உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

மழைக்காலத்தின் சொர்க்கம் லோனாவ்ளா

Written by:
Updated: Wednesday, June 4, 2014, 15:24 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments

சஹயாத்ரி மலையின் கிரீடம் என்று அழைக்கப்படும் லோனாவ்ளா மலைவாசஸ்தலம், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மேற்குப்பகுதியில், புனே மாவட்டத்தில், மும்பையிலிருந்து 84 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

இந்தியா முழுவதும் லோனாவ்ளா பகுதி, 'சிக்கி' எனப்படும் கடலை மிட்டாய்க்காக மிகவும் பிரபலம். மேலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் சந்தடி நிறைந்த நகர வாழ்க்கைக்கு மாற்றாக அமைதியும், ஏகாந்தமும், இனிமையும் நிறைந்த லோனாவ்ளா ஸ்தலத்தின் பேரழகில் மனதை பறிகொடுக்கப்போவது உறுதி!

லோனாவ்ளா ஹோட்டல்கள் 

சுற்றுலாத் தலங்கள்

லோனாவ்ளா வரும் சுற்றுலாப்பயணிகள் நீர்வீழ்ச்சிகளை ஒட்டி நடக்கலாம், ஒரு மாலை நேரத்தை பசுமையான புல் தரைகளில் கழிக்கலாம் அல்லது மலை ஏற்றத்தில் ஈடுபடலாம். பிரபு மூக்கு சிகரம், புஷி அணை, லோஹகட் கோட்டை, ராஜ்மச்சி வனவிலங்கு சரணாலயம், பைரவநாத் கோயில் உள்ளிட்ட இடங்கள் லோனாவ்ளாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

படம் : Arjun Singh Kulkarni

லோஹகட் கோட்டை

லோஹகட் கோட்டை என்பதன் பொருள் இரும்புக் கோட்டை என்பதாகும். 1050 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோட்டை சத்ரபதி சிவாஜியால் சிறப்பாக பயன்படுத்தப்பட்டும்; விதர்பா, மராத்தா போன்ற பல ராஜவம்சங்களுக்கு அரன்மணையாகவும் திகழ்ந்திருக்கிறது. இந்தக் கோட்டையின் பிரம்மாண்டமான நான்கு வாயிற்கதவுகளும் இன்றும் நல்ல நிலையில் உறுதியாக காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன.

படம் : vivek Joshi

புஷி அணை

லோனாவ்ளாவின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமைந்திருக்கும் புஷி அணை, பிரசித்தி பெற்ற மழைக் கால சுற்றுலாத் தலமாக திகழ்ந்து வருகிறது. லோனாவ்ளா மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்கள் அனைத்தும் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட பகுதிகள் என்றே சொல்லலாம். அதிலும் புஷி அணையின் பேரழகினை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

மேலும்...

ராஜ்மச்சி பாயிண்ட்

இந்த ராஜ்மச்சி பாயிண்ட் லோனாவ்ளாவில் இருக்கின்ற காரணத்தினாலேயே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் லோனாவ்ளாவைத் தேடி வருகின்றனர்.

படம் : Ravinder Singh Gill

மலையேற்றம் / டிரெக்கிங்

உங்களுக்கு டிரெக்கிங் மிகவும் பிடிக்கும் எனில் நீங்கள் நேராக செல்ல வேண்டிய இடம் ராஜ்மச்சி. இது மஹாராஷ்டிர மாநிலத்திலேயே மலையேற்றத்துக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகும். எனினும் இந்த ராஜ்மச்சி மலையேற்றப்பாதை, கண்டலா மலையேற்றப்பாதை, துங்கர்லி ஏரி போன்றவை புதிதாக டிரெக்கிங் செல்பவர்களுக்கு கடினமானதாக இருக்கும். இவைத் தவிர ராஜ்மச்சியிலிருந்து கொண்டனா குகைகளுக்கு செல்லும் பாதை அல்லது உல்லாஸ் ஆற்றுக்கரைப் பாதை போன்றவற்றையும் பயணிகள் மலையேற்றத்துக்கு தேர்ந்தெடுக்கலாம்.

படம் : ptwo

பிரபு மூக்கு சிகரம்

ஆங்கிலேயர் காலத்தை சேர்ந்த வெலிங்டன் பிரபுவின் மூக்கைப்போன்று இருப்பதாக இப்படி ஒரு விசித்திர பெயரினை இந்தச் சிகரம் பெற்றுள்ளது. நாகத்தின் தலையைப்போன்று இருப்பதால் இதற்கு நாக்பாணி என்ற மற்றொரு உள்ளூர் பெயரும் உண்டு (நாகம்=பாம்பு; பாணி=தலை). இதன் உச்சியை கடுமையான மலை ஏற்றத்துக்குப் பிறகே அடையமுடியும் என்றாலும், உச்சியை அடைந்த பிறகு காணக்கிடைக்கும் காட்சிகள் பிரமிக்க வைக்கும் இயல்பு கொண்டவை.

படம் : Alewis2388

டைகர் பாயிண்ட் அருவி

லோனாவ்ளாவில் உள்ள டைகர் பாயிண்ட் என்ற பகுதியில் காணப்படும் இந்த அருவி, மழைக்காலத்தில் கண்கொள்ளா அழகுடன் காட்சியளிக்கும்.

