Search
  • Follow NativePlanet
Share
» »ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஐந்து மர்மம் நிறைந்த கோயில்கள்

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஐந்து மர்மம் நிறைந்த கோயில்கள்

இமாலய மலையின் சாரலில் அமைந்திருக்கும் ஹிமாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவில் இருக்கும் முக்கியமான மலை வாசஸ் ஸ்தலங்கள் மற்றும் யாத்ரீக இடங்களை உள்ள மாநிலமாகும். இதனாலேயே இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப்பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஐந்து மர்மம் நிறைந்த கோயில்கள்

புராதான பழமை கொண்ட ஹிந்து கோயில்கள் இந்த மாநிலத்தில் ஏராளமாக உண்டு. ஜ்வாலாமுகி, சாமுண்டி, பஜிநாத், லக்ஷ்மிநாத் போன்றவை இம்மாநிலத்தில் இருக்கும் கோயில்களில் சில. ஹிந்து புராணங்களில் இமய மலைக்கும், ஹிமாச்சல பிரதேச மாநிலம் அமைந்துள்ள பகுதியை பற்றியும் பல குறிப்புகள் உண்டு. அப்படிப்பட்ட இம்மாநிலத்தில் சில கோயில்களைப் பற்றிய மர்மம் இன்றும் விளங்காமல் உள்ளது. அப்படிப்பட்ட ஐந்து மர்மான கோயில்களை பற்றி அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பஜிநாத் கோயில்:

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஐந்து மர்மம் நிறைந்த கோயில்கள்

Photo: Rakeshkdogra

மேற்கு ஹிமாலய மலைத்தொடரில் தல்தர் என்னும் பகுதியில் உள்ள பஜிநாத் என்னும் சிறிய நகரத்தில் அமைந்திருக்கிறது 'வைத்தியநாதர் கோயில்'. 13ஆம் நூற்றாண்டில் நகரா கட்டிடக்கலை அமைப்புப்படி கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் உள்ள சிவா பெருமானின் ரூபமான வைத்தியநாதர் மூலவராக உள்ளார். வைத்தியநாதர் தான் மருத்துவத்தின் அதிபதி என கருதப்படுகிறார்.

தற்போது கோயில் அமைந்திருக்கும் இடத்தில் கோயில் கட்டப்படும் முன்பு சிவா பெருமான் ஒரு மருத்துவராக இப்பகுதியில் வாழ்ந்து வந்ததாக நம்பப்படுகிறது. அதே போல தற்போது கோயிலினுள் பூஜிக்கப்படும் லிங்கம் ஸ்வயம்புவாக தோன்றியதாம். சிவன் நேரடியாக வாழ்ந்த இடம் என்பதினாலேயே பக்த்தர்கள் இக்கோயிலுக்கு வருகின்றனர். மகா சிவராத்திரி, மஹா சங்கராந்தி ஆகிய விழாக்கள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.


ஜ்வாலாமுகி கோயில்:

கங்க்ரா பள்ளத்தாக்கில் இருந்து 30கி.மீ தெற்க்கே அமைந்திருக்கிறது ஜ்வாலாமுகி கோயில். இக்கோயிலின் மூலவராக ஜ்வாலாமுகி அம்மன் சந்நிதி உள்ளது. ஜ்வாலாமுகி என்றால் நெருப்பின் வடிவமானவள் என பொருள்படுகிறது . நாடு முழுவதும் அமைந்திருக்கும் பார்வதி தேவியின் முக்கிய கோயில்களான ஷக்தி பீடங்களுள் இக்கோயில் மிக முக்கியமானதாக உள்ளது. இங்குள்ள செம்பு குழலின் வழியாக தானாகவே நெருப்பு ஜ்வாலை வெளிப்படுகிறது. அது எப்படி என இதுவரை யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இக்கோயிலை பற்றி அறிந்து முகலாய மன்னர் அக்பர் இங்கு ஒருமுறை வந்ததாக செவி வழிக்கதை ஒன்று உலாவுகிறது.

சிந்த்புர்ணி மாதா கோயில்:

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஐந்து மர்மம் நிறைந்த கோயில்கள்

Photo: Gopal Aggarwal

கடல் மட்டத்தில் இருந்து 940 மீ தொலைவில் உனா என்னும் இடத்தில் அமைந்திருக்கிறது இந்த சிந்த்புர்ணி மாதா கோயில். இக்கோயிலும் பார்வதி தேவியின் ஷக்தி பீடங்களுள் ஒன்றாகும். இக்கோயிலின் முக்கிய அம்சம் இதன் கருவறையில் உள்ள சிறிய சிந்த்புர்ணி மாதா சிலை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. மிகவும் அபூர்வமான கல்லினால் அச்சிலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

பாபா பாலக் நாத் கோயில்:

கசௌலி என்னும் இடத்தில் கிரானர் என்ற மழையின் உச்சியில் அமைந்திருக்கிறது இந்த குகை கோயில். பாபா பாலக் நாத் என்ற ரிஷி சிவா பெருமானின் அதிதீவிர பக்த்தராக இருந்ததாகவும் ஆனாலும் அவருக்கு குழந்தை வரம் இல்லாமல் இருக்கையில் இப்போது கோயில் இருக்கும் இடத்தில் கடும் தவம் மேற்கொண்டார் அதன் பயனாக அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது என்று சொல்லப்படுகிறது. எனவே குழந்தை வரம் இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்தால் அவர்களுக்கும் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.


ஹிதிம்பா தேவி கோயில்:

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஐந்து மர்மம் நிறைந்த கோயில்கள்

Photo: Kondephy

மனாலி பகுதியில் இருக்கும் மிக முக்கியமான ஆன்மீக ஸ்தலங்களுள் இந்த ஹிதிம்பா தேவி கோயிலிலும் ஒன்றாகும். ஹிந்து புராணத்தில் வரும் அரக்கனான ஹிதிம்பணனின் சகோதரி தான் ஹிதிம்பா ஆவார். பெரும் பாறையொன்றின் மேல் எழுப்பப்பட்டுள்ள இக்கோயில் 1553ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கிறது. இதனுள் ஹிதிம்பா தேவி சிலையாக இல்லாமல் மொலுக்கலான பாறையாகவே தரிசனம் தருகிறார். இக்கோயிலை கட்டிய மன்னன் இதுபோன்று வேறுயாரும் கோயில் ஒன்றை கட்டிவிடக்கூடாது என்பதற்காக இக்கோயிலை கட்டிய அனைவரின் வலது கரத்தையும் வெட்டிவிட்டாராம். ஒவ்வொரு ஆண்டும் மே 14ஆம் தேதி ஹிதிம்பா தேவி பிறந்த நாளாக கொண்டாடப்பட்டு பெரும் திருவிழா நடக்கிறது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X