Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கும் கோயில் எது தெரியுமா?

உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை இருக்கும் கோயில் எது தெரியுமா?

By Naveen

உயிரின் ஆதாரமாக ஆதி கடவுளாக வழிபடப்படும் சிவபெருமானுக்கு இந்தியாவெங்கும் ஏராளமான கோயில்கள் இருக்கின்றன. அனேக பழமையான கோயில்களில் சிவபெருமான் லிங்க ரூபமாகவே வழிபடப்படுகிறார். எனினும் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் பல முறை நடந்த அந்நியர் படையெடுப்பில் அழிக்கப்படாமல் இருந்திருந்தால் இன்றிருப்பதை காட்டிலும் கட்டிடக்கலையில் மென்மையான பல கோயில்கள் இந்தியாவில் இருந்திருக்கும்.

கர்நாடக மாநிலத்தில் அரபிக்கடலோரத்தில் முருதேஸ்வரர் கோயில் சிவ பக்தர்கள் அனைவரும் தங்கள் வாழ்கையில் கட்டாயம் சென்று வழிபடவேண்டிய ஒரு கோயிலாகும். வாருங்கள், இதனை பற்றி தெரிந்துகொள்வோம்.

முருதேஸ்வரர் கோயில்!!

முருதேஸ்வரர் கோயில்!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்தர கன்னடா மாவட்டத்தில் பத்கள் தாலுக்காவில் உள்ளமுருதேஸ்வரர் என்ற ஊரில் அரபிக்கடலோரத்தில் அமைந்திருக்கிறது இந்தமுருதேஸ்வரர் சிவன் கோயில்.

ramesh Iyanswamy

முருதேஸ்வரர் கோயில்!!

முருதேஸ்வரர் கோயில்!!

இக்கோயிலில் தான் உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிவபெருமானின் சிலை அமைந்துள்ளது. இந்த 123 அடி உயரமான சிலையை வடிவமைக்க இரண்டு ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

Paul Williams

முருதேஸ்வரர் கோயில் கோபுரம்!!

முருதேஸ்வரர் கோயில் கோபுரம்!!

முருதேஸ்வரர் கோயிலில் மூலவரின் சிலை மட்டுமில்லாது கோபுரமும் மிகப்பெரியதே. ஸ்ரீ ரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் கோபுரத்தை போன்றே மிகவும் உயரமானதாகும். 20 அடுக்கு கோபுரமான இதன் மேல் சென்று முருதேஸ்வரரின் மொத்த ரூபத்தையும் காணும் வகையில் லிப்ட் ஏற்பாடுகள் இங்கே செய்யப்பட்டுள்ளன.

Paul Williams

முருதேஸ்வரர் கோயில் கோபுரம்!!

முருதேஸ்வரர் கோயில் கோபுரம்!!

இந்த கோயில் மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டதாகும். இது கந்துக்கா என்ற சிறிய மலையின் மேல் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருக்கும் ராஜகோபுரம் 237அடி உயரமானதாகும்.

Ralph Kränzlein

முருதேஸ்வரர் கோயில் கோபுரம்!!

முருதேஸ்வரர் கோயில் கோபுரம்!!

இப்போதிருக்கும் இந்த மிகப்பெரிய சிவபெருமானின் சிலைக்கு கீழே இக்கோயிலின் மூலவர் ஸ்ரீ மிர்தேஷ லிங்கம் என்ற ஆத்மலிங்கம் இருப்பதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.

இந்த சந்நிதியினுள் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

Sam valadi

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

முருதேஸ்வரர் கோயில் அமைந்ததின் பின்னணியில் இராமாயண காலத்தில் நடந்த சுவாரஸ்யமான புராண வரலாறு ஒன்று சொல்லப்படுகிறது. அதாவது இறவா நிலையை அருளும் ஆத்மலிங்கத்தை வணங்கி தேவர்களும் கடவுளர்களும் இறப்பே இல்லாத நிலையை பெற்றனர்.

இது கேள்வியுற்று தானும் அந்நிலையை அடைய பேராவல் கொண்டான் பெரும் சிவபக்தனும் இலங்கையின் மன்னனுமான ராவணன்.

Thejas Panarkandy

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

ஆத்மலிங்கத்தை அடைய சிவனை நோக்கி பெருந்தவம் மேற்கொண்டான் ராவணன். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் வேண்டிய வரம் கேட்குமாறு ராவணனிடம் சொன்னார்.

ராவணனும் சிவபெருமானிடம் ஆத்மலிங்கத்தை கேட்டுப்பெற்றான். ஆனால் இதை கீழே வைத்தல் திரும்பவும் எடுக்க முடியாது என்ற ஒரே நிபந்தனையுடன் சிவபெருமான் அவ்வரத்தை வழங்கினார்.

