Search
  • Follow NativePlanet
Share
» »ஆலப்புழாவில் கொஞ்சம் ஊர் சுற்றுவோம்!!!

ஆலப்புழாவில் கொஞ்சம் ஊர் சுற்றுவோம்!!!

By

'கடவுளின் சொந்த தேசம்' என்று கேரளாவை ஏன் அழைக்கிறார்கள் என்று ஆலப்புழா வந்தால் புரிந்துகொள்ளலாம்.

ஏனெனில் மனம் மயக்கும் உப்பங்கழியில் உங்கள் மனம் விரும்பும் ஒருவருடன் படகு இல்லங்களில் செல்வதும், ஓடைகளுக்கு நடுவே வீற்றிருக்கும் ரம்மியமான பசுமை போர்த்திய சோலைகளும் என இனிமையான அனுபவங்கள் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கின்றன.

எனவே வாருங்கள் ஆனந்தமாய் ஆலப்புழா நகருக்குள் நுழைவோம்!

ஆலப்புழாவின் முக்கிய சுற்றுலாத் தலங்கள்

ஆலப்புழாவின் முக்கிய சுற்றுலாத் தலங்கள்

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில், குட்டநாட், ஆலப்புழா கடற்கரை, சம்பக்குளம் சர்ச், செட்டிக்குளங்கரா பகவதி கோயில், கிருஷ்ணாபுரம் அரண்மனை உள்ளிட்ட இடங்கள் ஆலப்புழாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

படம் : Sarath Kuchi

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில்

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில்

அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயில், செம்பகச்சேரி பூராடம் திருநாள் - தீவநாராயணன் தம்புரான் எனும் ராஜாவால் 790-ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. இக்கோயிலின் மூலவரான பார்த்தசாரதி பஹவான் ஒரு கையில் சாட்டையுடனும் மறு கையில் சங்குடனும் ருத்ர கோலத்தில் காட்சியளிக்கின்றார். மற்ற கோயில்களில் உள்ள எல்லா விஷ்ணு அவதாரங்களும் சங்கு ஏந்திய கோலத்தில் காணப்பட்டாலும், சாட்டையுடன் காட்சியளிக்கும் விஷ்ணு அவதாரத்தை அம்பலப்புழா ஸ்ரீ கிருஷ்ணா கோயிலில் மட்டுமே தரிசிக்க முடியும். இங்கு நைவேத்தியமாக படைக்கப்படும் பால் பாயசத்தை ஏற்றுக்கொள்ள குருவாயூரப்பன் தினமும் இக்கோயிலுக்கு விஜயம் செய்வதாக ஐதீக நம்பிக்கை நிலவுகிறது.

படம் : Srijithpv

ஆலப்புழா கடற்கரை

ஆலப்புழா கடற்கரை

ஆலப்புழா ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ளது ஆலப்புழா கடற்கரை. ஒரு புறம் பரந்து விரிந்த அரபிக்கடலும், மறுபுறம் வரிசையாக காட்சியளிக்கும் பனை மரங்களுமாக கண்கொள்ளா அழகுடன் இந்தக் கடற்கரை நீண்டு கிடக்கிறது. படகு மூலம் இங்கிருந்து கொஞ்ச தூரத்திலேயே உள்ள தீவுப்பூங்காவுக்கு சென்று அங்குள்ள ஒரு பழைய கலங்கரை விளக்கத்திலும் ஏறி உச்சியிலிருந்து கீழே காட்சியளிக்கும் இயற்கை எழிலை ரசித்து மகிழலாம்.

படம் : Christian Haugen

கிருஷ்ணாபுரம் அரண்மனை

கிருஷ்ணாபுரம் அரண்மனை

ஆலப்புழா மாவட்டத்தில் அரபிக் கடலோரம் அழகாக காட்சியளித்துக்கொண்டிருக்கும் காயம்குளம் எனும் நகரத்தில் கிருஷ்ணாபுரம் அரண்மனை அமைந்துள்ளது. 18-ஆம் நூற்றாண்டில் அன்றைய திருவிதாங்கூர் மஹாராஜாவான அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா இங்கிருந்த பழைய அரண்மனையை தரை மட்டமாக்கிவிட்டு ஒரே ஒரு தளத்தை மட்டுமே கொண்ட ஒரு எளிமையான அரண்மனையாக கிருஷ்ணாபுரம் அரண்மனையை உருவாக்கியுள்ளார். ஒரு மலையின் உச்சியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த அரண்மனையை சுற்றி புல்வெளிகள், நீரூற்றுகள் மற்றும் குளங்கள் ஆகியவை காணப்படுகின்றன.

