Search
  • Follow NativePlanet
Share
» » மூணாறில் கட்டாயம் பார்க்கவேண்டிய டாப் 10 இடங்கள்

மூணாறில் கட்டாயம் பார்க்கவேண்டிய டாப் 10 இடங்கள்

மூணாறுக்கு போனா இங்கெல்லாம் போக மறக்காதீங்க!

கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணாறு மலைப்பிரதேசம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் பண்பாடுகளுடன் காட்சியளிக்கிறது. சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பெரிதும் விரும்பப்படும் மலைவாழிடமாக மட்டுமல்லாமல் மூணாறு சர்வதேச அளவிலும் புகழ் பெற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.

ஓய்வையும், இயற்கையின் அரவணைப்பையும் நாடி லட்சக்கணக்கான பயணிகள் இந்தியா மட்டும் தூரதேசங்களிலிருந்து மூணாறு சுற்றுலாப்பிரதேசத்திற்கு வருகை தருகின்றனர்.

இந்தியாவில் - அதுவும் தமிழ்நாட்டுக்கு அருகில்தான் இருக்கிறதா என்று பார்வையாளர்களை மலைக்க வைக்கும் இயற்கை எழிற்காட்சிகளைக் கொண்டுள்ள இந்த 'மூணாறு மலைபிரதேசம்' கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரமிக்க வைக்கும் அடுக்கடுக்கான பசுமையான மலைப்பிரதேச அமைப்புகளுடன் வீற்றிருக்கும் இந்த சுற்றுலாப்பிரதேசம் இந்தியாவின் முக்கிய புவியியல் அடையாளமான மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உள்ளது.

சரி மூணாறு போக திட்டமிட்டுட்டீங்களா? அங்க என்னெல்லாம் இருக்கு? எங்கெல்லாம் போகணும்னு தெரிஞ்சிக்கணுமா ?

அங்க போயி, அருகிலுள்ளவங்ககிட்ட கேட்டு கேட்டு போவீங்களா? போகறதுக்குமுன்னாடியே கொஞ்சம் அந்த இடத்த பத்தி தெரிஞ்சிக்கிட்டுபோங்க..

உங்க கூட பயணிக்கறவங்ககிட்டயும் கெத்த மெயின்டெயின் பண்ணிக்கலாம்..உங்களுக்கும் நாலு இடம் தெரிஞ்சமாதிரியும் இருக்கும்.. என்ன போலாமா?

மாட்டுபட்டி அணை

மாட்டுபட்டி அணை


இது தவிர, மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ள மாட்டுப்பட்டி எனும் இடத்தில் ஒரு அணை, ஏரி மற்றும் ஒரு பால்பண்ணை போன்றவை அமைந்துள்ளன.

PC: Liji jinaraj

மாட்டுபட்டி பால்பண்ணை

மாட்டுபட்டி பால்பண்ணை

இந்த பால்பண்ணை இந்திய - சுவிஸ் கூட்டு முயற்சியில் இயங்கும் ஒரு கால்நடை அபிவிருத்தி திட்டமாகும்.

குண்டலா ஏரி

குண்டலா ஏரி

இங்குள்ள குண்டலா ஏரி கண்ணுக்கினிய காட்சிகளை நமக்கு நினைவில் ஏற்றுகிறது.

PC: Raj

டாப் ஸ்டேஷன்

டாப் ஸ்டேஷன்

தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி' இந்த தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் மலையேற்றம் செய்யலாம்.

Pc: Varkeyparakkal

எதிரொலி முனையம்

எதிரொலி முனையம்

எக்கோ பாயிண்ட் எனும் இந்த இடம் மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த இடம் இளைஞர்களிடையே வெகு பிரசித்தமாக அறியப்படுகிறது. பெரும்பாலான மலை சுற்றுலா பிரதேசங்களில் காணப்படும் இந்த எக்கோ பாயிண்ட் அல்லது ‘எதிரொலி ஸ்தலம்' இங்கு ஒரு ரம்மியமான ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் நாம் எழுப்பும் குரல் நீர்ப்பரப்பில் பட்டு எதிரொலிக்கிறது.

PC: Mohan Noone

ராஜமலை

ராஜமலை

மூணார் மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ராஜமலா என்றழைக்கப்படும் இந்த இடம் உள்ளது. இது வரையாடு எனும் தமிழ்நாட்டு அரசு விலங்கு வசிக்கும் பிரத்யேக வனப்பகுதியாக அறியப்படுகிறது.

PC: Raj

தேயிலை அருங்காட்சியகம்

தேயிலை அருங்காட்சியகம்

கண்ணுக்கு குளிர்ச்சி தரும் பச்சை நிறத்தில் பரந்து விரிந்துள்ள தேயிலைத்தோட்டங்கள் வழியே இங்கு பயணிகள் உல்லாசமாக நடைப்பயணம் மேற்கொள்ளலாம். பலவிதமான அரிய பறவைகள் வசிப்பதால் இப்பகுதி பறவை ஆர்வலர்கள் விரும்பக்கூடிய ஒரு இடமாகவும் விளங்குகிறது.

PC: wiki

சந்தனக் காடு

சந்தனக் காடு

மூணார் மலைப்பிரதேசத்தின் முக்கிய சிறப்புகளில் ‘இரவிக்குளம் தேசிய பூங்கா' ஒன்றாகும். இங்கு தமிழ்நாட்டின் அரசு விலங்கான ‘வரையாடு' எனும் அரிய வகை ஆடு அதிகளவில் காணப்படுகிறது. சந்தனக்காடு வழியாக நடந்து போகும் அற்புதமான தருணங்கள் பல ஆண்டுகள் கழித்தும் உங்களால் மறக்கமுடியாததாக அமையும்.

PC: wiki

ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி

ஆட்டுக்கல் நீர்வீழ்ச்சி

ஆட்டுக்கல் என்ற இடம் இங்குள்ள நீர்வீழ்ச்சிக்காக முக்கியத்துவம் பெற்றுள்ளது. மூணாரிலிருந்து 9 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்தலம் நடைபயணிகளுக்கும் பிக்னிக் பிரியர்களுக்கும் பிடித்தமான ஒன்றாகவும் திகழ்கிறது.

PC: Arun

மலர் பூங்கா

மலர் பூங்கா

PC: Amrita Bhattacharyya

Read more about: munnar travel places
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X