Search
  • Follow NativePlanet
Share
» »நைனித்தால் - இந்தியாவின் ஏரி மாவட்டம்

நைனித்தால் - இந்தியாவின் ஏரி மாவட்டம்

By

'இந்தியாவின் ஏரி மாவட்டம்' என்று பெருமையோடு அழைக்கப்படும் நைனித்தால் நகரமானது உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது.

நைனித்தால் நகரைச் சுற்றிக் காணப்படும் சிகரங்களை குதிரைச் சவாரி செய்து அடைவதும், இந்நகரின் கவின் கொஞ்சும் ஏரிகளில் படகுச் சவாரி செய்வதும் அற்புதமான அனுபவங்களாகும்.

வெகு அமைதியான சூழலில் இயற்கை அழகு பூத்துக்குலுங்க இமயமலைத்தொடரில் வீற்றிருக்கும் நைனித்தால், சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்குகிறது.

நைனித்தால் ஹோட்டல் டீல்கள்

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்

நைனா லேக், நைனா தேவி கோயில், ஸ்னோ வியூ, தி மால், தி ஃப்ளாட்ஸ், டிஃபன் டாப் உள்ளிட்ட இடங்கள் நைனித்தாலின் பிரதான சுற்றுலாத் தலங்களாக அறியப்படுகின்றன.

நைனித்தால் சுற்றுலாத் தலங்கள்

படம் : Udayanarya

நைனா லேக்

நைனா லேக்

நைனா லேக் எனும் இந்த ஏரி நைனித்தால் சுற்றுலாத்தலத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும். இந்த ஏரியில் சுற்றுலாப்பயணிகள் சொகுசுப்படகு சவாரி, துடுப்புப்படகு சவாரி போன்றவற்றில் ஈடுபடலாம்.

படகுப்பயணம்

படகுப்பயணம்

நைனா லேக்கில் படகுப்பயணம் செல்லும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Abhishekkaushal

சூரிய அஸ்த்தமனம்

சூரிய அஸ்த்தமனம்

சூரிய அஸ்த்தமனத்தின் போது நைனா லேக்கின் தோற்றம்.

படம் : sporadic

நைனா தேவி கோயில்

நைனா தேவி கோயில்

நைனா தேவி கோயில் இந்தியாவிலுள்ள சக்தி பீடங்களில் ஒன்றாகும். இது நைனா ஏரியின் வடமுனையில் அமைந்துள்ளது.

படம் : Ekabhishek

கோயில் மணிகள்

கோயில் மணிகள்

நைனா தேவி கோயிலின் அழகிய கோயில் மணிகள்.

படம் : Vipin8169

சிவலிங்கம்

சிவலிங்கம்

நைனா தேவி கோயிலிலுள்ள சிவலிங்கம்.

படம் : Nicke.me

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா

ஜிம் கார்பெட் தேசிய பூங்கா

உத்தரகண்ட்டின் நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான தேசிய பூங்காவான ஜிம் கார்பெட் தேசிய பூங்கா, பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த புலி வேட்டை மன்னன் ஜிம் கார்பெட்டின் பெயரால் அழைக்கப்படுகிறது. உலகத்திலேயே அதிகமான காட்டுப்புலிகளை கொண்ட இந்தியாவில், கார்பெட் தேசிய பூங்காவில் மட்டும் சுமார் 160 புலிகள் உள்ளன. அதோடு சிறுத்தைப்புலிகள், யானைகள், புள்ளி மான்கள், சம்பார் மான்கள், ஹாக் மான்கள், தேவாங்கு கரடிகள், காட்டுப் பன்றி, குரல், லாங்கூர், ரெசுஸ் குரங்குகள் போன்ற விலங்குகளும் இங்கு காணப்படுகின்றன. இவைத்தவிர 600-க்கும் மேற்பட்ட பறவைகளின் வாழ்விடமாக திகழும் கார்பெட் தேசிய பூங்காவில், 51 வகையான புதர்களையும், 30 வகையான மூங்கில்களையும் மற்றும் 110 வகையான மரங்களையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம்.

கூகையின் வேட்டை

கூகையின் வேட்டை

ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் பாம்பொன்றை வேட்டையாடி தூக்கிச் செல்லும் பெரிய ஆந்தை.

படம் : wribs

மரப் பாலம்!!!

மரப் பாலம்!!!

கார்பெட் தேசிய பூங்காவில் வேரோடு விழுந்து கிடக்கும் மரமொன்றின் மீது ஏறி ஓடையை கடக்கும் சுற்றுலாப் பயணிகள்.

படம் : Prashant Ram

ஜிப்லைனிங்

ஜிப்லைனிங்

கார்பெட் தேசிய பூங்காவில் ஜிப்லைனிங் சாகசத்தில் ஈடுபடும் பயணி ஒருவர்.

