்டெக் புத்த மடாலயம் ஆகும். இது தான் இந்தியாவில் இருக்கும் மிகவும் பழமையான புத்த மடாலயமாகும்.

கடல் மட்டத்தில் இருந்து 5000அடி உயரத்தில் இமயமலையில் அமைந்திருக்கும் இந்த மடாலயத்தின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. இன்றைய புத்த மத தலைவரான தலாய் லாமா இந்தியாவில் அடைக்கலம் புகுந்திருப்பதை போலவே 17ஆம் நூற்றாண்டில் சீனப்படைகள் திபெத்தை கைப்பற்றிய பிறகு அங்கிருந்து தப்பித்து 'ரும்டெக்' என்ற இவ்விடத்தில் அடைக்கலம் புகுந்தான் 16ஆம் கர்மபா என்ற திபெத்திய அரசன்.

இந்தியாவில் பழமையான புத்த மடாலயத்தை பற்றி தெரியுமா?

flowcomm

அந்த அரசனால் 1740ஆம் ஆண்டு ரும்டெக்கில் புத்த மடாலயம் கட்டப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் பராமரிப்பின்றி சிதலமடைந்திருந்த இந்த மடம் 1961ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது. திபெத்திய கட்டிடக்கலை அமைப்பின்படி கட்டப்பட்டிருக்கும் இந்த மடாலயத்தின் சுவர்களில் புத்தரின் வாழ்க்கை பயணத்தை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

எப்படி அடைவது?:

இந்த ரும்டெக் மடாலயம் சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான கேங்டாக்கில் இருந்து 24கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. அக்டோபர் - டிசம்பர் வரையிலான மாதங்கள் இங்கே செல்ல சிறந்த காலகட்டமாகும்.

Read more about: spiritual places gangtok
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X