Search
  • Follow NativePlanet
Share
» »குளு குளு ஜனவரியை உங்கள் நெருங்கியவருடன் அனுபவிக்க எங்கெல்லாம் பயணம் செய்யனும் தெரியுமா?

குளு குளு ஜனவரியை உங்கள் நெருங்கியவருடன் அனுபவிக்க எங்கெல்லாம் பயணம் செய்யனும் தெரியுமா?

குளு குளு ஜனவரியை உங்கள் நெருங்கியவருடன் அனுபவிக்க இங்கெல்லாம் பயணம் செய்யுங்கள்

By Udhaya

குளிர் நிறைந்த ஜனவரி மாதம் சுற்றுலா செல்ல ஏற்ற மாதமாகும். இந்தியாவில் பல இடங்களில் அதிகப்படியான குளிர் நிறைந்து காணப்பட்டாலும், சில இடங்களில் அதிக குளிரும் இல்லாமல், அதிக வெயிலும் அல்லாமல், இதமான சூழ்நிலையே நிலவும்.

இந்த வகையான சூழலில் சுற்றுலா செல்வது என்பது மனதை உற்சாகப்படுத்தவும், உடலை சுறுசுறுப்பாக்கவும் நமக்கு கிடைத்த அறுமருந்தாகும். இந்த ஜனவரியில் சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக கருதப்படும் பகுதிகளை இங்கு காணலாம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி


கொடைக்கானல் மற்றும் ஊட்டியிலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது பொள்ளாச்சி.

பசுமையான ஊரான இது எப்பொழுதும் மனதிற்கிதமான தென்றலை வீசி நம்மை சாந்தப்படுத்தும்.

கோயம்புத்தூரிலிருந்து சில மணி தூரத்தில் அமைந்துள்ள பொள்ளாச்சி, மற்ற இடங்களை ஒப்பிடும்போது சற்று குறைந்த நெரிசல் மிக்க பகுதிதான்.

கோவை மாவட்டத்தில் கட்டாயம் காணவேண்டிய பகுதிகளுள் ஒன்று இந்த பொள்ளாச்சி.

PC: Divyacskn1289

அரக்கு பள்ளத்தாக்கு

அரக்கு பள்ளத்தாக்கு

கிழக்கு மலைத் தொடர்களின் கொடையால் இயற்கை அழகைப் பெற்ற இந்த பள்ளத்தாக்கு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது.

மனம் மகிழும் காட்சிகள் பல கொண்ட இந்த பள்ளத்தாக்கின் மலைக்குன்றுகள், காப்பி தோட்டங்கள் ஆகியவை இயற்கை ஆர்வலர்களுக்கு நல்ல வேட்டையாக அமையும்.

PC: Eswararaokenguva

வயநாடு

வயநாடு

எங்கு திரும்பி நோக்கினாலும் கண்களுக்கு அலுக்காத காட்சிகளை சுற்றுலாப்பயணிகள் வயநாட்டில் தரிசிக்கலாம். மேற்குத்தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கிடையே அமைந்துள்ள வயநாடு பகுதிக்கு உலகம் முழுவதுமிருந்து சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். அதிலும் மழைக்காலத்தின்போது விஜயம் செய்யும் வெளியூர் பயணிகளை வயநாட்டின் இயற்கையழகு பிரமிப்பில் ஆழ்த்திவிடுகிறது.

PC: Stalinsunnykvj

கார்வார்

கார்வார்


கார்வார் மாவட்டம் தண்டெலி சுற்றுலாத்தலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்குள்ள வனப்பகுதியில் நடைபயணம், மேடு-பள்ளம் நிறைந்த மலைச்சாரலில் சைக்கிள் பயணம் என சாகச பிரியர்களின் சொர்க்கப்புரியாக விளங்குகிறது. மேலும் வனத்தையும், வனவிலங்குகளையும் நேசிப்பவர்களுக்கும், தண்டெலி சுற்றுலாத்தலம் நல்ல சாய்ஸ் ஆக இருக்கும்.

PC: Sankara Subramanian

ஏற்காடு

ஏற்காடு


ஏற்காடு, சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையில் சேர்வராயன் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. அடர்ந்த மரங்களும், தோட்டங்களும் சூழ படகுப் பயணம் செய்யவேண்டுமா? உங்களுக்காகவே காத்திருக்கிறது ஏற்காடு ஏரி.

