Search
  • Follow NativePlanet
Share
» »தமிழக மலைக் கோவில்கள் பற்றிய இந்த விவரங்கள்லாம் உங்களுக்குத் தெரியுமா?

தமிழக மலைக் கோவில்கள் பற்றிய இந்த விவரங்கள்லாம் உங்களுக்குத் தெரியுமா?

கோவில்களில் இருக்கும் அறிவியலை மீறிய சக்தி ஒன்று மலைக்கோவில்களில் உள்ளதாக நம்புபவர்களுக்காகவே இப்பதிவு....

By Udhaya

பழந்தமிழர்கள் நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகைகளாக பிரித்திருந்தனர் என்பது நமக்கு தெரிந்திருக்கும். மலை வாழ் மக்கள் இயற்கையை தெய்வமாக வணங்கினர் . அவர்களின் வாழ்வாதாரம் என்பது காடும், காடு சார்ந்த இடங்களும்தான். அவர்களின் இஷ்ட தெய்வமாக தமிழ்கடவுள் எனப் போற்றப்படும் முருகப்பெருமான் விளங்குகினார் என்பது பாடப்புத்தகத்திலிருந்தே நமக்கு தெரிகிறது. தமிழகத்தில் அதிகளவில் மலைக் கோவில்கள் காணப்படுகின்றன. மலைகளின் மீது அமையப் பெற்ற கோவில்களின் வரலாறு என்ன என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.

தமிழகத்தின் மலைக் கோவில்களைப் பற்றி பலர் அறிந்திராத தகவல்களை இப்பதிவில் காணலாம்...

ரத்தினகிரி முருகன் கோவில்,சரவணம்பட்டி

ரத்தினகிரி முருகன் கோவில்,சரவணம்பட்டி

கோவை மாவட்டத்தின் மத்தியப் பகுதியில் உள்ளது சரவணம்பட்டி. கோயம்புத்தூருக்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண் 209 அருகே அமைந்துள்ள சரவணம்பட்டியில் ரத்தினகிரி

மலைக்கோவில் உள்ளது. பல வருடங்களுக்கு முன்பாக, நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் பிள்ளை வரம் வேண்டி கோவிலுக்கு வந்த பெண்மணி, கோவில் பிரதானத்தைச் சுற்றி

வேண்டிக்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன், பெண்மணியின் கதைகேட்டு மனமுருகி கையில் வைத்திருந்த திருநீற்றைக் கொடுத்து வேண்டிக்கொள்ள

சொன்னானாம். சற்று நேரத்தில் அந்த சிறுவன் மறைந்து விட்டதாகவும், அவன் சொன்னபடியே பெண்மணி கருவுற்றதாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.


PC: rajushanthi

 ரத்தினகிரி முருகன் கோவில்

ரத்தினகிரி முருகன் கோவில்

இங்குள்ள முருகன் சிலை நான்கு கரங்களைக் கொண்டதாகவும், அவருக்கு அருகில் தனது வாகனமான மயிலை வைத்திருக்கும்படியும் உள்ளது. முருகன் சிலை அருகில் விநாயகர்

சுயம்பாக உதித்ததாகக் கூறப்படுகிறது. மாட்டுப் பொங்கல் தினத்தன்று இங்கு நடைபெறும் பூப்பறித்தல் நிகழ்வு மிக சிறப்பாக கொண்டாடப்படும். முறைப் பையனும், முறைப்

பொண்ணும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தங்கள் திருமண வாழ்வு சிறக்க வேண்டி முருகனை வழிபடுவர். தற்போதைய காலங்களில், காதலர்களும் இங்கு இந்த முறையில்

வேண்டிக்கொள்கின்றனர்.

