Search
  • Follow NativePlanet
Share
» »மூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா!!!

மூணார் - காதல் தேசத்தில் ஒரு உலா!!!

By

கேரளாவின் முதன்மையான ஹனிமூன் ஸ்தலமாகவும், இந்தியாவின் மிகவும் பிரபலமான ஹனிமூன் ஸ்தலங்களில் ஒன்றாகவும் மூணார் மலைப்பிரதேசம் திகழ்ந்து வருகிறது.

இதன் ஆர்பரிக்கும் அருவிகள், பசுமையான மலைகள், பச்சை தேயிலை தோட்டங்கள் என்று அனைத்துமே காதலர்களுக்காக படைக்கப்பட்டது போலவே அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.

மேலும் காதல் தேசமாக மட்டுமின்றி ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் காட்சியளிக்கும் மூணார் ஸ்தலமானது குடும்பச்சுற்றுலா மேற்கொள்ள விரும்புபவர்கள், குதூகலம் விரும்பும் குழந்தைகள், புது அனுபவத்தை விரும்பும் இளைஞர்கள், சாககசம் தேடும் மலையேற்றப்பயணிகள், தனிமை விரும்பிகள் போன்ற பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பயணிகளையும் தன்வசம் நோக்கி இழுத்து வருகிறது மூணார்!

படித்துப் பாருங்கள் : இந்தியாவின் 75 மிகச்சிறந்த கோடைகால வாசஸ்தலங்கள்!!!

பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

மூணார் என்னும் பெயருக்கு மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடம் என்பது பொருளாகும். முத்தரப்புழை, நல்லதண்ணி, குண்டலா ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் 'மூன்றாறு' என்றிருந்து மூணாறாகியுள்ளது. அதேபோல ஜான் முன்றே டேவிட் என்ற ஆங்கிலேயரின் பெயரிலுள்ள முன்றே என்ற வார்த்தையே மருவி பின்னாளில் மூணாராக மாறியது என்ற கருத்தும் நிலவுகிறது.

படம் : Bimal K C

அமைவிடமும், கலாச்சாரமும்!

அமைவிடமும், கலாச்சாரமும்!

தமிழ்நாடு-கேரள எல்லையில், கடல் மட்டத்திலிருந்து 1,600 மீட்டர் உயரத்தில், இடுக்கி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது மூணார். கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் மூணார் மலைவாசஸ்தலம் பல விதத்திலும் தமிழ்நாட்டுக் கலாச்சாரங்களுடன் காட்சியளிக்கிறது.

படம் : himanisdas

லைப் ஆஃப் பை

லைப் ஆஃப் பை

2012-ல் ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்ததோடு வசூலில் உலக அளவில் அசுர சாதனை படைத்த லைப் ஆஃப் பை திரைப்படத்தின் சில காட்சிகள் மூணாரில் படம்பிடிக்கப்பட்டுள்ளன. அதாவது படத்தோட ஆரம்பத்துல வர மிருகக்காட்சி சாலையெல்லாம் பாண்டிச்சேரி. அதன் பிறகு மூணாரில் சுப்பிரமணியன் கோயில், மவுண்ட் கார்மல் சர்ச் மற்றும் இஸ்லாமிய மசூதி மூன்றும் ஒரே மலையில் அமைந்திருக்கும் அதிசயத்தை லைப் ஆஃப் பை படத்தில் காட்டியிருப்பார்கள்.

படம் : Issacsam

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

மூணாரின் முக்கிய சுற்றுலாத் தலங்களாக இரவிக்குளம் நேஷனல் பார்க், எக்கோ பாயிண்ட், பள்ளிவாசல் நீர்விழ்ச்சி, ராஜமலா, ஆனயிறங்கல் நீர்த்தேக்கம், பொத்தன்மேடு, ஆட்டுக்கல் ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன.