படம் : Sobarwiki

மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வழி

ராஜ்மச்சி முனையிலிருந்து மும்பை-புனே எக்ஸ்பிரஸ் வழி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் தோற்றம்.

படம் : Nagesh Kamath

பைரவநாத் கோயில்

லோனாவ்ளாவுக்கு அருகில் ராஜமச்சியில், தக் எனுமிடத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியை பின்னணியில் கொண்டு பைரவநாத் கோயில் அமைந்துள்ளது. வழுக்கக்கூடிய ஒரு பாதை வழியாக மட்டுமே இந்தக் கோயிலை அடைய முடியும். கருவறைக்கு அருகிலேயே மற்ற இந்து கடவுள்களுக்கான சிறு கோயில்களையும் பார்க்க முடிகிறது.

படம் : Samadolfo

கோரிகட்

லோனாவ்ளாவிலிருந்து 24 கி.மீ தொலைவிலுள்ள கோரிகட் பள்ளத்தாக்கும், அருவியும்.

படம் : Amogh Sarpotdar

ஏக்வீரா மாதா மந்திர்

லோனாவ்ளாவுக்கு அருகில் அமைந்துள்ள ஏக்வீரா மாதா மந்திர் என்ற கோயிலுக்கு செல்லும் படிக்கட்டுகள்.

படம் : Vijay Sonar

கண்டாலா

லோனாவ்ளாவிலிருந்து 5 கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ள அட்டகாசமான மலைவாசஸ்தலமான கண்டாலா.

மேலும்...

படம் : Alosh Bennett

பசுமையான மேற்குத் தொடர்ச்சி மலைகள்!

மேற்குத் தொடர்ச்சி மலைகத்தொடரில் அமைந்துள்ள கோரிகட் பள்ளத்தாக்கின் மழைக்கால பசுமை.

படம் : solarisgirl

லோனாவ்ளா செல்லும் வழி

லோனாவ்ளா செல்லும் வழியே இவ்வளவு அழகாக இருந்தால் லோனாவ்ளா எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

படம் : GeniusDevil

லோனாவ்ளா ரயில் நிலையம்

மழைமேகங்களின் பின்னணியில் லோனாவ்ளா ரயில் நிலையத்தின் தோற்றம்.

படம் : VISHAL TOMAR

பனிமூட்டம்

லோனாவ்ளாவின் மலையேற்றப் பாதை ஒன்று பனிமூடிய அழகுடன்!

படம் : ptwo

ஜெனித் அருவி

லோனாவ்ளாவிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ள கோபோலி என்ற இடத்தில் அமைந்திருக்கும் ஜெனித் அருவி.

படம் : Aditya Patawari

கோரிகட் கோட்டை

லோனாவ்ளாவிலிருந்து 24 கி.மீ தொலைவிலுள்ள கோரிகட் கோட்டை.

படம் : Amogh Sarpotdar

கண்டாலா ஆறு

லோனாவ்ளாவிலிருந்து 5 கி.மீ தொலைவிலேயே அமைந்துள்ள கண்டாலாவில் அடர்ந்த காட்டுக்கு மத்தியில் பாம்பு போல் வளைந்தோடும் நதி.

படம் : Alosh Bennett

துங்கர்லி அணை

லோனாவ்ளாவில் உள்ள துங்கர்லி அணை ஒரு சூரிய உதயத்தின்போது.

படம் : Sudanshu Goyal

ஹோட்டல் ஷீரிஷ்

லோனாவ்ளா மலைவாசஸ்தலத்தில் அமைந்துள்ள இந்த சிறிய ஹோட்டலான ஷீரிஷில் பரிமாறப்படும் உணவு வீட்டுச் சாப்பாட்டைப் போலவே ருசியாக இருக்கும்.

படம் : ptwo

கோரிகட் ஏரி

கோரிகட் கோட்டையின் உச்சியில் அமைந்துள்ள ஏரி.

படம் : solarisgirl

வெள்ளிக்கிழமை சந்தை

லோனாவ்ளா மலைவாசஸ்தலத்தின் இந்த வெள்ளிக்கிழமை சந்தை மிகவும் பிரசித்தம்.

படம் : Kim Carpenter

மழை ரசிகர்

லோனாவ்ளாவின் பேரழகை மழையின் பின்னணியில் குடை பிடித்து ரசிக்கும் சுற்றுலாப் பயணி.

படம் : solarisgirl

எங்கு தங்குவது?

லோனாவ்ளாவில் உங்கள் வசதிக்கு ஏற்ப மலிவானது முதல் சொகுசு ஹோட்டல்கள் வரை எண்ணற்ற ஹோட்டல்கள் இருக்கின்றன.

லோனாவ்ளா ஹோட்டல்கள் 

படம் : solarisgirl

லோனாவ்ளாவுக்கு எப்படி மற்றும் எப்போது செல்லலாம்?

English summary

Monsoon Heaven Lonavla

Lonavla is a perfect monsoon destination for tourists aronund the world. This beautiful hill station is located in maharashtra and is 84 km away from mumbai.
Please Wait while comments are loading...