Search
  • Follow NativePlanet
Share
» »முதுமலை தேசியப் பூங்கா

முதுமலை தேசியப் பூங்கா

By

தென்னிந்தியாவின் முதல் வனக்காப்பகமாக அறியப்படும் முதுமலை தேசியப் பூங்கா அல்லது முதுமலை வனவிலங்கு காப்பகம், 1940-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

இந்தப் பூங்கா நீலகிரி மாவட்டத்தின் வடமேற்கில், தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளா மாநிலங்கள் இணையும் இடத்தில், நீலகிரியின் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது.

இங்கு யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், மலபார் இராட்சஸ அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

அதுமட்டுமல்லாமல் 200-க்கும் மேற்பட்ட பறவையினங்களை இங்கே பயணிகள் ரசிக்கலாம் என்பதோடு, அரிய வகை தாவரங்களும் ஏராளம் இங்கு காணப்படுகின்றன.

விலங்குகளை பார்வையிடுவதற்கான இடங்கள்

விலங்குகளை பார்வையிடுவதற்கான இடங்கள்

பைக்காரா ஏரியின் அருகே இருக்கும் பிரதான சாலையில் இருக்கும் பாலம் பல்வேறு வகையான பறவைகளையும், விலங்குகளையும் பார்க்க சிறந்த இடம் ஆகும். மொய்யாறு நதியில் தங்கள் தாகத்தை தீர்த்துக்கொள்ள வரும் பல விலங்குகளை காணலாம். தமிழ்நாடு சுற்றுலாதுறை & வளர்ச்சி வாரியம் மற்றும் வனத்துறை ஆகியவை அளிக்கும் படகுச் சவாரி மற்றும் காட்டு சவாரிகள் வெளிநாட்டு தாவரங்களையும், விலங்குகளையும் பார்வையிட வாய்ப்பு அளிக்கின்றன. ஊட்டியில் இருந்து முதுமலை சரணாலயத்திற்கு காடுகள் நிறைந்த மலைகள் மற்றும் அருவிகள் ஊடாக செல்லும் போது முப்பத்து ஆறு கொண்டை ஊசி வளைவுகள் இருக்கின்றன. விலங்குகளையும் பறவைகளையும் அவற்றின் இயற்கை வசிப்பிடத்தில் காண்பதற்கு ஏற்ற இடங்களாக இவை அமைந்துள்ளன.

படம் : Ravindraboopathi

பைக்காரா ஏரி

பைக்காரா ஏரி

முதுமலை தேசிய பூங்காவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைக்காரா ஏரி, இயற்கையின் அளவில்லா அழகுக்கு ஒரு சிறந்த உதாரணம். நீலகிரி மாவட்டத்தின் பெரிய ஏரியான பைக்காராவை தோடர் இன மக்கள் புனிதமாக கருதுகின்றனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏரியில் ஒரு படகு இல்லத்தைப் பராமரிக்கிறது. உள்ளே ஒரு உணவகம் கொண்ட இந்த படகு இல்லம், பார்வையாளர்கள் ஏரியைச் சுற்றிப் பயணம் செய்ய உதவுகிறது.

படம் : Gauri Wur Sem

மொய்யாறு நதி

மொய்யாறு நதி

மசினக்குடி-ஊட்டி சாலையில் சலசலத்து ஓடும் மொய்யாறு நதி பவானியின் கிளை நதி ஆகும். முதுமலை சரணாலயத்தையும், பந்திப்பூரையும் பிரிக்கும் இயற்கை பிளவாக இந்த நதி அமையப்பெற்றுள்ளது. இந்த நதியில் நீர் அருந்த அதிகமான மிருகங்கள் வருவதால் இது புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

படம் : D momaya

தெப்பக்காடு யானை முகாம்

தெப்பக்காடு யானை முகாம்

தெப்பக்காடு யானை முகாமில் காலையிலும், மாலையிலும் சுற்றுலாப் பயணிகள் யானை சவாரியில் ஈடுபடலாம். அதேவேளை யானைகள் உணவு அருந்தும் மாலை நேரங்களில் அவற்றை பார்வையிட மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பார்வை நேரம் : காலை 5:30 - மாலை 6:00, நுழைவு கட்டணம் : ரூ.20

படம் : PP Yoonus

மயில்

மயில்

முதுமலை தேசியப் பூங்காவில் தோகை விரித்தாடும் மயில்.

படம்

இளம் புலி

இளம் புலி

கூர்மையான பார்வையோடு காட்டில் உலாவும் இளம் புலி.

படம் : N. A. Naseer

லங்கூர் குரங்குகள்

லங்கூர் குரங்குகள்

கூட்டமாக மரத்தில் அமர்ந்திருக்கும் லங்கூர் குரங்குகள்.

படம் : Marcus334

மலபார் இராட்சஸ அணில்

மலபார் இராட்சஸ அணில்

பக்கத்து மரத்துக்கு தாவ எத்தனிக்கும் மலபார் இராட்சஸ அணில்.

படம் : Rakesh Kumar Dogra

தாயும் சேயும்!

தாயும் சேயும்!

முதுமலை தேசியப் பூங்காவில் புற்களை மேய்ந்துகொண்டு, துள்ளித்திரியும் தாய் மானும், அதன் குட்டி மானும்!

படம் : Vinoth Chandar

யானைக் குளியல்

யானைக் குளியல்

தெப்பக்காடு யானை முகாமில் யானை ஒன்றை குளிப்பாட்டும் பாகன்.

படம் : Ravindraboopathi

சவாரி

சவாரி

முதுமலை தேசியப் பூங்காவினுள் ஜீப் சவாரி செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : benuski

ஊட்டி செல்லும் சாலை

ஊட்டி செல்லும் சாலை

முதுமலையிலிருந்து ஊட்டி செல்லும் சாலை.

படம் : irvin calicut

சிம்மாசனம்

சிம்மாசனம்

மரக்கிளைகளையே சிம்மாசனமாக எண்ணி மிடுக்காக அமர்ந்திருக்கும் லங்கூர் குரங்கு.

படம் : Marcus334

பூக்களும், மான்களும்!

பூக்களும், மான்களும்!

பூத்துக்குலுங்கும் மலர்கள் எது?, புற்களை மேயும் புள்ளி மான்கள் எது? என்று வித்தியாசம் காண்பது அரிது!

படம் : Ashwin Kumar

நுழைவாயில்

நுழைவாயில்

முதுமலை தேசியப் பூங்காவின் நுழைவாயில்.

படம் : आशीष भटनागर

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

முதுமலை ஹோட்டல்கள்

படம் : Taz

முதுமலையை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

முதுமலையை எப்போது மற்றும் எப்படி அடையலாம்?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Manoj K

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X