Search
  • Follow NativePlanet
Share
» »காரடையான் நோன்பு- இந்த கோயிலுக்கு போனா நீங்க தீர்க்கசுமங்கலியா வாழலாம்!

காரடையான் நோன்பு- இந்த கோயிலுக்கு போனா நீங்க தீர்க்கசுமங்கலியா வாழலாம்!

தீர்க்க சுமங்கலி வரம் வேண்டுமா அப்போ நீங்க போகவேண்டிய கோயில் இதுதான். உங்கள் கணவனின் ஆயுளை விருத்திப்படுத்தும் தலம்

ஆமா. அது என்ன காரடையான் நோன்பு?

மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும்.

பெண்கள் வருடத்திற்கு ஒரு முறையேனும் கணவனுடன் சேரந்து விருத்தாம்பாளை வழிபடுவது மாங்கல்ய தோஷங்களை போக்கி தீர்க சுமங்கலி யோகத்தை தரும். தீர்க சுமங்கலி யோகம் பெற விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பாள் சமேத விருத்தகிரிஸ்வரர் திருக்கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாகும். இங்கு அம்மையும் அப்பனும் வயோதிகர்களாய் அருள் பாலிப்பது சிறப்பு.

பழமலைநாதர் கோயில் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும் பாலாம்பிகை (எ) இளைய நாயகி ஆவர்.

பிரமனும் அகத்தியரும் வழிபட்ட தலம் எனப் போற்றப்படுகிறது. சுந்தரர் பரவையாருக்காகப் பொன் பெற்று, அப்பொன்னை மணிமுத்தாற்றில் இட்டு திருவாரூர் கமலாயத்தில் எடுத்தார் என்பது தொன்னம்பிக்கை. சரி தீர்க்கசுமங்கலியாக இருக்க என்ன பண்ணனும் தெரியுமா? இத முழுசா படிங்க...

 பழமலைநாதர் கோயில்

பழமலைநாதர் கோயில்

பழமலைநாதர் கோயில் நான்கு புறமும் சுமார் 26 அடி உயரமுள்ள மதிற்சுவரையும், 660 அடி நீளமும், 390 அடி அகலமும் உடைய ஒரு பெரிய கோவிலாகும். ஆலயத்தின் நான்கு புறமும் 7 நிலைகளையுடைய பெரிய கோபுரங்கள் நெடிதுயர்ந்து காணப்படுகின்றன. கிழக்கே உள்ளே பிரதான வாயில் வழியாக உள்ளே சென்றால் 16 தூண்களை உடைய மண்டபம் இருக்கிறது.


PC: கி. கார்த்திகேயன்

வடிவமைப்பு

வடிவமைப்பு

இத்தலத்தின் இறைவி பெரிய நாயகி அம்மையின் சந்நிதி ஒரு தனி கோயிலாக முதல் பிரகாரத்தின் வடபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம பிரகாரத்தில் 63 நாயன்மார்களில் உருவச் சிலைகளும், பிந்து மாதவப் பெருமாள் சந்நிதியும் உள்ளன. 63 மூவர் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் காலபைரவர் மூர்த்தம் காசியில் இருப்பது பொன்ற வடிவமைப்புக் கொண்டது.

Pc: Tamilnadu tourism

 சிலைகள்

சிலைகள்

நான்காம் பிரகாரத்தில் இத்தலத்தின் மூலவர் பழமலைநாதர் கருவறை இருக்கிறது. கருவறையின் வாயிலில் இரு புறமும் துவாரபாலகர்கள் சிலைகள் காணப்படுகின்றன. மூன்றாம் பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் விருத்தாம்பிகை சந்நிதி உள்ளது.

பாதாள விநாயகர்

பாதாள விநாயகர்

முதல் வெளிப் பிரகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சந்நிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

Pc: Wiki

அது என்ன 5555

அது என்ன 5555

இந்தக்கோயில் மிக முக்கிய சிறப்பு 5 என்கிற எண்ணாகும். இந்த கோயிலில் 5 கோபுரம், 5 நந்தி, 5 தேர், 5 கொடிமரம் என எல்லாமே ஐந்து ஐந்தாக அமைந்துள்ளது.
இந்தக்கோயிலில் உள்ள ஆழத்து விநாயகர், விநாயகரின் ஆறுபடை வீடுகளில் ஒன்று.

காசியை விட வீசம்(தமிழ் அளவை) புண்ணியம் அதிகம் என தல வரலாறு குறிப்பிடுகிறது. இதனால் விருத்தகாசி என்கிற சிறப்புப்பெயரும் இவ்வூருக்கு உண்டு.

Read more about: temple travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X