Search
  • Follow NativePlanet
Share
» »எம்.ஜி.எம் டிஸ்ஸீ வேர்ல்டும், 50 ரைடுகளும்!!!

எம்.ஜி.எம் டிஸ்ஸீ வேர்ல்டும், 50 ரைடுகளும்!!!

By

சென்னை நகரத்தின் மிக நவீன பொழுதுபோக்கு சவாரி அம்சங்கள் நிறைந்த நவீன தீம் பார்க் பூங்காவான எம்.ஜி.எம் டிஸ்ஸீ வேர்ல்டு கிழக்கு கடற்கரைச்சாலையில் வி.ஜி.பி

யுனிவர்சல் கிங்டம் பூங்காவை கடந்தபின் ஒரு சில கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. 1200 சதுர அடி பரப்பளவைக்கொண்ட ஒரு அலை நீச்சல் குளம் இத்தாலி நாட்டிலிருந்து

இறக்குமதி செய்யப்பட்டு இங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர சின்ன குற்றாலம் எனும் செயற்கை அருவியிலும் பார்வையாளர்கள் குளித்து விளையாடி மகிழலாம். ஏராளமான

விளையாட்டு உபகரணங்களை கொண்டுள்ள இவ்வளாகத்தில் அக்வா ஸ்லைட், ஜிப்டிப், டொர்னாடோ, சின்ன குற்றாலம், வேவ் பூல், வாட்டர் பிளே ஸ்டேஷன் போன்றவை

நீர்விளையாட்டு சம்பந்தப்பட்டவையாகும். இவை தவிர ஸ்பைடர் ஸ்பின், ரேஞ்சர், கிரேஸி பஸ், ஹேங் கிளைடர், வேவ் ஸ்விங்கர், டொர்னாடோ கோஸ்டர், ரெவொல்யூஷன், எம் எம்

ரோலர் கோஸ்டர், ஜயண்ட் வீல், ஃப்ளையிங் டிரெய்ன் போன்ற சாகச சவாரி அம்சங்களும் இங்கு அமைக்கப்பட்டிருக்கின்றன.

கட்டணம் : மெகா ஃபன் பெரியவர்கள் - ரூ.799, மெகா ஃபன் குழந்தைகள் - ரூ.577
ஜம்போ பேக்கேஜ் பெரியவர்கள் - ரூ.550, ஜம்போ பேக்கேஜ் குழந்தைகள் - ரூ.450

நேரம் : சாதாரண நாட்கள் - 10.30 am to 06.30 pm
வாரஇறுதி மற்றும் விடுமுறை நாட்கள் - 10.30 am to 07.30 pm

மேலும் தகவலுக்கு : http://www.mgmdizzeeworld.com/

பிக் வீல்

பிக் வீல்

எம்.ஜி.எம்மில் உள்ள இராட்சஸ இராட்டினம்தான் சென்னை மற்றும் தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய இராட்டினமாக கருதப்படுகிறது. ஒரு முறை இதில் பயணித்து பாருங்கள் சும்மா 'திக்திக் திக்' த்ரில்லிங் அனுபவமா இருக்கும்.

கரீபியன் ஸ்விங்

கரீபியன் ஸ்விங்

புயலில் மாட்டிய கப்பலில் பயணம் செய்ய ஆசை இருந்தால் இந்த கரீபியன் ஸ்விங்கில் அமர்ந்து பாருங்கள்.

க்ரீப்பர் பக்

க்ரீப்பர் பக்

அந்தரத்தில் கொஞ்ச நேரம் மிதப்பதும், பின்னர் கீழே வருவதும் புதுமையான அனுபவம்தான்.

டிஸ்கோ ஸாஸர்

டிஸ்கோ ஸாஸர்

அமர்ந்துகொண்டே எப்படி டிஸ்கோ நடனம் ஆடுவது என்று டிஸ்கோ ஸாஸரில் உட்காரும்போது உங்களுக்கே தெரியும்.

டாட்ஜம் கார்

டாட்ஜம் கார்

இங்கே கார் மீது கார் மோதினால் ட்ராஃபிக் போலீசால் கேஸ் போட முடியாது!

கமிகேஜ் ரேஞ்சர்

கமிகேஜ் ரேஞ்சர்

மேலேயும், கீழேயும் அல்லாடும்போது வாழ்க்கை ஒரு வட்டம்ன்னு நீங்களே புரிஞ்சிக்குவீங்க!

நீலகிரி எக்ஸ்பிரஸ்

நீலகிரி எக்ஸ்பிரஸ்

ஊட்டி மலை மலே போற நீலகிரி எக்ஸ்பிரஸ் இல்ல இது. ஆனா அந்த நீலகிரி எக்ஸ்பிரஸ்ல போற மாதிரியே ஒரு அனுபத்தை ஏற்படுத்த இத உருவாக்கி இருக்காங்க போல?!