படம் : Prashant Ram

குர்பதால்

குர்பதால்

நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள குர்பதால், தூண்டில் மீன் பிடிப்பு பிரியர்களுக்கு மிகவும் உகந்த இடமாகும்.

படம் : Enjoymusic nainital

குதிரைச் சவாரி

குதிரைச் சவாரி

நைனித்தால் வரும் பயணிகள் குதிரைச் சவாரி செல்லாமல் ஊர் திரும்பினால் அந்தப் பயணம் முழுமையடையாது. நகருக்குள்ளே குதிரைச்சவாரிக்கு அனுமதியில்லை என்றாலும் பரா பத்தர் எனும் இடத்தில் பயணிகள் குதிரைச்சவாரியில் ஈடுபடலாம். குதிரைகளின் கழிவுகள் நகர் மற்றும் ஏரியில் தூய்மையை மாசுபடுத்துவதால் நீதிமன்றம் நகருக்கு குதிரைச்சவாரியை தடை செய்துள்ளது. மேலும் ராம்நகர் எனும் இடத்திலிருந்து டிஃபன் டாப் எனும் பிக்னிக் ஸ்தலத்தை பயணிகள் குதிரைச்சவாரி மூலம் சென்றடையலாம்.

படம் : rajkumar1220

நௌகுசியாடல்

நௌகுசியாடல்

நைனித்தால் மாவட்டத்தில் உள்ள அழகிய சிறிய கிராமமான நௌகுசியாடல் பல தீர விளையாட்டுக்களுடன் ஒரு நிறைவான சுற்றுலா அனுபவத்தை தரும். மேலும் மலை மீது பைக் ஓட்டுவதும் இங்கு புகழ்பெற்ற சாகச பொழுதுபோக்காகும். இவ்வாறு மலை மீது பைக் ஓட்டிச் செல்வதால், யாரும் கால் பதிக்காத பல இடங்களுக்கு சென்று வரலாம்.

படம் : Dr Satendra

பாராகிளைடிங்

பாராகிளைடிங்

நௌகுசியாடலின் பிரபலமான சாகச விளையாட்டாக பாராகிளைடிங் அறியப்படுகிறது. இங்கு அனுபவம் வாய்ந்த பைலட்டுகள் மற்றும் பயிற்சியாளர்கள் நவீன உபகரணங்களுடன் சேவைகளை வழங்குகின்றனர். மார்ச் முதல் ஜூன் மாதம் வரையிலும், அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் உள்ள பருவங்கள் இந்த பொழுதுபோக்கு விளையாட்டிற்கு ஏற்றவையாக கருதப்படுகின்றன.

படம் : Prashant Khajotia

ஆஞ்சநேயர் கோயில்

ஆஞ்சநேயர் கோயில்

நௌகுசியாடல் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில்.

படம் : Manoj Khurana

முக்தேஸ்வர்

முக்தேஸ்வர்

நைனித்தால் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்தேஸ்வர் நகரம் 350 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலுக்காக புகழ்பெற்றது. அதுமட்டுமல்லாமல் முக்தேஸ்வர் நகரம் கவின் கொஞ்சும் இயற்கை சுற்றுலாத் தலமாகவும் அறியப்படுகிறது.

படம் : Sanjoy Ghosh

பீம்தால் ஏரி

பீம்தால் ஏரி

கடல் மட்டத்திற்கு மேலே 4500 அடி உயரத்தில் உள்ள பீம்தால் ஏரி, நைனித்தாலை சுற்றியுள்ள மிகப்பெரிய இயற்கை ஏரிகளில் ஒன்றாகும். இது பாண்டவர்களில் ஒருவரான பீமனின் பெயரால் அழைக்கப்படுகின்றது.

படம் : Manoj Khurana

டிஃபன் டாப்

டிஃபன் டாப்

டிஃபன் டாப் எனப்படும் இந்த அழகிய பிக்னிக் சுற்றுலாத்தலம் டோரதி சீட் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இது ஆர்யபட்டா சிகரத்தில் கடல் மட்டத்திலிருந்து 7520 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்திலிருந்து பயணிகள் இமயமலைத்தொடர்களின் அழகு மற்றும் கரடுமுரடான பள்ளத்தாக்கு சரிவுகள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.

படம் : Suhasd

எங்கு தங்கலாம்?

எங்கு தங்கலாம்?

நைனித்தால் ஹோட்டல் டீல்கள்

படம் : Prashant Khajotia

நைனித்தாலை எப்போது மற்றும் எப்படி அடைவது?

நைனித்தாலை எப்போது மற்றும் எப்படி அடைவது?

எப்படி அடைவது?

எப்போது பயணிக்கலாம்?

படம் : Prashant Khajotia

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X