Vijay S

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

ஒருவேளை ராவணன் ஆத்மலிங்கத்தை வழிபட்டு இறப்பை வென்றுவிட்டான் என்றால் அகில உலகத்தையும் அழித்துவிடுவான் என்று பயந்த தேவமுனி நாரதர் விநாயகரிடம் சென்று இதுபற்றி முறையிடுகிறார்.

விநாயகரும் ராவணன் ஆத்மலிங்கத்தை வழிபடாத வண்ணம் சூழ்ச்சி ஒன்றை செய்கிறார்.

Abhinav Bhatt

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

ராவணனுக்கு தினமும் மாலை சிவபெருமானுக்கு பூசை செய்வதை வழக்கமாக கொண்டவன். ஆத்மலிங்கத்துடன் கோகர்னாவை கடக்கும் வேளையில் விஷ்ணு பகவான் சூரியனை மறையும்படி செய்துவிடுகிறார்.

அந்நேரத்தில் லிங்கத்தை கையில் வைத்துக்கொண்டு எப்படி சிவபெருமானுக்கு பூசை செய்வது என்று ராவணன் குழம்பிய நேரத்தில் அந்தணராக மாறுவேடமிட்டு செல்கிறார் விநாயகர்.

Bishu Naik

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

அந்தணரான விநாயகர் தான் ஆத்மலிங்கத்தை கையில் வைத்துக்கொள்வதாகவும் அந்நேரத்தில் ராவணன் சிவ பூஜை மேற்கொள்ளலாம் என்றும் சொல்கிறார். ஒருவேளை தான் மூன்று முறை அழைத்தும் ராவணன் செவிமடுக்கவில்லை என்றால் தான் லிங்கத்தை கீழே வைத்துவிடுவேன் என்றும் சொல்கிறார் அந்தண வேடத்தில் வந்த விநாயகர்.

சிவ பூசைக்காக ராவணன் சென்றவுடனேயே விநாயகர் லிங்கத்தை கீழே வைத்துவிடுகிறார். விஷ்ணுவும் சூரியன் மறந்தது போன்ற மாயத்தோற்றத்தை விளக்கிவிடுகிறார்.

Shuba

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

முருதேஸ்வரர் கோயில் - புராண வரலாறு:

தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்றுணர்ந்த ராவணன் தன்னுடைய பெரும்பலத்தை கொண்டு ஆத்மலிங்கத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறான். என்ன முயற்சி செய்தும் ஆத்மலிங்கத்தை எடுக்கமுடியாமல் போகிறது.

எனினும் ஆத்மலிங்கத்தின் சில பகுதிகள் மட்டும் உடைந்து சில இடங்களில் பரவி விழுகின்றன. அப்படி விழுந்த ஒரு லிங்கத்தின் கோயில் தான் முருதேஸ்வரர் கோயில் என்று சொல்லப்படுகிறது.

Sankara Subramanian

முருதேஸ்வரர் கோயிலை எப்படி அடைவது?:

முருதேஸ்வரர் கோயிலை எப்படி அடைவது?:

பெங்களூரிலிருந்து ஹோனாவருக்கு, அரசுப் பேருந்திலிருந்து தனியார் சொகுசுப் பேருந்து வரை அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதால் பயணிகள் ஹோனாவர் வந்து பின்பு அங்கிருந்து வாடகை கார்களை அமர்த்திக் கொண்டு முருதேஸ்வருக்கு வந்து சேரலாம்.முருதேஸ்வரிலிருந்து ஹோனாவர் நகரம் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

varun suresh

முருதேஸ்வரர் கோயிலை எப்படி அடைவது?:

முருதேஸ்வரர் கோயிலை எப்படி அடைவது?:

முருதேஸ்வரிலேயே ரயில் நிலையம் இருந்தாலும் மும்பை, மங்களூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்து வரும் ஒரு சில ரயில்களே முருதேஸ்வர் ரயில் நிலையத்தில் நிற்கும். எனவே பயணிகள் முருதேஸ்வரிலிருந்து 158 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மங்களூர் ரயில் நிலையத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

Navaneeth Ashok

முருதேஸ்வரர் கோயில் - எங்கே தங்குவது?:

முருதேஸ்வரர் கோயில் - எங்கே தங்குவது?:

முருதேஸ்வரர் கோயில் ஹோட்டல்கள்

ramesh Iyanswamy

முருதேஸ்வரர் கோயில் - எங்கே தங்குவது?:

முருதேஸ்வரர் கோயில் - எங்கே தங்குவது?:

முருதேஸ்வரர் கோயில் ராஜ கோபுரம் !!

Deep Goswami

முருதேஸ்வரர் கோயில் - எங்கே தங்குவது?:

முருதேஸ்வரர் கோயில் - எங்கே தங்குவது?:

முருதேஸ்வரர் கோயில் அருகில் உள்ள அழகிய கடற்கரை !!

Deep Goswami

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X