ரெவல்யூஷன்

ரெவல்யூஷன்

நீங்க கட்டிப்போட்ட மாதிரி அப்படியே நிக்க வேண்டியதுதான். அப்பறம் ஒரே வேடிக்கைத்தான்!

ராக் ஓ பிளேன்

ராக் ஓ பிளேன்

வானத்துல பறந்துகிட்டே ராக் அண்ட் ரோல் ஆடப்பாருங்க ராக் ஓ பிளேன்ல!

ரோல் ஓ ரோல்

ரோல் ஓ ரோல்

பூமி தன்னைத்தானே சுத்தவும் செய்யும், சூரியனையும் சுத்துமில்ல? அதைப்போலவேதான் இதுவும்.

ரோலிங் தண்டர்

ரோலிங் தண்டர்

பலகீனமான இதயம் கொண்டவர்கள் இந்த ரோலிங் தண்டரில் தயவு செஞ்சு ஏறிடாதீங்க!

ஸ்டார் வீல்

ஸ்டார் வீல்

இராட்சஸ இராட்டினத்தில் ஏற பயப்படுபவர்கள் அதன் குட்டியான இந்த ஸ்டார் வீலில் பயணித்துப் பாருங்கள்.

டூம்ப் ரைடர்

டூம்ப் ரைடர்

இஞ்சினே இல்லாத ரயில் இந்த டூம்ப் ரைடர்!

வாட்டர் கோஸ்டர்

வாட்டர் கோஸ்டர்

தண்ணீரை பீறிக்கொண்டு படகில் செல்லும் அனுபவம் இந்த வாட்டர் கோஸ்டரில் பயணிக்கும்போது உங்களுக்கு கிடைக்கும்.

வேவ் ஸ்விங்கர்

வேவ் ஸ்விங்கர்

உயரமான ஒரு இடத்துல ஊஞ்சல் ஆடுற புதுமையான அனுபவத்தை வேவ் ஸ்விங்கர் உங்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்கும்.

கேட்டர்பில்லர்

கேட்டர்பில்லர்

கம்பளிப்பூச்சி வடிவத்தில் இருக்கும் இந்த குட்டி ரயில் குட்டீஸ்களுக்காக!

குழந்தைகள் பூமி

குழந்தைகள் பூமி

இது குழந்தைகள் பூமி, பெரியவர்களுக்கு அனுமதி இல்லை.

கப் அண்ட் ஸாஸர்

கப் அண்ட் ஸாஸர்

தேநீர் மற்றும் கோப்பைகள் வடிவில் இருக்கும் இவை குழந்தைகளுக்கான குதூகல சவாரிக்கு!

டிஸ்ஸீ எக்ஸ்பிரஸ்

டிஸ்ஸீ எக்ஸ்பிரஸ்

செல்லக்குட்டிகளுக்கான ஸ்பெஷல் ரயில் இந்த டிஸ்ஸீ எக்ஸ்பிரஸ் ரயில்.

ஜுராஸிக் டிரெயின்

ஜுராஸிக் டிரெயின்

டைனோசர்களோடு உங்க குழந்தைகள் சிரிச்சுகிட்டே ஷோக்கா இந்த ரயில்ல போலாம்!

கிட்ஸ் ஸ்விங்

கிட்ஸ் ஸ்விங்

அலையில் ஆடும் இந்தக் குட்டி கொள்ளையர்கள் கப்பல் உங்கள் குட்டீஸ்களுக்காக!

மினி ஜெட்

மினி ஜெட்

குழந்தைகளுக்கான குட்டி ஜெட் விமானம் இது.

மினி எம்.ஜி.ஆர்

மினி எம்.ஜி.ஆர்

குழந்தைகளின் குதூகலமும், கொண்டாட்டமும் இங்கும் தொடரட்டும்....!

மினி ஸ்லேம்பேம்

மினி ஸ்லேம்பேம்

ஹலோ குட்டீஸ்! வாருங்கள் மினி ஸ்லேம்பேம்மில் விளையாட!!

ரஃப் ரைடர்

ரஃப் ரைடர்

உங்க குட்டீஸ்களுக்கான ஜீப் பயணம்!

ஸ்கூட்டி ரைட்

ஸ்கூட்டி ரைட்

குழந்தைகளுக்கான மோட்டார் பைக் பயணம்.

ஷூ ஹவுஸ்

ஷூ ஹவுஸ்

காலணி வடிவில் குழந்தைகளுக்கான சறுக்கு மரம்.

ஏம்பி தியேட்டர்

ஏம்பி தியேட்டர்

குழந்தைகளும், பெரியவர்களும் ஆடல் பாடலுடன் கொண்டாட்டமுமாக பொழுதைக் கழிப்பதற்காக இந்த திறந்தவெளி திரையரங்கம்.

