Search
  • Follow NativePlanet
Share
» »கண்களை கவர்ந்திழுக்கும் டாப் 10 சாலை வழிப் பயணங்கள்

கண்களை கவர்ந்திழுக்கும் டாப் 10 சாலை வழிப் பயணங்கள்

கண்களை கவர்ந்திழுக்கும் டாப் 10 சாலை வழிப் பயணங்கள்

அலறும் ஹாரன் சத்தம், போக்குவரத்து காவலரின் விசில் சத்தம், எரிச்சலூட்டும் வாகன இயந்திர (இன்ஜின்) சத்தம் இதனால் வாகனங்கள் மட்டுமில்லாமல் மண்டையும் சூடாகி கோபத்தின் உச்சிக்கே போய்விடுகிறோம் நம்ம ஊர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி...

எந்தவித இடையூறும் இல்லாமல் நெடுந்தூரம் வாகனத்தில் பயணிக்க ஆர்வமில்லாதவர்கள்தான் யார்? அதிலும் சன்னல் கதவுகள் வழியே காணக்கிட்டாத காட்சிகளை ஆர்வமாக பார்த்து, ஒருவித பூரிப்புடன் ரெம்ப தூரம் போகணும்னு ஆசைப்படுறீங்களா?

அப்போ இது உங்களுக்கான கட்டுரைதான்!

 புதுதில்லி - கசவ்லி

புதுதில்லி - கசவ்லி


இந்த பயணம் தில்லி, ஹரியானா, இமாச்சல பிரதேசம் என மூன்று மாநிலங்கள் வழியாக செல்லும்.

மலைகள், காடுகள், பனிகள் என கண்ணுக்கு விருந்தளிக்கும் அத்தனை காட்சிகளும் கண்டுகளிக்கலாம்.

மொத்த தூரம்: 288கிமீ

சராசரி பட்ஜெட் : 5500 முதல் 6000ரூபாய்

கண்டிப்பாக இந்த பயணத்தை நண்பர்களுடன் செல்ல பரிந்துரைக்கிறோம். அப்போதுதான் உண்மையான மகிழ்ச்சியை நீங்கள் உணரமுடியும். நண்பர்களின்றி இவ்வுலகில் கொண்டாட்டம் ஏது?

Travelling Slacker

பெங்களூரு - ஊட்டி

பெங்களூரு - ஊட்டி

இந்த பயணம் வாரவிடுமுறை நாட்களில் உண்மையிலேயே விடுமுறை பெறும் பணியாளர்களுக்கானது. சுற்றிவளைக்காமல் சொல்லவேண்டுமென்றால் ஐடியில் பணிபுரியும் நண்பர்களுக்கானது.

நாங்கள் மட்டும் என்ன தக்காளி தொக்கா என நினைக்கவேண்டாம். நீங்களும் செல்லமுடியும். ஆனால் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுங்கள். அதற்காக இந்த வழிகாட்டி உங்களுக்கு உதவும்.

மொத்த தூரம் 277கிமீ

சராசரி பட்ஜெட் 5550ரூ

இந்த பயணத்தையும் நண்பர்களுடன் கொண்டாடுவதே சிறப்பு. அல்லது உங்கள் வாழ்க்கைத் துணை, காதலியுடனும் செல்லலாம்.

david baxendale

 மும்பை - புனே

மும்பை - புனே

மும்பை புனே விரைவு போக்குவரத்து வழித்தடம் மற்ற இடங்களை ஒப்பிடும்போது வாகனங்கள் மிகவேகமாக நகரும் சாலையாகும்.

பொதுவாகவே, மலையின் அருகே சாலைப் பயணம் குளிர்ச்சியும், இயற்கை அழகும் நிறைந்த பயணமாக அமையும்.

அப்படி இல்லாத சமயங்களில் நீர்நிலைகளும், வயல்வெளிகளும் உங்கள் மனதை பண்படுத்தும். உங்கள் உற்சாகத்துக்கு இயற்கை உத்திரவாதம் தரும்.

மொத்த தூரம் 148

உங்கள் கல்லூரி நண்பர்களை ஒட்டுமொத்தமாக அழைத்துச் செல்லுங்கள். அப்படியே இரண்டு மூன்று நாள்கள் கொண்டாடிவிட்டு வாருங்கள்.

Ramnath Bhat

 கவகாத்தி - டாவ்க்கி

கவகாத்தி - டாவ்க்கி

நீங்கள் வடகிழக்கு இந்தியாவைப் பற்றி இன்னும் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றால் நிச்சயமாக இந்த சாலைப் பயணத்துக்கு சென்று வாருங்கள்.