படம் : Appusviews

படகு இல்லங்கள்

படகு இல்லங்கள்

ஆலப்புழாவின் பசுமையை உப்பங்கழி நீர்ப்பரப்பின் பின்னணியில் ரசித்து கொண்டே, உங்கள் வீடுகளில் இருப்பதை போன்ற ஒரு உணர்வை தரும் இந்த படகு இல்லங்களில் கிடைக்கும் அனுபவம் ஒரு உயர்ரக ரிசார்ட்டுகளில் கூட உங்களுக்கு கிடைக்காது. இந்த படகு இல்லங்கள் பல்வேறு வடிவங்களுடனும், வெவ்வேறு வசதிகளுடனும் காணப்படுகின்றன. எனவே உங்களுடைய பட்ஜெட்டுக்கு தகுந்தார் போல உங்களால் படகு இல்லங்களை தேர்வு செய்து கொள்ள முடியும்.

படம் : McKay Savage

செயின்ட் மேரிஸ் சர்ச், புளிங்குன்னு

செயின்ட் மேரிஸ் சர்ச், புளிங்குன்னு

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷா கல்யாணம் வேண்டாமென்று கூறிச்செல்லும் காட்சி செயின்ட் மேரிஸ் சர்ச்சில்தான் படம்பிடிக்கப்பட்டது. இந்த தேவாலயம் ஆலப்புழாவில் உள்ள புளிங்குன்னு என்ற அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது.

படம்

குட்டநாடு

குட்டநாடு

‘கேரள மாநிலத்தின் அரிசிக்கிண்ணம்' என்ற புகழைப் பெற்றுள்ள இந்த குட்டநாட் பகுதி கேரளப்பகுதியின் கிராமப்புற வனப்புக்கான உதாரண ஸ்தலமாகும். இந்த அழகுப்பிரதேசத்தில் அச்சன்கோவில், மணிமாலா, மீனாச்சில் மற்றும் பம்பா போன்ற ஆறுகள் பாய்கின்றன. இந்த ஆற்றுப்பாதைகள் நீர்ப்பாசனத்துக்கு மட்டுமன்றி அன்றாட அலுவல்களிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. படகுகள் மூலம் மளிகைப்பொருட்கள், காய்கறிகள், மீன் போன்றவற்றை வியாபாரிகள் இந்த ஆற்றங்கரைகளில் உள்ள வீடுகளுக்கு விற்பது ஒரு அதிசயமான காட்சியாகும். பரபரப்பான மாநர வாழ்க்கையை மட்டுமே அனுபவித்த பயணிகள் இந்த நிதானமான வாழ்க்கை முறையை கண்டு மயங்காமல் இருக்கவே வாய்ப்பில்லை. குட்டநாட் பகுதியில் வாடகைப்படகுகளை ஏற்பாடு செய்துகொண்டு அருகிலுள்ள முக்கிய ஸ்தலங்களுக்கு நீர்ப்பாதை மார்க்கமாகவே பயணிகள் சென்றடையவும் வசதிகள் உண்டு.

படம் : Sourav Niyogi

செட்டிக்குளங்கரா பகவதி கோயில்

செட்டிக்குளங்கரா பகவதி கோயில்

சபரிமலைக்கு அடுத்ததாகவே சொல்லும் அளவுக்கு செட்டிக்குளங்கரா பகவதி கோயிலுக்கு பக்தர்கள் ஏராளமாக வருகை தருகின்றனர். 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் வீற்றுள்ள அம்மனுக்கு ஒரு சிறப்பம்சமும் உண்டு. அதாவது, ஒரு நாளில் மூன்று அவதார வடிவங்களாக இந்தக் கோயில் தெய்வம் காட்சியளிக்கிறது. காலை நேரத்தில் மஹா சரஸ்வதியாகவும், நடுப்பகலில் மஹாலட்சுமியாகவும், மாலைநேரத்தில் துர்கா தேவியாகவும் இந்த பகவதி அம்மன் காட்சி தருவது வேறெங்குமே காணமுடியாத விசேஷமாகும்.

படம் : RajeshUnuppally

சம்பக்குளம் சர்ச்

சம்பக்குளம் சர்ச்

கேரளாவிலுள்ள ‘கத்தோலிக் சிரியன்' தேவாலயங்களின் தாய் ஆலயமாக இந்த சம்பக்குளம் சர்ச் புகழ் பெற்றுள்ளது. கி.பி 427ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ள இந்த தேவாலயம் காலப்போக்கில் பல மாற்றங்களையும் புனரமைப்புகளையும் சந்தித்துள்ளது. இதன் செழுமையான வரலாற்றுப்பின்னணி குறித்த தகவல்களை இந்த ஸ்தலத்திலேயே காணப்படும் பாறைக்கல்வெட்டுக் குறிப்புகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இந்த குறிப்புகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்த தேவாலயம் சந்தித்த சம்பவங்களை எடுத்துரைக்கின்றன. 1151ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு பாறை சிலுவையையும் இந்த தேவாலய ஸ்தலத்தில் பார்க்கலாம்.