கார்னிவல் கேம்ஸ்

கார்னிவல் கேம்ஸ்

திருவிழா சந்தைப் போன்று அமைக்கப்பட்டுள்ள இந்த கார்னிவல் கேம்ஸ் பகுதியில் நீங்கள் பணம் கட்டி விளையாடி பரிசுகளை அள்ளிச்செல்லலாம்.

சின்ன குற்றாலம்

சின்ன குற்றாலம்

குற்றாலத்தின் சிறிய வடிவம் அமைக்கப்பட்டிருக்கும் சின்ன குற்றாலம்.

இமேஜின்

இமேஜின்

ஒரே இடத்தில்தான் இருப்பீங்க, ஆனா எல்லா இடத்துக்கும் போவீங்க!. புரியலயா?! அப்ப வந்து பாருங்க!!

எம்.ஜி.எம் எக்ஸ்பிரஸ்

எம்.ஜி.எம் எக்ஸ்பிரஸ்

குடும்பத்துடன் குதூகலமாக எம்.ஜி.எம் டிஸ்ஸீ வேர்ல்டை இந்த எம்.ஜி.எம் எக்ஸ்பிரஸ்ஸில் சுற்றிப் பார்க்கலாம்.

ரெயின் ட்ரீ

ரெயின் ட்ரீ

செயற்கை மழையையும், செயற்கை வானவில்லையும் இங்கே அனுபவிக்கலாம்!

ட்ரீ ஹவுஸ்

ட்ரீ ஹவுஸ்

மரத்தால் செய்யப்பட குடில் அல்லது மரமே குடில்!

அலை ஓசை

அலை ஓசை

இந்த செயற்கை கடல் அலைகளில் விளையாடுவது அற்புதமான அனுபவமாக இருக்கும்.

பலூன் ரைட்

பலூன் ரைட்

பலூனில் பறப்பது போல பறந்து மகிழுங்கள்!

போட்டிங்

போட்டிங்

இந்த குட்டித் தீவை மிதிப்படகு மூலம் உல்லாசமாக சுற்றிப் பாருங்கள்!

கரௌசல்

கரௌசல்

அடடே நம்ம கிராமத்து திருவிழாவுல இருக்கிற குதிரைச் சவாரி மாதிரியே இருக்கேன்னு பாக்குறீங்களா?! அதேதான் இதுவும், வந்து ஒரு ரவுண்ட் போங்க!

சூப்பர் டிரக்ஸ்

சூப்பர் டிரக்ஸ்

ஆறு வில் கொண்ட இந்த மினி டிரக்குகள் கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்காக.

கேம் ஆர்க்கேட்

கேம் ஆர்க்கேட்

குழந்தைகளுக்கான வீடியோ கேம் விளையாட்டுகள்.

ரெயின்போ

ரெயின்போ

வானவில்லுக்கு அருகே ஒரு புதுமையான சவாரி!

ரெயின்டீர் கோஸ்டர்

ரெயின்டீர் கோஸ்டர்

கலைமானோடு கொஞ்சம் பயணித்துப் பாருங்கள்!

ஸ்கை கிளைடர்

ஸ்கை கிளைடர்

வானம் கீழே, பூமி மேலேன்னு நீங்களே கன்ஃப்யூஸ் ஆகப் போறீங்க!

ஸ்விம்மிங் பூல்

ஸ்விம்மிங் பூல்

நீர் சறுக்கு அம்சங்களுடன் கூடிய அட்டகாசமான நீச்சல் குளம் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்காக!

டிவிஸ்டர்

டிவிஸ்டர்

குடும்பத்தோடு இந்த ஆனந்த சுழற்சியில் கூத்தாடுங்கள்!!!

எலிஃபண்ட் சஃபாரி

எலிஃபண்ட் சஃபாரி

குழந்தைகளே இங்கு பயணம் செய்து யானை எங்கே என்று கண்டுபிடியுங்கள்.

வாட்டர் எம்.ஜி.ஆர்

வாட்டர் எம்.ஜி.ஆர்

குடும்பத்தோடு குறுகிய இடத்தில் ஜாலியான ஒரு படகுப்பயணம்.

கிரேணி பக்

கிரேணி பக்

இது குழந்தைகளுக்காக!

டோரா ஸ்பின்

டோரா ஸ்பின்

குட்டீஸ்கள் ஆனந்தச் சவாரி செய்யலாம் இங்கே!

சூப்பர் ட்ரூப்பர்

சூப்பர் ட்ரூப்பர்

இந்த சூப்பர் ட்ரூப்பர் பலகீன மனம் கொண்டவர்களுக்கு இல்லை!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X