Search
  • Follow NativePlanet
Share
» »சூர்யாவின் '24' படத்தில் வந்த மேகமலைக்கு ஒரு அழகிய பயணம் !!

சூர்யாவின் '24' படத்தில் வந்த மேகமலைக்கு ஒரு அழகிய பயணம் !!

By Naveen

சென்ற வாரம் வெளியான '24' திரைப்படம் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. காலப்பயணத்தை கருவாக கொண்ட இந்த திரைப்படத்தில் வரும் விஷுவல்கள் கோடை வெயிலில் காய்ந்துபோன நம் கண்களுக்கெல்லாம் விருந்து படைப்பதாக இருந்தது எனலாம்.

படம் பார்த்த அனைவருக்கும் இதில் வரும் மேகமலைக்கு ஒருமுறை சென்றுவர வேண்டும் என்ற ஆசை நிச்சயம் வந்திருக்கும். ஊட்டி, கொடைக்கானல் என்றே கோடை சுற்றுலா சென்று அலுத்துப்போனவர்கள் நிச்சயம் செல்ல இடமாகும் இந்த மேகமலை.

வாருங்கள், மேகமலையை பற்றிய பயண தகவல்களை அறிந்துகொள்ளலாம்.

மேகமலை - எங்கே இருக்கிறது?

மேகமலை - எங்கே இருக்கிறது?

மேகமலை கடல் மட்டத்தில் இருந்து 1500மீ உயரத்தில் தேனி மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக அமைந்திருக்கிறது.

குளுமையான சூழல் நிலவும் மேகமலையில்தேயிலை மற்றும் ஏலக்காய் தோட்டங்கள் நிறைந்திருக்கின்றன.

Mprabaharan

மேகமலையில் என்னவெல்லாம் இருக்கிறது?

மேகமலையில் என்னவெல்லாம் இருக்கிறது?

ஊட்டி, கொடைக்கானலை போல மேகமலை ஒன்றும் பிரபலமான சுற்றுலாத்தலம் இல்லை என்பதால் இங்கே சுற்றுலாலாப்பயணிகளுக்காக என்று பிரத்யேகமாக எந்த இடமும் இல்லை.

ஆனால், சற்றும் மாசுபாடு இல்லாத மக்கள் கூட்டம் இல்லாமல் இயற்கையை ரசிக்க விரும்புகிறவர்கள் நிச்சயம் வர வேண்டிய இடம் மேகமலை ஆகும்.

Sivaraj.mathi

மேகமலையில் என்னவெல்லாம் இருக்கிறது?

மேகமலையில் என்னவெல்லாம் இருக்கிறது?

மேகமலையில் இருக்கும் சுருளிதீர்த்தம் என்ற இடத்தில் தான் புகழ்பெற்ற சுருளி அருவி உற்பத்தியாகிறது.

இங்குள்ள மணலாறு அணைப்பகுதியில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கை முழுமையாக காணும் வாய்ப்பை பெறலாம்.

Sivaraj.mathi

மேகமலையில் இருக்கும் அரிய விலங்குகள்:

மேகமலையில் இருக்கும் அரிய விலங்குகள்:

இந்தியாவில் வேறு எங்குமே காணமுடியாத பல அரிய விலங்குகள் மேகமலையில் வாழ்கின்றன. உதாரணமாக 'சலீம் அலி பழ வௌவால்கள்' என்ற வௌவால் இனம் மேகமலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மட்டுமே வாழ்கிறது.

அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இருக்கும் இந்த வகை வௌவால்கள் பழங்களை மட்டுமே உண்டு உயிர்வாழ்கின்றன.

மேகமலையில் இருக்கும் அரிய விலங்குகள்:

மேகமலையில் இருக்கும் அரிய விலங்குகள்:

பொதுவாகமிருகக்காட்சிசாலையில் பார்க்கக்கிடைக்கும் ஒரு பறவையான கிரேட் ஹார்ன்பில் எனப்படும் மலைஇருவாட்சி பறவைகள் மேகமலையில் வாழ்கின்றன.

கிட்டத்தட்ட 50ஆண்டுகள் வரை உயிர்வாழும் இந்த பறவையின் தனித்துவம் அதன் வண்ணமயமான அலகுகள் தான்.

மேகமலையில் இருக்கும் அரிய விலங்குகள்:

மேகமலையில் இருக்கும் அரிய விலங்குகள்:

Malabar gray slender loris எனப்படும் சாம்பல் நிற தேவாங்கு உலகில் இந்த மேகமலை பகுதியில் மட்டுமே உயிர்வாழ்கிறது. சிறிய விலங்கான தேவாங்கு இரவில் மட்டுமே பூச்சிகளை வேட்டையாடி உண்கிறது.

விலங்குகளை புகைப்படம் எடுப்பதில் ஆர்வமுடையவராக இருந்தால் நிச்சயம் மேகமலைக்கு வாருங்கள்.

வெள்ளிமலை:

வெள்ளிமலை:

தென்தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் வைகையாறு உற்பத்தியாகும் இடம் தான் மேகமலையின் இதயப்பகுதியாக இருக்கும் வெள்ளிமலை ஆகும். பெரியார் புலிகள் சரணாலயத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது.

Vinoth Chandar

வெள்ளிமலை:

வெள்ளிமலை:

மேகமலை அடிவாரத்தில் இருக்கும் முருகன் கோயில்.

புகைப்படங்கள்!!

புகைப்படங்கள்!!

மேகமலையின் மேல் இருக்கும் முக்கியமான நீர்ப்பிடிப்பு பகுதியான மணலாறு அணை!!

புகைப்படங்கள்!!

புகைப்படங்கள்!!

வெள்ளி போல பாய்ந்தோடும் மேகமலையில் இருக்கும் ஓடை !!

Vinoth Chandar

புகைப்படங்கள்!!

புகைப்படங்கள்!!

மேகமலையில் யானைகள், புள்ளி மான்கள், சாம்பார் மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைகள் போன்றவை சர்வசாதாரணமாக நடமாடுவதை காணமுடியும்.

இதனால் தான் wildlife photographyயில் ஆர்வமுடையவர்கள் தமிழ்நாட்டில் நிச்சயம் வர வேண்டிய இடங்களில் ஒன்றாக மேகமலை இருக்கிறது.

புகைப்படங்கள்!!

புகைப்படங்கள்!!

மேகங்கள் முத்தமிடும் மேகமலை !!

Mprabaharan

மேகமலையை எப்படி அடைவது?

மேகமலையை எப்படி அடைவது?

மேகமலை சென்னையில் இருந்து 550கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது. சென்னையில் இருந்து திண்டுக்கல்லை அடைந்து அங்கிருந்து வத்தலகுண்டு, ஆண்டிப்பட்டி வழியாக மேகமலையை அடையலாம்.

Sivaraj.mathi

மேகமலையில் எங்கே தங்குவது?

மேகமலையில் எங்கே தங்குவது?

மேகமலையில் சுற்றுலாப்பயணிகள் தங்குவதற்கென ஹோட்டல்கள் எதுவும் இல்லை. அப்படி தங்க விரும்புகிறவர்கள் தேனியில் இருக்கும் ஹோட்டல்களில் தங்கலாம்.

தேனி ஹோட்டல்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X