படம் : Ramkumar

இரவிக்குளம் நேஷனல் பார்க்

இரவிக்குளம் நேஷனல் பார்க்

இரவிக்குளம் நேஷனல் பார்க் எனப்படும் இந்த தேசியப்பூங்காவானது மூணார் மலைவாசஸ்தலத்தை ஒட்டி, மேற்குத்தொடர்ச்சி மலையில் 97 ச.கி.மீ பரப்பளவுக்கு பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த தேசியப்பூங்காவோடு சின்னார் வனப்பகுதி மற்றும் இந்திரா காந்தி காட்டுயிர் சரணாலயம் போன்றவை இணைந்து ஒட்டுமொத்தமாக மேற்குத்தொடர்ச்சி மலையின் தென்பகுதியிலுள்ள மிகப்பெரிய காட்டுயிர் பாதுகாப்பு சரகமாக விளங்குகின்றன. இந்த தேசியப்பூங்காவில் 26 வகையான பாலூட்டிகளும், 132 வகையான பறவை இனங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இனப்பெருக்க காலமான ஜனவரி-பிப்ரவரி மாதங்களிலும், மழைக்காலத்திலும் இந்த பூங்காவுக்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.

படம் : Sreeraj PS aka Ezhuttukari

ஆனமுடி

ஆனமுடி

தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ‘ஆனமுடி' இரவிக்குளம் தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ளது. வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்று 2700 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தில் டிரெக்கிங் (மலையேற்றம்) செய்யலாம்.

படம் : Arunguy2002

பள்ளிவாசல் அருவி

பள்ளிவாசல் அருவி

மூணாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ள பள்ளிவாசல் அருவி மிகச்சிறியதாக இருந்தாலும் மிகப்பிரசித்தமான சுற்றுலா அம்சமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு வரும்போது அருகே அமைந்துள்ள சீதா தேவி கோயிலுக்கும் பயணிகள் சென்று வரலாம்.

படம் : Sasi097

எக்கோ பாயிண்ட்

எக்கோ பாயிண்ட்

மூணாரிலிருந்து 13 கி.மீ தூரத்தில் எக்கோ பாயிண்ட் என்ற இந்த புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. பெரும்பாலான மலை சுற்றுலா பிரதேசங்களில் காணப்படும் இந்த எக்கோ பாயிண்ட் அல்லது ‘எதிரொலி ஸ்தலம்' இங்கு ஒரு ரம்மியமான ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தில் நாம் எழுப்பும் குரல் நீர்ப்பரப்பில் பட்டு எதிரொலிக்கிறது. இந்த எக்கோ பாயிண்ட் ஸ்தலத்தில் பனிப்புகை படர்ந்த சுற்றுப்புறமும் வெல்வெட்டை விரித்தாற் போன்ற ஏரியின் கரைச்சரிவுகளும் கண்கொள்ளா காட்சிகளாக தரிசனம் அளிக்கின்றன. மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்கள் சுற்றிலுமுள்ள தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வாசனைப்பயிர் தோட்டங்களை சுற்றிப்பார்த்து ரசிக்கலாம்.

படம் : Ruben Joseph

எக்கோ பாயிண்ட்டில் பயணிகள்

எக்கோ பாயிண்ட்டில் பயணிகள்

எக்கோ பாயிண்ட்டில் நின்றுகொண்டு குரல் எழுப்புவதுமாக, அது எதிரொலிப்பதை கேட்டு ஆரவாரிப்பதுமாக சுற்றுலாப் பயணிகள்.

படம் : Aruna

டிரெக்கிங்

டிரெக்கிங்

பல பாதுகாப்பான டிரெக்கிங் பாதைகள் மூணார் பிரதேசத்தில் அமைந்துள்ளன. இவற்றில் ராஜமலா, இரவிக்குளம் தேசிய பூங்கா மற்றும் நயம்காட் போன்ற இடங்களுக்கு செல்லும் மலையேற்ற ஒற்றையடிப்பாதைகள் மிகவும் பிரபலம். சுற்றுலா செயல்பாடுகளை ஊக்குவிப்பதற்காகவே வனத்துறையின் சார்பாக மலையேற்ற பயணங்களும் இரவிகுளம் தேசிய பூங்காவின் உள்ளே ஏற்பாடு செய்து தரப்படுகின்றன. மேலும் சிகரம் ஏறுவதில் விருப்பம் உள்ளவர்கள் வனத்துறையின் முன் அனுமதி பெற்று தென்னிந்தியாவின் மிக உயர்ந்த சிகரமான ஆனமுடி சிகரத்தில் ஏறலாம்.

