Search
  • Follow NativePlanet
Share
» »அதிசயம் ! ஆச்சர்யம் ! மனித காதுகளுக்கு கேட்கும் சிவனின் பஞ்சவாத்தியம் !

அதிசயம் ! ஆச்சர்யம் ! மனித காதுகளுக்கு கேட்கும் சிவனின் பஞ்சவாத்தியம் !

அதிசயம் ! ஆச்சர்யம் ! மனித காதுகளுக்கு கேட்கும் சிவனின் பஞ்சவாத்தியம் !

கோயம்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் ஒரு அதிசயம். கயிலாய மலையைக் கூட அடைந்துவிடலாம். ஆனால் கைக்கெட்டும் தொலைவில் உள்ள இந்த மலையை அடைய நிறைய மெனக்கெடல் வேண்டும்.

அப்படி என்ன அதிசயம் இந்த மலையில் என்கிறீர்களா? கயிலாயத்தில் கூட கேட்காத சிவபெருமானின் பஞ்சவாத்தியம் இந்த மலையில் மனிதர்களாகிய நம் காதுகளுக்கு கேட்கிறதாம்.

சிவபெருமானின்பால் பக்திகொண்டு மலையேறினால் உங்களுக்கும் கேட்கும். வாங்க போயி பார்க்கலாம்.

உயரம் எவ்ளோ தெரியுமா

உயரம் எவ்ளோ தெரியுமா

கடல் மட்டத்திலிருந்து கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ளது இந்த மலை சிகரம்.

Silvershocky

எத்தனை சிகரங்கள் தெரியுமா

எத்தனை சிகரங்கள் தெரியுமா

இந்த மலையில் ஏழு சிகரங்கள் உள்ளன. அதாவது ஒன்றின்மீது ஒன்றாக ஏழு. சிவபெருமானை தரிசிக்க ஏழு மலைகளை ஏறி கடக்கவேண்டும்.

கயிலாய மலை

கயிலாய மலை

போதிய அளவு பணமும், கொஞ்சம் உடல் வலிமையும் இருந்தால் இமய மலையிலுள்ள கயிலாயத்தை அடைந்துவிடலாம். ஆனால் இந்த மலை?

Ondřej Žváček

அகத்திய முனி

அகத்திய முனி

இது ஏழு முனிவர்களில் ஒருவரான அகத்தியர் தவம் செய்த இடமாகும்.

Ramanarayanadatta

 குடும்ப கோயில்

குடும்ப கோயில்


இது அகத்திய முனி பரம்பரையில் வந்தவர்களுக்கு வழிபாட்டுத்தலமாகும்.

Sdsenthilkumar

மலையின் ஆண்டவர்

மலையின் ஆண்டவர்

இவர் கிட்டத்தட்ட 4 யுகங்களுக்கு முன்னரே தோன்றிய சுயம்பு ஆகும். அதாவது தானாகவே முளைத்தவர்.

ஆண்டவரின் அமைவிடம்

ஆண்டவரின் அமைவிடம்

ஏழு மலைகள் கொண்ட அமைப்புல கடைசி மலையில் இயற்கையாக உருவான அந்த பாறைகளுக்கு இடையில் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார்.

ஏழுமலைகளைக் கடந்து சாமி தரிசனம்

ஏழுமலைகளைக் கடந்து சாமி தரிசனம்

ஒரு முறை மலையேறுவதென்று முடிவெடுத்துவிட்டால் ஏழு மலைகளையும் ஏறிச் சென்று இறைவனை கண்டுவிடவேண்டும். இல்லையென்றால் நினைத்த காரியம் நடக்காது என்கின்றனர் பக்தர்களுள் சிலர்.

சிறப்பு நாட்கள்

சிறப்பு நாட்கள்

தை முதல் தேதியிலிருந்து வைகாசி விசாகம் வரை பெரும்பாலும் பக்தர்கள் கூட்டத்தால் இம்மலை நிரம்பி வழியும். அந்த காலக்கட்டத்தில் செல்வதுதான் சிறப்பு என்கின்றனர்.