படம் : Jean-Pierre Dalbéra

மீன்பிடிக்கும் மூதாட்டி!

மீன்பிடிக்கும் மூதாட்டி!

தன் வீட்டின் அருகே ஓடும் உப்பங்கழி நீரில் தூண்டில் போட்டு மீன்பிடிக்கும் மூதாட்டி.

படம் : Ajith

கடற்கரையில் கிரிக்கெட்!

கடற்கரையில் கிரிக்கெட்!

ஆலப்புழா கடற்கரையில் சூரிய அஸ்த்தமனத்தின் போது கிரிக்கெட் விளையாடும் இளைஞர்கள்.

படம் : Sumeet Jain

எங்கே செல்லும் இந்தப் பாதை?!

எங்கே செல்லும் இந்தப் பாதை?!

எங்கே செல்கிறது இந்தப் பாதை என்று பசுமையின் சூழலில் இயற்கையோடு கைகோர்த்து நடந்து செல்லும் பயணி!

படம் : Travelling Slacker

துள்ளிக் குதிப்போம்!!!

துள்ளிக் குதிப்போம்!!!

ஆலப்புழாவின் உப்பங்கழியில் துள்ளிக்குதித்து குதூகலிக்கும் இந்தச் சிறுவனைப் போல் நாமும் துள்ளிக் குதிப்போமா?!

படம் : Pepe Pont

நெடுமுடி

நெடுமுடி

கமல்ஹாசனின் 'இந்தியன்' படத்தில் போலிஸ் அதிகாரியாக வந்து கலக்கிய 'நெடுமுடி வேணுவின்' பிறந்த இடம்தான் ஆலப்புழாவில் உள்ள இந்த நெடுமுடி என்ற அழகிய கிராமம்.

படம் : Bijoy Mohan

ஆலப்புழா லைட்ஹவுஸ்

ஆலப்புழா லைட்ஹவுஸ்

ஆலப்புழா கடற்கரை அருகே அமைந்துள்ள ஆலப்புழா லைட்ஹவுஸ்.

படம் : Dr. Ajay Balachandran

பரிசலில் மீன் பிடிப்பு!

பரிசலில் மீன் பிடிப்பு!

குட்டநாடு பகுதியில் உப்பங்கழி மீது பரிசலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்.

படம் : Ajith

சூரியக்குளியலும், ஓய்வும்!

சூரியக்குளியலும், ஓய்வும்!

ஆலப்புழா கடற்கரையில் சூரியக்குளியலில் ஈடுபட்ட பிறகு பனை மரத்தின் அடியே ஓய்வெடுக்கும் வெளிநாட்டு பயணிகள்.

படம் : Christian Haugen

அபூர்வ தென்னை!

அபூர்வ தென்னை!

உப்பங்கழியின் ஓரத்தில் காணப்படும் தென்னை மரங்களில் இதுபோன்று வித்தியாசமான அமைப்பில் தென்னைகளை பார்ப்பது அரிது.

படம் : Anoop Joy

படகு இல்ல கட்டுமானம்!

படகு இல்ல கட்டுமானம்!

படகு இல்லமொன்று உருவாக்கப்படும் காட்சி.

படம் : Liji Jinaraj

அலாவுதீன் விளக்கு

அலாவுதீன் விளக்கு

ஆலப்புழா லைட்ஹவுஸ் மியூசத்தில் உள்ள அலாவுதீன் விளக்கு.

படம் : Tonynirappathu

பாடம்!

பாடம்!

உப்பங்கழியில் உள்ள வழிகளையும், பயணிக்கும் முறையையும் தன் மகன்களுக்கு கற்பிக்கும் தந்தை.

படம் : Liji Jinaraj

தூய்மை காப்போம்!

தூய்மை காப்போம்!

இயற்கையின் பொக்கிஷங்களை நாம் பாதுகாக்கும் விதம் இதுதானா?! சமூக பொறுப்போடு இருந்து நாட்டின் செல்வங்களை பாதுகாப்போம்!

படம் : Liji Jinaraj

பணி செல்லும் பெண்கள்!

பணி செல்லும் பெண்கள்!

உப்பங்கழியை படகு மூலம் கடந்து வேலைக்கு செல்லும் பெண்கள்.

படம் : Liji Jinaraj

மீனவர்கள்

மீனவர்கள்

ஆலப்புழா கடற்கரையில் மீன் பிடிக்க செல்லும்முன் வலையை தயார் செய்யும் மீனவர்கள்.

படம் : Christian Haugen

ஆலப்புழாவை எப்போது மற்றும் எப்படி அடைவது?

ஆலப்புழாவை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது

எப்போது பயணிக்கலாம்

படம் : Travelling Slacker

Read more about: ஆலப்புழா
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X