படம் : matthieu-aubry

ஆனயிறங்கல் நீர்த்தேக்கம்

ஆனயிறங்கல் நீர்த்தேக்கம்

ஆனயிறங்கல் எனும் சுற்றுலா ஸ்தலம் மூணாரிலிருந்து 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஆனயிறங்கல் அணை மற்றும் ஏரிப்பகுதியில் யானைகள் கூட்டமாக வந்து நீர் அருந்தும் காட்சியை பார்ப்பதற்காகவே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள டாட்டா நிறுவனத்துக்கு சொந்தமான தேயிலைத்தோட்டத்தில் பயணிகள் நடந்து ரசிக்க அனுமதிக்கப்படுவது ஒரு விசேஷமான அம்சமாகும். பொத்தன்மேடு சுற்றுலா ஸ்தலமும் இங்கு அருகிலேயே உள்ளதால் இந்த இரண்டு இடங்களையும் ஒரே பயணத்தில் முடித்துவிடுவது சிறந்தது. மேலும் தங்கி ஓய்வெடுத்து ரசிப்பதற்கேற்றவாறு இங்கு பல ரிசார்ட் விடுதிகள் அமையப்பெற்றுள்ளன.

படம் : Rameshng

ராஜமலா

ராஜமலா

மூணார் மலைவாசஸ்தலத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் ராஜமலா என்றழைக்கப்படும் இந்த இடம் உள்ளது. இது வரையாடு எனும் தமிழ்நாட்டு அரசு விலங்கு வசிக்கும் பிரத்யேக வனப்பகுதியாக அறியப்படுகிறது. தற்போது உலகில் வசிக்கும் இந்த வகை ஆடுகளின் பாதி எண்ணிக்கை இரவிக்குளம்-ராஜமலா வனப்பகுதியில் வசிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அழிந்து வரும் இந்த வகை ஆடுகளை பார்ப்பதற்காகவே ராஜமலாவுக்கு விஜயம் செய்யலாம் என்றாலும் வேறு பல சுவாரசியமான அம்சங்களும் இப்பகுதியில் இருக்கவே செய்கின்றன. அதாவது நீண்ட தாவரப்படுகைகள், புல்வெளிகள் மற்றும் சிற்றோடைகள் ஆகியவற்றை ராஜமலா ஸ்தலத்தில் சுற்றுலாப்பயணிகள் கண்டு களிக்கலாம்.

படம் : Kesavamurthy N

பொத்தன்மேடு வியூ பாயிண்ட்

பொத்தன்மேடு வியூ பாயிண்ட்

மூணாரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள சிறிய கிராமமான பொத்தன்மேடில் அமைந்துள்ள பொத்தன்மேடு வியூ பாயிண்ட் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இங்கிருந்து மூணார் பகுதியின் அழகான மலைச்சரிவுகள், சுற்றியுள்ள பசுமைப்பள்ளத்தாக்குகள் மற்றும் முத்தரப்புழா ஆற்றின் அழகுக்காட்சி போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம். நறுமணப்பயிர் தோட்டங்களின் வழியாக டிரெக்கிங் (மலையேற்றம்) செய்து பயணிகள் பொத்தன்மேடு வியூ பாயிண்ட்டை அடையலாம்.

படம் : Ruben Joseph

தேயிலைத் தோட்டங்கள்

தேயிலைத் தோட்டங்கள்

வெல்வெட் மெத்தைகள் போன்று பரந்து விரிந்துள்ள தேயிலைத்தோட்டங்கள் வழியே இங்கு பயணிகள் ஏகாந்தமாக நடைப்பயணம் மேற்கொள்ளலாம். பலவிதமான அரிய பறவைகள் வசிப்பதால் இப்பகுதி பறவை ஆர்வலர்கள் விரும்பக்கூடிய ஒரு ஸ்தலமாகவும் விளங்குகிறது.

