உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

பனியாறுகளின் தாயகத்துக்கு ஒரு பயணம் செல்வோமா?

Written by: Udhaya
Published: Friday, July 14, 2017, 12:20 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments


இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உத்தரகண்ட் மாநிலம், ஏராளமான சுற்றுலாத் தலங்களை கொண்டிருக்கிறது. அவற்றில் முக்கியமான ஒரு அழகிய சுற்றுலாத் தலம் கோமுக் ஆகும்.

இந்த கோமுக் பகுதி கங்கோதரி கிளேசியரின் (பனி ஆறு) முடிவில் அமைந்திருக்கிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்ரகாஷி மாவட்டத்தில் கோமுக் அமையப்பெற்றுள்ளது. இந்த இடத்தைப் பற்றி விரிவாக காணலாம்.

ஷிவ்லிங் மலை

 

ஏராளமான மலைகளால் சூழப்பட்டிருக்கும் கோமுக்கிற்கு அருகில் ஷிவ்லிங் மலை உச்சி உள்ளது. ஷிவ்லிங் மலை உச்சி, மலை ஏற்றத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்ற பகுதியாகும்.

Anirban Biswas

 

கங்கை நதியின் கிளை

 

கங்கை நதியின் கிளை ஆறுகளில் ஒன்றான பகிரதி நதியும் கோமுக் பகுதியில் உற்பத்தியாகிறது.

Atarax42.

 

டோப்பவன் சமவெளி

 

கோமுக்கிற்கு மிக அருகில் டோப்பவன் சமவெளி அமைந்திருக்கிறது. இந்த சமவெளியின் இயற்கை எழிலை அள்ளிப் பருகுவதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.

 

எப்படி செல்லலாம்

 

கோமுக் பகுதியின் அருகாமை விமான நிலையமாக டேராடூனில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையம் அறியப்படுகிறது. அதோடு ரயில் மார்க்கமாக கோமுக் வர விரும்பும் பயணிகள் 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹரித்வார் ரயில் நிலையத்தை பயன்படுத்தி கங்கோத்ரி வழியில் வரலாம்.

 

எப்போது செல்லலாம்

 

இதுதவிர உத்தரகண்ட்டின் பிற பகுதிகளிலிருந்து கோமுக் பகுதிக்கு எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் கோமுக் பகுதிக்கு சுற்றுலா வருவதற்கு கோடை காலமே ஏற்ற பருவமாக கருதப்படுகிறது.

 

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


பகிரதி ஆறு

கோமுக்கில் அமைந்திருக்கும் இன்னுமொரு முக்கிய அம்சம் அங்கு பாயும் பகிரதி ஆறு ஆகும். கங்கை ஆற்றின் கிளை ஆறான இந்த பகிரதி ஆறு கோமுக்கில் உற்பத்தியாகிறது.

Fowler&fowler

 

கங்கோதரி பனியாறு

 

இமயமலை பகுதியில் அமைந்திருக்கும் மிகப் பெரிய பனியாறுகளில் கங்கோதரி பனியாறும் ஒன்று. இந்த பனியாறு 27 கியூபிக் கிமீ வரை பரவியிருக்கிறது. இதன் நீளம் 30 கிமீ ஆகும்.இதன் அகலம் 4 கிமீ ஆகும்.

இந்த ஆறு முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பனியாற்றை சுற்றி ஷிவ்லிங், தலாய் சாகர் மேரு மற்றும் பகிரதி III போன்ற மலைச் சிகரங்கள் அமைந்திருக்கின்றன.

Pranab basak

 

கங்கோத்ரி

 

கங்கோத்ரி, உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தராக்ஷி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான யாத்திரை தலமாகும். இது இமாலயத்தின் எல்லைக்கருகே, கடல் மட்டத்திலிருந்து 3750 மீ உயரத்தில், பாகீரதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. ஆதி சங்கரரால் ஏற்படுத்தபட்ட `சார் தாம்', மற்றும் `டோ தாம்' ஆகிய புனித யாத்திரைகளில், கங்கோத்ரி முக்கிய இடம் பெறுகிறது.

Atarax42 .

 

யமுநோத்ரி

 

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்களுள் யமுநோத்ரி ஒரு முக்கியமான சுற்றுலாத் தலமாகும். புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை ஆற்றின் பெயரிலிருந்து இந்த பகுதி யமுநோத்ரி என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 3293 மீ உயர்த்தில் இருக்கும் யமுநோத்ரி பந்தர் பூஞ்ச் பகுதியில் அமைந்திருக்கிறது.

Atarax42

 

முசூரி

 

உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது முசூரி. சிவாலிக் மலைகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கின் எழில்மிகு தோற்றத்தை முசூரியில் இருந்து காணலாம். மேலும் மத ஸ்தலங்களான யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களின் நுழைவாயில் என்றும் முசூரி அழைக்கப்படுகிறது.

RajatVash

 

Read more about: travel, hills
English summary

Lets go trip to Gomukh and nearest places

Lets go trip to Gomukh and nearest places
Please Wait while comments are loading...