Search
  • Follow NativePlanet
Share
» »நண்பர்களுடன் செல்ல சிறந்த இந்திய சுற்றுலாத்தலங்கள்

நண்பர்களுடன் செல்ல சிறந்த இந்திய சுற்றுலாத்தலங்கள்

By Naveen

வாழ்வது ஒருமுறைதான் அதை எவ்வளவு கொண்டாட முடியுமோ அவ்வளவு கொண்டாடிவிடவே நாம் எல்லோரும் விரும்புகிறோம். அந்த கொண்டாட்டங்களில் நம்முடைய சிறந்த நண்பர்கள் நம்முடன் இருந்தால் அதைவிட மகிழ்ச்சியான விஷயம் வேறு எதுவுமே இல்லை. கொண்டாட்டங்களும், இனிமையான பயணங்களும் பிரிக்க முடியாதவை. நம் உற்ற தோழனுடன் பயணிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு வானமே எல்லை. வாருங்கள் இந்தியாவில் உங்கள் உயிர் நண்பருடன் நிச்சயம் செல்ல வேண்டிய இடங்கள் எவை என்பதை தெரிந்து கொள்வோம்.

 மனாலி-லெஹ் சாலைப்பயணம்:

மனாலி-லெஹ் சாலைப்பயணம்:

உங்கள் 'மோட்டார் சைக்கிள் டைரி' இந்த மனாலி-லெஹ் பயணம் இல்லாமல் நிச்சயம் நிறைவு பெறாது. அற்புதமான காட்சிகளை அள்ளிவழங்கும் இந்தப் பயணத்தை வாழ்க்கையில் ஒருமுறையாவது உங்கள் நண்பருடன் மேற்கொள்ளவேண்டும்.

புகைப்படம்: Miran Rijavec

சாதர்- உரைந்த நதியில் ஒரு நடை

சாதர்- உரைந்த நதியில் ஒரு நடை

சன்ச்கர் என்னும் கிராமத்தையும் வெளி உலகத்தையும் குளிர்காலத்தில் மட்டும் இணைக்கிறது சாதர் ஆறில் உருவாகும் உரைந்த வழித்தடம். இதில் ட்ரெக்கிங் செல்வது சாகசங்களின் உச்சமாக பார்க்கப்படுகிறது. உங்கள் உயிர் நண்பன் உடனிருக்கியில் இந்த ரிஸ்க் எடுத்துதான் பாருங்களேன்.

புகைப்படம்: Partha Chowdhury

வாகா எல்லை, பஞ்சாப்:

வாகா எல்லை, பஞ்சாப்:

இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் அதிகாரபூர்வ எல்லை வழி பஞ்சாபில் உள்ள வாகாவில் அமைந்திருக்கிறது. இங்கு தினமும் மாலை நடக்கும் கொடி இறக்கு நிகழ்ச்சி பார்ப்பதற்கு அற்புதமானது. நாட்டுப்பற்றை உணரச்செய்யும் அந்த நிகழ்வை கண்டிப்பாக உங்கள் சிறந்த நண்பருடன் சென்று பாருங்கள்.

புகைப்படம்: Sally Anderson

பான்காங் ஏரி, லடாக் :

பான்காங் ஏரி, லடாக் :

லடாக், உலகத்தின் முடிவில் நிற்ப்பது போன்ற உணர்வை நமக்கு தரக்கொடிய வகையில் இயற்கை மந்திரஜாலம் செய்திருக்கும் இடம். இங்கிருக்கும் பான்காங் ஏரியில் நிலவும் நிசப்பதமும், அங்கு நாம் காணும் காட்சியும் விவரிக்க முடியாத ஒரு அனுபவத்தை நமக்கு தரும்.

புகைப்படம்: LM TP

ரிஷிகேஷ்:

ரிஷிகேஷ்:

அதிகமாக யாத்ரீகர்கள் வந்து செல்லும் இடமாகவே அறியப்படும் ரிஷிகேஷ் சாகச பிரியர்களுக்கும் தகுந்த இடமே. இங்கு சீறிப்பாயும் கங்கையாற்றில் சாகசப்படகு சவாரி செய்யலாம் அல்லது இந்தியாவில் வேறெங்கும் இல்லாத கயிற்றில் தொங்கியபடி ஆற்றைக்கடக்கும் அதிபயங்கரமான சாகசத்தை நிகழ்த்தலாம்.

புகைப்படம்:

 பாலைவனத்தில் ஒரு வசந்த உலா:

பாலைவனத்தில் ஒரு வசந்த உலா:

ராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்தில் காரில் சாகச பயணம் செய்திருக்கிறீர்களா?. வழக்கமான சாலைகளில் நம் நண்பர்களுடன் எத்தனையோ தூரம் பயணித்திருக்கலாம் ஆனால் சூடான பாலைவன மணலில் பயணிப்பது வித்தியாசமான ஒரு அனுபவமாக உங்களுக்கு அமையும்.

புகைப்படம்: Land Rover MENA

அந்தமான் & நிகோபார்:

அந்தமான் & நிகோபார்:

வங்காள விரிகுடாவில் இருக்கும் அந்தாமான் மற்றும் நிகோபார் தீவுகள் நம்மை இயற்கையின் பேரழகில் சொக்கவைக்கும். அங்குள்ள கடற்க்கரைகளில் சிறு வயதில் நாம் செய்த செட்டைகளைப்பற்றியும், குரும்புகளைப்பற்றியும் பேசியபடி இயற்கையை ரசிப்பது எத்தனை இன்பம்.

புகைப்படம்: Sankara Subramanian

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X