படம் : Ben3john

சின்னக்கனால்

சின்னக்கனால்

மூணார் அருகே அமைந்துள்ள சின்னக்கனால் எனும் அழகிய கிராமம் பவர் ஹவுஸ் அருவி போன்ற புகழ்பெற்ற சுற்றுலா அம்சங்களை கொண்டுள்ளதால் பயணிகள் மத்தியில் பிரபலமாக அறியப்படுகிறது.

படம் : Augustus Binu

டாப் ஸ்டேஷன்

டாப் ஸ்டேஷன்

மூணாரிலிருந்து 41 கி.மீ தொலைவில் அமைந்துள்ள டாப் ஸ்டேஷன் என்ற இடம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இங்கு இந்தியாவின் மிக உயரமான தேயிலைத் தோட்டங்கள் சில அமையப்பெற்றுள்ளன.

படம் : Bimal K C

டாப் ஸ்டேஷனில் ஒரு பயணி

டாப் ஸ்டேஷனில் ஒரு பயணி

டாப் ஸ்டேஷன் ஸ்தலத்தின் உச்சியில் நின்றுகொண்டு அதன் ஆச்சரியத்தை சுட்டிக்காட்டும் ஒரு சுற்றுலாப் பயணி.

படம் : Matthieu Aubry

மட்டுப்பெட்டி நீர்த்தக்கம்

மட்டுப்பெட்டி நீர்த்தக்கம்

மூணாரிலிருந்து 12 கி.மீ தொலைவில் டாப் ஸ்டேஷன் செல்லும் வழியில் மட்டுப்பெட்டி நீர்த்தக்கம் அமைந்துள்ளது.

படம் : Bimal K C

காட்டுயானைகள்

காட்டுயானைகள்

மூணாரின் இயற்கை எழில் கொஞ்சும் புல்வெளிப்பிரதேசத்தில் காணப்படும் காட்டுயானைகள் கூட்டம்.

படம் : Jishar ka

லக்கம் அருவி

லக்கம் அருவி

மூணாரிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் வழியில் 38 கி.மீ தொலைவில் லக்கம் அருவி அமைந்திருக்கிறது.

படம் : Subramanian Kabilan

மட்டுப்பெட்டி அணைக்கு ஒரு பயணம்!

மட்டுப்பெட்டி அணைக்கு ஒரு பயணம்!

மூணாரிலிருந்து 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மட்டுப்பெட்டி அணைக்கு செல்லும் வழி.

படம் : Pankaj Dhande

குண்டலா ஏரி

குண்டலா ஏரி

மூணாரிலிருந்து 25 கி.மீ தொலைவில் குண்டலா ஏரி அமைந்துள்ளது.

படம் : Aruna

குதிரை

குதிரை

குண்டலா ஏரியருகே புற்களை மேய்ந்துகொண்டிருக்கும் குதிரை.

படம் : Prateek Rungta

படகுப்பயணம்

படகுப்பயணம்

குண்டலா ஏரியில் படகுப்பயணம்.

படம் : Aruna

மவுண்ட் கார்மல் சர்ச்

மவுண்ட் கார்மல் சர்ச்

மூணாரின் புகழ்பெற்ற கிறிஸ்தவ தேவாலயமான மவுண்ட் கார்மல் சர்ச்.

படம் : കാക്കര

பள்ளிக்கூடம்

பள்ளிக்கூடம்

மூணாரின் பிரசித்திபெற்ற பள்ளிக்கூடமான கார்மிலோகிரி சி.எம்.ஐ பப்ளிக் ஸ்கூல்.

படம் : Aruna

ஹாரிஸன் மலையாளம்

ஹாரிஸன் மலையாளம்

மூணாரில் உள்ள பிரபலமான தேயிலைத் தோட்டங்களில் ஒன்றான ஹாரிஸன் மலையாளம் தோட்டம்.

படம் : Rameshng

முருகன் கோயில்

முருகன் கோயில்

மூணாரிலுள்ள பிரபலமான முருகன் கோயில்.