மொத்த தூரம் 175 கிமீ

வங்கதேச எல்லைக்கு அருகே அமைந்துள்ள இந்த இடம் உண்மையில் மிகச் சிறப்பானதாக இருக்கிறது.

Santanu Sen

 ஹைதராபாத் - கர்நூல்

ஹைதராபாத் - கர்நூல்

துங்கபத்திரை நதியின் துணையோடு, ஒரு நெடுந்தூர சாலைப் பயணம் செல்வதென்றால் மிகவும் அலாதியான ஆள்தானே நீங்கள்.

நதிக்கரையில் நடப்பது எப்படி சுகமானதோ அதேப்போல இந்த சாலைப்பயணம் உங்களை மெய்சிலிர்க்க வைக்கும்.

மொத்த தூரம் 213 கிமீ

ஒரு மூன்று நாள் விடுமுறைக்கு இந்த பயணத்தை மேற்கொள்ளுங்கள். வாழ்வில் நிறைந்த அனுபவத்தை அடைவீர்கள்.

Balamurugan Natarajan

 ஜெய்ப்பூர் - ரன்தம்பூர்

ஜெய்ப்பூர் - ரன்தம்பூர்


ஒரு பாலைவன நகரத்திலிருந்து ஒரு வண்ணமயமான நகரத்துக்குள் நுழைகிறது இந்த பயணம்.

ராஜஸ்தானைப் பற்றி உங்களுக்கு சொல்லியாத் தெரியணும்.

மொத்த தூரம் 167 கிமீ

Ansel W

 ஷில்லாங் - சிரபுஞ்சி

ஷில்லாங் - சிரபுஞ்சி

இந்த தொகுப்பிலேயே சிறிய அளவு தூரம் கொண்ட பயணம் இதுதான். ஆனால் ஒட்டுமொத்தத்தில் சிறப்பான பயணமாக அமையும்.

ஆழமான ஆறு, அதிக உயரத்திலிருந்து பாயும் நீர்வீழ்ச்சி என பல எண்ணற்ற சுற்றுலாத் தளங்களைக் கொண்ட நகரத்துக்குள்ளே நெடுந்தூர பயணம் என்றால் எப்படி இருக்கும்

மொத்த தூரம் 54கிமீ

குகைகள், மரங்கள், செடி கொடிகள் என பச்சை வண்ண உலகத்துக்குள்ள வாழ்ந்துவிட்டு வந்த அனுபவம் கிடைக்கும்.

Arup Malakar

 கொல்கத்தா - டிக்கா

கொல்கத்தா - டிக்கா

வங்க மாநகரிலே பாரம்பரியமான தெருக்களிலே ஓடியாடி இருந்துவிட்டு, ஒரு நெடுந்தூர பயணம் மேற்கொள்வது கண்களுக்கு விருந்தளிக்கும்.

187கிமீ தூரம் கொண்ட இந்த பயணம் கொல்கத்தாவிலிருந்து டிக்கா வரை நீளும்.

Arko Sen

 விசாகப்பட்டினம் - அரக்கு பள்ளத்தாக்கு

விசாகப்பட்டினம் - அரக்கு பள்ளத்தாக்கு

தெலுங்கு தேசத்திலே மலைகளையும் பள்ளத்தாக்குகளையும் கொண்ட நெடுந்தூர பயணம் மிகவும் சிறப்பான சாலைகளில் அமையட்டும்.

விசாகப்பட்டினத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு வரை செல்லும் இந்த பயணம் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாததாக இருக்கும்.

மொத்தம் 116கிமீ தூரம் கொண்ட இந்த பயணம் மலையேற்றம் நிறைந்ததாகவும் காணப்படும்.

roadconnoisseur

 சென்னை - பாண்டிச்சேரி

சென்னை - பாண்டிச்சேரி

இந்தியாவில் இருப்போருக்கு அதிலும் தமிழகத்தில் இருப்போருக்கு பாண்டிச்சேரியின் அருமை பெருமை தெரிவதில்லை.

பாண்டிச்சேரி என்றாலே சரக்கு மலிவாக கிடைக்கும் என்று நினைப்பவர்கள்தான் அதிகம். அப்படித்தான் திரைப்படங்களிலும் காட்டுகிறார்கள்.

ஆனால் உண்மையில் பாண்டிச்சேரி ஒரு சொர்க்கம். வெளிநாட்டினருக்கு தெரிந்த அளவுக்குகூட நமக்கு தெரியவில்லை. சென்று வாருங்கள் அதிலும் கிழக்கு கடற்கரை சாலை வழி பயணம் அலாதி பிரியமாக இருக்கும்

மொத்த தூரம் 160 கிமீ.

Read more about: travel tour roadtrip
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X