Search
  • Follow NativePlanet
Share
» »உலக நாயகன் கமலஹாசனுடன் பாபநாசம் போகலாம் வாங்க...

உலக நாயகன் கமலஹாசனுடன் பாபநாசம் போகலாம் வாங்க...

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் 'பாபநாசம்' படம் வெளியாகியிருக்கும் இந்த வேளையில் திருநெல்வேலி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான பாபநாசம் என்ற இடத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

பாபநாசம் அமைந்திருக்கும் திருநெல்வேலி மாவட்டத்தை பற்றிய விவரங்களை தமிழ் பயண வழிகாட்டியில் அறிந்து கொள்ளுங்கள்

'பாபநாசம்' :

'பாபநாசம்' :

எந்த ஆசகாய நாயகனும் இல்லாத எளிமையான குடும்பஸ்தன் ஒருவனை பற்றிய கதை பல மொழிகளிலும் மறுவுருவாக்கம் செய்யப்பட்டு வெற்றி பெற்றது இந்திய திரைப்பட வரலாற்றிலேயே அரியதொரு நிகழ்வாகும்.

மலையாளத்தில் எடுக்கப்பட்ட 'திருஸ்யம்' திரைப்படம் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் 'பாபநாசம்' என்ற பெயரில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

'பாபநாசம்' :

'பாபநாசம்' :

இந்த திரைப்படம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற ஊரில் வாழும் ஒரு சாதாரண மனிதனின் வாழ்கையில் நடக்கும் சில விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

கண்களுக்கு இனிமை தரும் இயற்கை அழகும், செவிகளை மயக்கும் திருநெல்வேலி வட்டார வழக்கும் புழங்கும் இந்த 'பாபநாசம்' கண்டிப்பாக ஒருமுறையேனும் போகவேண்டிய இடமாகும்.

'பாபநாசம்' :

'பாபநாசம்' :

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் அம்பாசமுத்திரம் தாலுக்காவில் இந்த பாபநாசம் என்ற ஊர் அமைந்திருக்கிறது .

Photo:Stalin T

'பாபநாசம்' :

'பாபநாசம்' :

திருநெல்வேலியில் இருந்து 60 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த ஊரில் வருடம் முழுக்க வற்றாமல் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆறு, அகஸ்தியர் அருவி, பாபநாசம் அணை, வான தீர்த்தம் அருவி, பாபநாசம் சிவன் கோயில் ஆகியவை முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளாக இருக்கின்றன. இவற்றில் சிலவற்றைப்பற்றி அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

Photo:Prakash

பாபநாசம் அணை :

பாபநாசம் அணை :

பாபநாசத்தின் முக்கிய இடங்களில் ஒன்றான இந்த அணை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கிறது. சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க அருமையான இயற்கை காட்சிகளை நாம் இங்கே காணமுடியும். மாலை நேரத்தில் இந்த அணைப்பகுதியில் மலைகளுக்கு பின்னால் சூரியன் அஸ்தமிக்கும் காட்சி அத்தனை அற்புதமாக இருக்கும்.

Photo: Wikimedia

அருவிகள் :

அருவிகள் :

பாபநாசத்தில் இரண்டு முக்கிய அருவிகள் இருக்கின்றன. அவை அகஸ்தியர் அருவி மற்றும் வான தீர்த்தம் அருவி ஆகியவை தான். சிவனும் பார்வதியும் மாமுனிவரான அகத்தியருக்கு இந்த அருவியின் முன் தோன்றி காட்சியளித்ததனாலேயே அகத்தியர் அருவி என்று அழைக்கப்படுகிறது. ஜூலை - நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்த அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும்.

Photo:Sankara Subramanian

பாபநாசம் சிவன் கோயில் :

பாபநாசம் சிவன் கோயில் :

பாவங்களை அழிக்கும் பாபநாசநாதர் உமையாள் உலகம்மையுடன் வீற்றிருக்கும் பாபநாசம் சிவன் கோயில் இந்த நகரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.

பாவங்களை அழிக்கும் பாபநாசநாதர் உமையாள் உலகம்மையுடன் வீற்றிருக்கும் பாபநாசம் சிவன் கோயில் இந்த நகரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் இந்த கோயிலானது நவ கயிலாயங்களில் சூரிய பகவானுக்கு உரிய கோயிலாகும். 13 நாட்கள் நடக்கும் 'சித்திரை பெருவிழா' இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும்.

மாஞ்சோலை :

மாஞ்சோலை :

பாபநாசத்தில் இருந்து 35 கி.மீ தொலைவில் பசுமை பொங்கும் மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள் அமைந்திருக்கின்றன. அருமையான இயற்கை காட்சிகளையும், வன விலங்குகளையும் புகைப்படம் எடுக்க விரும்புகிறவர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ஒரு இடம் இந்த மாஞ்சோலை ஆகும்.

Photo: Flickr

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X