PC: rajushanthi

சுவாமிமலை

சுவாமிமலை

முருகனின் அறுபடை வீடுகளுள் ஒன்றான இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த சுவாமி

மலை கோவில். இது சென்னையிலிருந்து 250 கிமீ தொலைவிலும், திருச்சியிலிருந்து 2 மணி நேர பயணத்தொலைவிலும் அமைந்துள்ளது. தஞ்சாவூர், கும்பகோணம், காரைக்கால்,

மன்னார்குடி, மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

PC: Ravichandar84

சுவாமிமலை

சுவாமிமலை

இந்து மத நம்பிக்கைகளின்படி, முருகன் சிவபெருமானின் இரண்டாவது மகன். ஒருநாள் முருகன் பிரணவ மந்திரத்தின் பொருள் என்னவென்று பிரம்மாவிடம் கேட்க, அதையறியாமல்

விழித்த பிரம்மனை சிறையிலடைக்க சொன்னாராம் முருகன். பின்னர் பிரம்மனை மீட்கச் சென்றாராம் சிவபெருமான். அவரை விட மறுத்த முருகனிடம், சரி பிரணவ மந்திரத்தின்

பொருள் என்னவென வினவ இந்த பிரணவ மந்திரத்தின் பொருளை தன் தந்தைக்கு போதித்தாராம் முருகன். இதனால் இத்தலம் சுவாமிநாதமலை என்றழைக்கப்படுகிறது.


PC: பா. ஜம்புலிங்கம்

திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி முருகன் கோவில்

திருத்தணி மலை மீது அமைந்துள்ள இந்த கோவில் திருத்தணி முருகன் கோவில் என்றழைக்கப்படுகிறது. இந்த மலைக்கோவிலில் 365 படிகள் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 365

நாள்களை குறிப்பதாக கூறப்படுகிறது. சென்னையிலிருந்து 84 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோவில் சங்ககாலத்தில் எழுதப்பட்ட திருமுருகாற்றுப்படையில்

குறிப்படப்பட்டுள்ளது. பாருங்கள் பண்டையத் தமிழரின் அறிவியலை. இதிலிருந்து அந்த காலத்திலேயே ஆண்டுகள் கணக்கிடப்பட்டுள்ளன என அறிய முடியும் என்கின்றனர் இப்பகுதி
மக்கள்.

PC: Srithern

திருத்தணி முருகன் கோயில்

திருத்தணி முருகன் கோயில்

கந்தனுக்கு தன் மகளை மணமுடித்துக் கொடுத்த இந்திரன், மகளுடன் பொன்னும், பொருளும், தன் யானையையும் கொடுத்ததாகவும், ஆனால் யானை தன்னைவிட்டு சென்றதும் தன்

அதிர்ஷ்டம் இழந்ததாக கருதி, திருப்பி வாங்க முடிவு செய்ததாகவும் பழங்கால புராணம் கூறுகிறது. ஆனால் அதற்கு ஈடாக எதையெதையோ கொடுத்தும் கந்தன் மனமிறங்கவில்லை.

இதனால்தான் கோவிலில் இருக்கும் யானை சிலை கிழக்கு முகம் பார்க்கும் படி இருக்கிறது. மேலும் அவருக்கு இந்திரன் சந்தன கட்டைகளை கொடுத்ததாகவும் கூறுவதுண்டு. சந்தனம்

சிறந்த மருந்து என்பதை விளக்குவதற்காகத் தான் முருகன் கோவில்களில் சந்தனம் பிரதான பிரசாதமாக தரப்படுகிறது.

PC: Srithern

தண்டாயுதபாணி கோவில், பழநி

தண்டாயுதபாணி கோவில், பழநி

பழநி தண்டாயுதபாணி கோவில் திண்டுக்கல் மாவட்டம் பழநியில் அமைந்துள்ளது. இது திண்டுக்கல், மற்றும் மதுரையிலிருந்து அருகில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரிலிருந்து 100 கிமீ

தொலைவிலும், மாவட்டத் தலைநகர் திண்டுக்கலில் இருந்து ஏறக்குறைய 57 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பாலக்காடு, பொள்ளாச்சி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

PC: SivRami

தண்டாயுதபாணி கோவில், பழநி

தண்டாயுதபாணி கோவில், பழநி

ஞானப் பழத்தைக் கொடுத்து நாரதர் செய்த கலகத்தில், அண்ணன் விநாயகர் அம்மை - அப்பனைச் சுற்றி பழத்தைப் பெற்றார். தம்பியோ மயிலேறி உலகை வலம்வந்து வெற்றி