படம் : കാക്കര

பனிபடர்ந்த தோட்டம்

பனிபடர்ந்த தோட்டம்

காலைப் பனிமூட்டத்தால் மறைந்துகிடக்கும் தேயிலைத் தோட்டம்.

படம் : Ruben Joseph

மூணார் மசூதி

மூணார் மசூதி

மூணாரிலுள்ள பிரபல இஸ்லாமிய ஜமாத் (மசூதி).

படம் : കാക്കര

தேயிலைத் தொழிலாளிகள் சர்ச்

தேயிலைத் தொழிலாளிகள் சர்ச்

மூணாரில் உள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கான பிரத்தியேக தேவாலயம்.

படம் : Earth-Bound Misfit

இயற்கையோடு கொஞ்ச தூரம்...!

இயற்கையோடு கொஞ்ச தூரம்...!

மலையழகையும், இயற்கை எழிலையும் தேயிலைத் தோட்டங்களின் பின்னணியில் ரசிக்க விரும்பும் பயணிகள் இதைப் போன்ற பாதைகளில் நடைபயணமாகவோ, வாகனத்திலோ சுற்றிப் பார்க்கலாம்.

படம் : Lukas Vacovsky

சர்ச்சில் நடைப்பாலம்

சர்ச்சில் நடைப்பாலம்

மூணாரில் 1944-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட சர்ச்சில் நடைப்பாலம் இன்று ஒரு அடையாளமாகவே மாறி இருக்கிறது.

படம் : Aruna

சி.எஸ்.ஐ சர்ச்

சி.எஸ்.ஐ சர்ச்

மூணாரின் மற்றொரு பிரபலமான தேவாலயமான சி.எஸ்.ஐ சர்ச்.

படம் : Sreejithk2000

கால்நடை வளர்ச்சி குழுமம்

கால்நடை வளர்ச்சி குழுமம்

மூணாரில் அமைந்துள்ள கால்நடை வளர்ச்சி குழுமம்.

படம் : Aruna

தேயிலைத் தோட்ட தெய்வம்

தேயிலைத் தோட்ட தெய்வம்

மூணார் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்பவர்கள் தொழில் சிறக்கவும், வாழ்வு மேம்படவும் இந்தத் தெய்வத்திடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

படம் : amarinds

தேயிலைத் தொழிலாளி

தேயிலைத் தொழிலாளி

மூணார் தேயிலைத் தோட்டம் ஒன்றில் தேயிலை பறிக்கும் தொழிலாளி.

படம் : Paul Munhoven

உல்லாச நடைப்பயணம்

உல்லாச நடைப்பயணம்

மூணார் தேயிலைத்தோட்டம் ஒன்றில் குழந்தைகளோடு உல்லாச நடைப்பயணம் போகும் பெண்.

படம் : Babug

சன்டயல்

சன்டயல்

சன்டயல் எனும் இந்தக் கருவி மூணார் தேயிலை அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்தக் கருவியில் விழும் நிழலைக் கொண்டு நேரத்தை கணிக்கிறார்கள்.

படம் : TwoWings

மூணார் காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங்

மூணார் காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங்

மூணார் மலைப்பிரதேசத்தின் பிரசித்திபெற்ற பொறியியல் கல்லூரியான மூணார் காலேஜ் ஆஃப் இஞ்சினியரிங்.

படம் : Hrishikesh.kb

முத்தரப்புழா

முத்தரப்புழா

பெரியாற்றின் கிளை நதியாக மூணாரில் பாய்ந்துகொண்டிருக்கும் முத்தரப்புழா.

படம் : Aruna

போட்டோ பாயிண்ட்

போட்டோ பாயிண்ட்

மூணார் வரும் சுற்றுலாப் பயணிகள் பொதுவாக இந்த இடத்தில் தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம் எடுப்பது வழக்கம்.

படம் : Shanmugamp7

மூணார் கால்வாய்

மூணார் கால்வாய்

மூணார் மலைப்பிரதேசத்தின் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளுக்கேற்ப வளைந்து நெளிந்து செல்லும் மூணார் கால்வாய்.