நிச்சயமாக இது ஜனவரி மாதத்தில் செல்வதற்கு ஏற்ற சிறந்த இடமாகும். ஏற்காடு தமிழகத்தின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளமாக விளங்குவதற்கு காரணம் இங்கு 30 டிகிரியைத் தாண்டி வெய்யில் அடிப்பதே இல்லையாம்.

PC: Surya Prakash.S.A.

செம்பரா சிகரம் :

செம்பரா சிகரம் :

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது இந்த செம்பரா சிகரம். மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக நீலகிரி மலைகளை ஒட்டி அமைந்திருக்கும் இந்த செம்பரா சிகரம் தான் மலைகள் சூழ்ந்த நகரமான வயநாட்டின் மிக உயரமான சிகரமாகும்.

PC: Sarath Kuchi

ரான் ஆப் கட்ச்

ரான் ஆப் கட்ச்

உப்புக் கனிமங்கள் கொண்ட 10,000 சதுர மைல் பரப்பளவுடைய சதுப்பு நிலமாகும். இந்நிலப்பகுதி இந்தியாவின், குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்திலும், பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாநிலத்திலும் பரந்து உள்ளது.

குஜராத்தில் உள்ள 'ரான் ஆப் கட்ச்' உலகின் பெரிய 'உப்பு பாலைவனம்' என்னும் சிறப்பை பெற்றுள்ளது. அகமதாபாத்திலிருந்து 320 கி.மீ., தொலைவில் ரான் ஆப் கட்ச் உள்ளது. உப்பு கலந்த களிமண் நிலம் கொண்டது. பன்னி எனப்படும் புல்வெளி பகுதிகள் ரான் ஆப் கட்ச் கொண்டிருப்பதால் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் உற்பத்தி தொழில் சிறப்பாக உள்ளது.

ஜனவரி மாதத்தில் நிச்சயமாக செல்லவேண்டிய சுற்றுலாத்தளங்களில் இதுவும் ஒன்றாகும்.

PC: AJAY KULKARNI

நாசிக்

நாசிக்

மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள நாசிக், இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களுள் ஒன்றாகும்.

இங்கு கட்டாயம் பார்க்கவேண்டியவை என தூத்சாகர் நீர்வீழ்ச்சி, முக்திதம் கோயில், ராமகுண்டம், பாகூர், சுலா திராட்சைத் தோட்டம், திரிகம்பகேஸ்வரர் ஆலயம் என எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.

PC: BOMBMAN

காங்க்டாக்

காங்க்டாக்

வாழ்வில் ஒரு முறையாவது சத்தமே இல்லாத அமைதியான ஒரு பிரதேசத்துக்கு சுற்றுலா செல்ல நீங்கள் சூளுரைத்திருந்தால், உங்கள் சரியானத் தேர்வு காங்க்டாக் தான்.

சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பகுதி, அதிக அளவில் சுற்றுலா பயணிகளின் ஓய்விடமாக இல்லாவிட்டாலும், தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற சுற்றுலாத் தளமாகும்.

PC: Sourav Das

ஷில்லாங்

ஷில்லாங்

மேகாலயாவின் தலைநகரமான ஷில்லாங் பல ரசிக்கக்கூடிய வனப்புகளைக் கொண்டது. மணமேடையில் அமர்ந்திருக்கும் மணமகளின் முகத்திரை சற்றே விலக வெட்கி நாணுவதைப் போன்று, மலைகளின் மீது படர்ந்திருக்கும் மேகங்கள் காட்சித் தருகின்றன. மனதைக் கொள்ளையடிக்கும் மலைச் சிகரங்களில் ஊதா நிறம் படர்ந்துள்ளதையும் விரிந்து கிடக்கும் பல நிறப் பச்சை புல்வெளிகளையும் ரசித்துக் கொண்டே இருக்கத் தோன்றும்

PC: jt_1983

உதய்ப்பூர்

உதய்ப்பூர்

இந்தியாவின் சிறந்த சுற்றுலா நகரங்களுள் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள உதய்ப்பூர்.

வரலாற்றுச் சின்னங்கள் பல கொண்டுள்ள இது, சுற்றுலாப்பயணிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் பல இடங்களைத் தன்னுள் கொண்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் இந்த இடம், குளிர்ச்சியானதாகவும், கண்ணைக் கவரும் விதத்திலும் இருக்கும். மற்ற நேரங்களில் இது வெப்பமண்டல பிரதேசமாக இருக்கும் என்பதால் ஜனவரி மாதத்தில் பயணிப்பது சிறந்தது.

PC: chrispass79

Read more about: travel பயணம்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X