பெற்றதாகக் கருதி ஞானப்பழத்தை பெற நினைத்தார். ஆனால் நடந்ததையறிந்த முருகன், கோபித்துக்கொண்டு பழநி மலை மீது ஆண்டியாக நின்றதாக தல புராணம் கூறுகிறது. இந்த

கோவிலுக்கு படிகள் மூலமாக நடந்து வர வேண்டுதல் செய்கின்றனர் பக்தர்கள். வயதான மற்றும் இயலாதவர்களுக்காக ரோப் கார் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

PC: Ranjithsiji

தண்டாயுதபாணி கோவில் தமிழ் கல்வெட்டு

தண்டாயுதபாணி கோவில் தமிழ் கல்வெட்டு

இக்கோவிலின் முதுமையை இங்குள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு அறியலாம் என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள். இங்கு பழங்காலத் தமிழில் கல்வெட்டுக்கள்

காணப்படுகின்றன. இங்குள்ள முருக சிலையை 18 சித்தர்களில் ஒருவரான போகர், 9 நவபாசானங்களைக் கொண்டு வடித்ததாகக் கூறுவர்.

PC: Arulraja

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

முருகன் தெய்வயானையை மணமுடித்த இடமாக திருப்பரங்குன்றம் நம்பப்படுகிறது. மதுரையிலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த திருத்தலம். தமிழர்களின் கட்டுமானக் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவில் வரலாற்று சிறப்பு மிக்கது. பாண்டியர், நாயக்கர்கள் என பலர் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். இக்கோவிலின் நுழைவு வாயிலில் 150 அடி ராஜகோபுரம் ஒன்று அமைந்துள்ளது. முருகனைத் தவிர்த்து சிவன், விஷ்ணு, விநாயகர் ஆகியோரது பிரகாரங்களும் இங்கு அமைந்துள்ளன.

PC:Kramasudar

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில்

பங்குனி மாதத்தில் இக்கோவிலில் பிரம்மோட்சவம் நடைபெறும். மதுரை மீனாட்சி திருமணத்தின்போது விஷ்ணுவும், முருகனும் அலங்காரம் செய்யப்பட்டு மதுரைக்கு கொண்டுசெல்லப்படுவர். இந்த கோவிலில் கார்த்திகை தீபம் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும்.


PC: Byronic501

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்

திருப்பரங்குன்றத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது இந்த பழமுதிர்ச்சோலை. மதுரையிலிருந்து 25 கிமீ சென்றால் பழமுதிர்ச்சோலையை அடையலாம். காடுகளால் சூழப்பட்ட மலையில் வீற்றிருக்கிறார் முருகன்.

PC: Ssriram mt

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்

பழமுதிர்ச்சோலை முருகன் கோவில்

வள்ளி வாழ்ந்ததாக நம்பப்படும் இந்த பழமுதிர்ச்சோலையில் அமைந்துள்ள முருகன் கோவிலில் வள்ளி, தெய்வானை, முருகன் ஆகியோரது பிரகாரங்கள் அமைந்துள்ளன. முருகனின் அறுபடை வீடுகளில் இறுதி வீடாக இது கருதப்படுகிறது. பழமுதிர்சோலை பற்றி சங்ககால இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


PC: Raji.srinivas

குற்றாலீஸ்வரன் ஆலயம்

குற்றாலீஸ்வரன் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகே அமைந்துள்ளது குற்றாலீஸ்வரன் ஆலயம். இங்குள்ள சித்திர சபையில் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சுமார் 100 ஆண்டுகள் பழமையானவையாக அறியப்பட்டுள்ளன. குற்றாலீஸ்வரன் பற்றி அந்த காலத்தில் வாழ்ந்த திருகூடராசப்ப கவிராயர் 1565 மீ உயர மலையிலிருந்து திருக்குற்றால குறவஞ்சி எனும் பாடல் தொகுப்பை இயற்றியுள்ளார்.

PC: PREVRAVANTH

பச்சமலை முருகன் கோவில்

பச்சமலை முருகன் கோவில்

பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன்
கோவில்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் முருகன், குழந்தை வடிவாக ஞான தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார்.

photo courtesy: Magentic Manifestations

Read more about: tamil nadu travel temples
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X