படம் : Nikhilb239

பனிபடர்ந்த யூக்கலிப்டஸ் காடுகள்

பனிபடர்ந்த யூக்கலிப்டஸ் காடுகள்

மூணாரின் இயற்கை எழிலை தாங்கி நிற்பதில் யூக்கலிப்டஸ் காடுகளுக்கும் பெரிய பங்கு இருக்கிறது.

படம் : Ruben Joseph

மூணார் செல்லும் வழி

மூணார் செல்லும் வழி

மூணார் மலைப்பிரதேசத்துக்கு நம்மை இட்டுச் செல்லும் பாதை.

படம் : Shanmugamp7

அன்னை மேரியின் மடியில் ஏசு கிறிஸ்து

அன்னை மேரியின் மடியில் ஏசு கிறிஸ்து

அன்னை மேரியின் மடியில் ஏசு கிறிஸ்து இருப்பது போல் காணப்படும் இந்த சிலையை மூணார் செல்லும் வழியில் நீங்கள் பார்க்கலாம்.

படம் : Jeroalex

படிக்கட்டுகள்

படிக்கட்டுகள்

டாப் ஸ்டேஷன் ஸ்தலத்துக்கு இட்டுச்செல்லும் படிக்கட்டுகள்.

படம் : RanjithSiji

வியூ பாயிண்ட்

வியூ பாயிண்ட்

மூணாரிலிருந்து, மட்டுப்பெட்டி செல்லும் வழியில் இருக்கும் ஒரு வியூ பாயிண்ட்டிலிருந்து பதிவு செய்யப்பட்ட காட்சி.

படம் : Rameshng

காட்டுக்கோயில்

காட்டுக்கோயில்

இரவிக்குளம் நேஷனல் பார்க் பகுதியில் காணப்படும் ஒரு காட்டுக்கோயில்.

படம் : Kannan shanmugam,shanmugam studio, Kollam

இரவிக்குளம் மியூசியம்

இரவிக்குளம் மியூசியம்

இரவிக்குளம் நேஷனல் பார்க்கினுள் உள்ள இரவிக்குளம் மியூசியம்.

படம் : Kannan shanmugam,shanmugam studio, Kollam

ஆயுர் கவுண்டி ரிசார்ட்

ஆயுர் கவுண்டி ரிசார்ட்

மூணாரின் முன்னணி ரிசார்ட்டாக அறியப்படும் ஆயுர் கவுண்டி ரிசார்ட்.

படம் : Rohini

சுவிட்சர்லாந்தின் மாதிரி வடிவம்!

சுவிட்சர்லாந்தின் மாதிரி வடிவம்!

சுவிட்சர்லாந்து நாட்டில் வீடுகளும், சாலைகளும் எப்படி இருக்குமோ அதைப் போலவே மூணார் மலைப்பிரதேசத்தின் சில பகுதிகள் காணப்படுகின்றன.

படம் : Sreerajcochin

எப்படி அடைவது?

எப்படி அடைவது?

மூணார் மலைப்பிரதேசத்தை சாலை, விமானம் மற்றும் ரயில் வழியாக எப்படி அடைவது என்பதை தெரிந்துகொள்ள கீழுள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.

மூணாரை எப்படி அடைவது?
/munnar/how-to-reach/

படம் : Vinayaraj

எப்போது சுற்றுலா செல்லலாம்?

எப்போது சுற்றுலா செல்லலாம்?

மிதமான பருவநிலையை கொண்டுள்ள மூணார் மலைப்பிரதேசம் ஆண்டு முழுவதுமே பயணிகளை வரவேற்கிறது. பொதுவாக கோடைக்காலம் வெளிச்சுற்றுலாவுக்கும், குளிர்காலம் சாகச பொழுதுபோக்குகளுக்கும் ஏற்றவை. அதிக மழைப்பொழிவை கொண்ட மழைக்காலம் தவிர்க்கபடவேண்டிய ஒன்றாகும்.

படம் : Sasi097

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X