இரவு நேரப் பயணம்

இரவு நேரப் பயணம்

வெயில் அதிகமாக இருப்பதால் இரவு நேரங்களில் அதிக பக்தர்கள் பயணம் செய்கின்றனர் எனக் கூறப்பட்டாலும், இரவு நேரப் பயணங்கள்ல ஒரு மர்மம் அடங்கியிருக்கு.

மர்மம் என்ன?

மர்மம் என்ன?


இரவு நேரங்களில் செல்பவர்களுக்கு மட்டும்தான் சிவனின் குரல் கேட்கும்னு ஒரு நம்பிக்கை நிலவுது.

முதல் மலை

முதல் மலை


முதல் மலை முழுவதும் கல்லால் ஆன படிகட்டுக்களைக் கொண்டுள்ளது. இது பிரணவ வடிவமாக காணப்படுகிறது.

வெள்ளை விநாயகர்

வெள்ளை விநாயகர்

குண்டலினிக்கு அதிபதியான விநாயகர் முதல் மலை முடிவில் அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.

Sar1zxy

 இரண்டாவது மலை

இரண்டாவது மலை

பாம்பாட்டி சித்தருக்கு முருகன் காட்சி தந்த மலை இது. பாம்பாட்டி சித்தர் உருவாக்குன சுனையும், அவரது குகையும் இப்போதும் கூட நீங்கள் பார்க்கலாம்.

மூன்றாவது மலை

மூன்றாவது மலை

இந்த மலையில் கைத்தட்டி சுனை மற்றும் பல சித்தர்களின் குகைகள் இருக்கிறது.

நான்காவது மலையில்

நான்காவது மலையில்

இந்த மலையில் ஒட்டச்சித்தர் சமாதியும், பல அற்புத அரியவகை மூலிகைகளும் இருக்கிறது.

பீமன் களி உருண்டை எனப்படும் பெரிய பாறை இந்த மலையில்தான் காணப்படுகிறது.

ஐந்தாவது மலை

ஐந்தாவது மலை

மரங்களின் அடர்த்தி குறைந்து சிறிய சிறிய செடிகள் காணப்படுகிறது. சேறுகளைப் போன்ற அதிகளவிலான மணற்பாங்கான இடம் இதுவாகும்.

திருநீறு மலை

திருநீறு மலை

ஆறாவது மலை முழுவதும் வெள்ளை மணலால் ஆனது. இதனால் இது திருநீறு மலை என்று அழைக்கப்படுகிறது.. ஆறாவது மலையை அடையும் முன்பு ஆன்டி சுனை என்ற ஒன்றை நாம் காணலாம். இது கங்கை நதிக்கு இணையாக கருதப்படுகிறது.

வெள்ளையங்கிரி மலை

வெள்ளையங்கிரி மலை


இந்த மலையில் தான் சித்தர்கள் அடிக்கடி உலாவுவதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் சித்தர்கள் பலரது கண்களுக்கு புலப்படமாட்டார்கள் என்றும் நம்பப்படுகிறது.

சிவபெருமானின் அவதாரம் இங்குதான் அந்த பஞ்சவாத்தியம் மனித காதுகளுக்கு கேட்கிறதாம். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

இப்படிப்பட்ட வெள்ளையங்கிரி மலைக்கு ஒரு சுற்றுலா போய்ட்டு வரலாமா?

இப்படிப்பட்ட வெள்ளையங்கிரி மலைக்கு ஒரு சுற்றுலா போய்ட்டு வரலாமா?

இப்படிப்பட்ட வெள்ளையங்கிரி மலைக்கு ஒரு சுற்றுலா போய்ட்டு வரலாமா?

ஆத்தாடி... எத்தன பாம்பு... இது என்ன ராஜநாகங்களின் தலை நகரமா?ஆத்தாடி... எத்தன பாம்பு... இது என்ன ராஜநாகங்களின் தலை நகரமா?

பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?பிரிட்டிஷ் பொறியாளரையே குழப்பி விரட்டிய அந்த தொங்கும் தூண் எங்க இருக்கு தெரியுமா?

விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?

3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்

ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?ரஜினிகாந்த் செல்லும் குகையின் இந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா?

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X