Search
  • Follow NativePlanet
Share
» »ரெட் அலர்ட்?? - இந்த ஊர்ல மட்டும் தினமும் மழை பெய்யுதாம் - எங்க தெரியுமா?

ரெட் அலர்ட்?? - இந்த ஊர்ல மட்டும் தினமும் மழை பெய்யுதாம் - எங்க தெரியுமா?

By Staff

உலகிலேயே அதிகமாக மழை பெய்யும் பகுதியாக மேகாலயா மாநிலம் அறியப்படுகிறது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் சிரபுஞ்சி போன்று எப்போதும் சாரல் மழை பெய்துகொண்டே இருக்கும் இடங்கள் இன்று உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத தலங்களாக திகழ்கின்றன.

நீங்கள் மழையை முழுமையாக ரசித்து மகிழ மேகாலயா ஒரு வரப்பிரசாதம். வாருங்கள் மழையில் நனைந்து குதூகலிப்போம்!!! முழுமையான அனுபவத்துக்கு இறுதியில் இணைக்கப்பட்டுள்ள விடியோவை பாருங்கள்.

இந்தியாவின் மிகச் சிறந்த மழைக்கால சுற்றுலாத் தலங்கள்!!!

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

மேகாலயாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சிரபுஞ்சி, தலைநகர் ஷில்லாங் தவிர ஜெயின்டியா மலைகள், மேற்கு மற்றும் கிழக்கு கரோ ஹில்ஸ் ஆகிய இடங்களும் எண்ணற்ற பயணிகளை ஆண்டுதோறும் ஈர்த்து வருகின்றன.

மேகாலயாவின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Rajesh Dutta

சிரபுஞ்சி

சிரபுஞ்சி

அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை கண்ணுறும் வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.

சிரபுஞ்சியின் சுற்றுலாத் தலங்கள்

படம் : t.saldanha

ஷில்லாங்

ஷில்லாங்

மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

ஷில்லாங்கின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Masrur Ashraf

ஈஸ்ட் காசி ஹில்ஸ்

ஈஸ்ட் காசி ஹில்ஸ்

ஈஸ்ட் காசி ஹில்ஸ் மேகாலயா மாநிலத்தின் 7 மாவட்டங்களில் ஒன்றாகும். பல சுவராசியமான சுற்றுலா ஸ்தலங்களும் விசேஷ அம்சங்களும் இந்த மாவட்டத்தில் நிரம்பியுள்ளதால் இது மேகாலயா மாநிலத்தில் அதிகம் விஜயம் செய்யப்படும் சுற்றுலாப்பிரதேசமாக விளங்குகிறது.

ஈஸ்ட் காசி ஹில்ஸின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Arup Malakar

நோஹஸ்நித்தியாங் அருவி

நோஹஸ்நித்தியாங் அருவி

செவன் சிஸ்டர்ஸ் அருவி என்று பிரபலமான அறியப்படும் நோஹஸ்நித்தியாங் அருவி, ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மௌஸ்மாய் கிராமத்துக்கு தெற்கே 1 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

படம் : மௌஸ்மாய் கிராமத்

ஜெயின்டியா மலைகள்

ஜெயின்டியா மலைகள்

அப்பழுக்கற்ற அழகை கொட்டிக் கொடுத்திருக்கும் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை ஜெயின்டியா மலைகள் கொண்டுள்ளன. முடிவில்லாத மலைகளாக இருந்தாலும், இதன் வழியெங்கும் ஆர்ப்பரித்து ஓடும் நதிகளுக்கும் குறைவில்லை.

ஜெயின்டியா மலைகளின் சுற்றுலாத் தலங்கள்

படம் : Kinshuk Kashyap

கிரேம் லியாத் ப்ராஹ்

கிரேம் லியாத் ப்ராஹ்

ஜெயின்டியா மலைப்பகுதியில் கிரேம் லியாத் ப்ராஹ் குகை அமைந்துள்ளது. 31 கி.மீ நீளம் கொண்ட இந்தக் குகை இந்தியாவின் நீளமான குகையாக கருதப்படுகிறது. இதேபோல அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் எண்ணற்ற குகைகள் மேகாலயா மாநிலத்தில் நிறைய காணப்படுகின்றன. அவற்றில் சில குகைகள் உலகின் மிக நீளமான மற்றும் மிக ஆழமான குகைகளில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றன.

படம் : Biospeleologist

சிரபுஞ்சி வேர்ப்பாலம்

சிரபுஞ்சி வேர்ப்பாலம்

சிரபுஞ்சியில் அமைந்துள்ள இந்த வேர்ப்பாலம் ரப்பர் மரத்தின் வேர்களால் உருவானது. மேகாலயாவின் பழங்குடியினரான 'வார்-காசிஸ்' மக்கள்தான் முதன் முதலில் இந்த வேர்ப்பாலத்தின் மூலம் ஆற்றை கடக்க ஆரம்பித்தனர். இதன் பின்னர் இப்பகுதி மக்கள் ரப்பர் மரங்களில் செயற்கையாக வேர்ப்பாலங்களை உருவாக்க தொடங்கினர். அதாவது பாக்கு மரத்தின் தடித்த பாகத்தை துளையிட்டு அதில் ரப்பர் மர வேர்களை நுழையச்செய்து அது அப்பக்கம் வளர்ந்து சென்ற பிறகு மண்ணுக்குள் செல்கிறது. இதற்கு 10 முதல் 15 ஆண்டுகள் ஆகும். அதன் பிறகு பயணிக்க தகுதியான, உறுதியான வேர்ப்பாலமாக இது மாறிவிடும்.

சிரபுஞ்சியின் சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

வேர்ப்பாலத்தில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : t.saldanha

மௌசின்ரம்

மௌசின்ரம்

ஈஸ்ட் காசி ஹில்ஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள மௌசின்ரம் கிராமம்தான் உலகிலேயே அதிகமாக மழை பெய்யக்கூடிய இடமாகும்.

படம் :2il org

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X