உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

மெய் சிலிர்க்க வைக்கும் தமிழரின் அறிவியல்!.. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய உலோகம் பிரிக்கும் தொழிற்சாலை.

Written by: Udhaya
Updated: Tuesday, March 21, 2017, 9:31 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments


தமிழரின் பெருமைகளை வாழ்வியல், வீரம், வரலாறுகள், பண்பாடு, அறிவியல் என எழுதிக்கொண்டே போகலாம். அந்த அளவுக்கு தஞ்சை பெரிய கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், மதுரை மீனாட்சிகோவில் என கோவில்களிலும் அறிவியலை சம்பந்தபடுத்தியுள்ளனர் நம் தமிழ் முன்னோர்கள்.

தமிழரின் பெருமைகள் அனைத்தும் வாழ்வியலையும், அறிவியலையும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு சேர்க்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம். அந்த வகையில் கோவில்களை புராதன சின்னங்களாக மாற்றி பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். ஆனால் பண்டையக் காலத்திலிருந்த அரண்மனைகள், நகரங்கள் இயற்கைப் பேரழிவினாலும், காலத்தாலும் அழிந்துவிட்டன. அல்லது அவற்றை நாம் பராமரிக்கத் தவறிவிட்டோம் என்றே சொல்லலாம். சரி அப்படி என்னபெரிய அறிவியல்... தமிழர்களின் அறிவியல் மூளை எந்த அளவு என்று கேட்கலாம்... அப்படி தன்னை தன் தலைமுறைகளுக்கும் பேசச்செய்யும் ஒரு முயற்சியைத்தான் தமிழன் செய்துள்ளான்.

புல்லின் நுனியில் லென்ஸின் தத்துவம், அணு அறிவியல் போன்றவற்றை தமிழன் தான் கண்டறிந்தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா? நம்புங்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே உலோகங்களை உருக்கி பாத்திருங்கள் கருவிகள் செய்துள்ளான் நம் தமிழன். எங்கு தெரியுமா பொன்பரப்பினான் கோட்டை....

உலோகத்தொழிற்சாலை

 

உலோகத்தொழிற்சாலை என்பது அமைக்கப்பட்டு 500 ஆண்டுகள் கூட ஆகவில்லை என்று நீங்கள் நினைத்திருந்தால் தமிழனின் அறிவியலை நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்.

 

எங்கே உள்ளது?

 

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை என்ற கிராமத்திற்கு வெளியில் ஆள் அரவமற்ற ஒரு திறந்த நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது இந்த தொழிற்சாலை.

 

2500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு ,அலுமினியம் ,டைட்டானியம் தொழிற்சாலை கட்டிய தமிழன்

 

இந்த பகுதிகளில் செம்புரான்கற்கள் என்றழைக்கப்படும் இரும்பு உட்பட பல தாதுக்கள் நிறைந்த கற்கள் அதிகளவில் கிடைக்கின்றன. இரும்பு அலுமினியம் டைட்டானியம் போன்ற தாதுக்கள் அதிகளவில் இந்த கற்களிலிருந்து பிரித்தெடுக்கலாம். இந்த அறிவியலை 2500 ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்துள்ளான் தமிழன்.

 

உலகப்புகழ் உங்களுக்கு தெரியுமா

 

2500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தொழில்நுட்பம் கற்றறிந்த தமிழனை பல்வேறு நாட்டவர் பெருமைக்குரியதாக கருதுகின்றனர். புதுக்கோட்டை தொல்லியல் துறை இதனை உறுதிபடுத்தியுள்ளது. ஆமா இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?

 

உலகின் முதல் பொறியாளன்

 


தமிழனின் உலோக உருக்கு ஆலையில் பிரித்தெடுக்கப்பட்ட உலோகங்களை வைத்து பல்வேறு கருவிகள் செய்துள்ளான்.அதன்படி பார்க்கையில் உலகில் முதல் பொறியாளனும் தமிழன்தானே...

 

உலகின் முதல் விஞ்ஞானி

 

உலகின் விஞ்ஞானிகள் குழுவில் இடம்பெரும் பெயர்கள் அனைத்தும் அதிகபட்சம் 500 ஆண்டுகள் வரைதான். அதற்கு முந்தையகாலத்திலேயே 2500 வருடங்களுக்கு முன் பாறையையே கருவியாக கண்டுபிடித்து வடிவமைத்த தமிழன் உலகின் முதல் விஞ்ஞானி என்பதில் உங்களுக்கு மாற்றுக்கருத்து இருக்கிறதா?

 

செம்புரான்கற்கள் உடைக்கப்பட்டதிலும் அறிவியல்

 

கற்களில் கறுப்பு, வெளிர்நிறம் என சில நிறங்களில் அடுக்கடுக்காக காணப்படுகிறது. அவைதான் இரும்பு முதலிய தாதுக்களின் மூலப்பொருட்களாகும்.

 

வெடிமருந்து கண்டறிந்ததும் தமிழன்தான்

 

பாறைகளை எப்படி எடுத்தார்கள் என்பது சில ஐயப்பாடுகள் இருந்தாலும், கனமான வெட்டுவதற்கு கடினமான பாறைகளை வெடி வைத்துதான் எடுத்திருப்பார்கள் என்கின்றனர் தொல்லியல் துறையினர். அப்போது வெடிமருந்து கண்டுபிடித்திருந்தால் அதுவும் தமிழனுக்கு பெருமைதானே..

 

குளிர்வித்தல்

 

வட்டவடிவ தொட்டியில் செய்யப்பட்ட உலோகத்தை நீள்வடிவ தொட்டியில் இட்டு குளிர்வித்துள்ளனர். குளிர்வித்தல், உருக்குதல் என அறிவியலை கரைத்துகுடித்துள்ளான் தமிழன் என்பதற்கு இதை விட வேறென்ன சான்று தேவை..

 

வேறொரு தொழில்நுட்பம்


வெடி வைக்கவில்லை என்றால், வெட்டி எடுக்கப்படவும் வாய்ப்பில்லை என்றால் பின் எப்படி பாறைகளை பொடியாக்கி உருக்கினார்கள்.. அப்போ வேறொரு தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர் என்றுதானே அர்த்தம்.

உருக்கியது எப்படி


இந்த உலோக உருக்கு ஆலையில் 10க்கும் அதிகமான தொட்டிகள் உள்ளன. அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, முடிவில் ஒரு துருத்தியுடன் இணைக்கப்பட்டுள்ளன. காற்றை செலுத்தி தீயை மூட்டி உருக்கியுள்ளனர் உலோகத்தை.

வேறெங்கல்லாம் உள்ளன

 

தமிழகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர், ஆழ்வார் திருநகரி, கொடுமணல் உள்ளிட்ட இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள உலோகப் பிரிப்பு மற்றும் உருக்கு ஆலைகள் பெரும்பாலும் மண் மற்றும் செங்கல் கட்டுமான அமைப்புகளாகவே உள்ளன. ஆனால் 2500 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்ட இந்த பிரிப்பு தளம் தமிழனின் சிறப்புக்களில் நிச்சயம் நாம் பகிரக்கூடிய ஒன்று.. தமிழர்களின் பெருமையை உலகுக்குணர்த்துவோம். தமிழராய் பகிர்வோம்...

 

Read more about: travel
English summary

lets go to porpanikottai village at pudukottai for a forest range tour

lets go to porpanikottai village at pudukottai for a forest range tour
Please Wait while comments are loading...