உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்
தேடு
 
தேடு
 

குழந்தை வரம் வேண்டுமா ஒருமுறை செல்லுங்கள் போதும்!

Written by: Udhaya
Updated: Friday, May 26, 2017, 10:31 [IST]
Share this on your social network:
   Facebook Twitter Google+ Pin it  Comments


திருமணம் ஆகி பலவருடங்கள் குழந்தையில்லாமல் இருக்கிறீர்களா அல்லது திருமணம் முடிந்த புது தம்பதிகளா நீங்கள்.

வீட்ட கட்டிபாரு கல்யாணத்த பண்ணி பாருனு சொல்வாங்க. திருமணத்துக்கு அப்றம் எல்லார் வீட்லயும் ஆசபடுறது குழந்தைகள பத்திதான். முக்கியமா தாத்தா, பாட்டியாகனும்ணு நம்ம அப்பா அம்மா கொள்ளும் ஆசைகள் அளவே இல்லாதது.

பல வீடுகளில் குழந்தை இல்லை என்பதால் பெரும் போரே நடந்துவிடும். இதனால் கணவன் மனைவி பிரிவு, கருத்து வேறுபாடு, மன உளைச்சல் என இருவருமே பாதிக்கப்படுகிறார்கள்.

பல சமயங்களில் இதற்கு நாகதோஷம்தான் காரணம் என்கிறார்கள் சிலர். நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ... ஒரு முறை சென்று வழிபட்டால் குழந்தை பேறு தோன்றும் அற்புத சக்தி கொண்ட கோயில் எங்குள்ளது தெரியுமா?

படங்களின் முடிவில் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது தவறாமல் காணவும்!

புலிக்கல் நாகயாக்ஷி காவு

 

கேட்ட வரம் தரும் புலிக்கல் நாகயாக்ஷியம்மன் ஆட்சி செய்யும் வனப்பகுதி நிறைந்த இடம் இந்த கோயில் ஆகும்.

 

சுயம்பு வடிவம்

 

சுயமாக தோன்றிய எதையும் நாம் சுயம்பு வடிவம் என்கிறோம். அந்த வகையில் இந்த கோயிலில் அம்மன் சுயம்பாக தோன்றியருளுகிறார்.


PC: wiki

 

 

வரலாறு

 

புலிக்கல் தரவாடுவில் ஒரு தம்பதி இருந்தனர். அவர்களுக்கு நீண்ட நாள்களாக குழந்தை இல்லாமல் வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு குழந்தை வரம் வேண்டி நாக கோயிலிக்கு சென்று பூஜை செய்து வந்தனர்.

இவர்களின் பக்தி கண்டு நாகம் இவர்களுக்கு குழந்தை அருள் தந்தது. பின்னர் அந்த குழந்தைக்கு இவர்கள் அம்மினியம்மன் எனும் பெயரிட்டனர்.

 

அம்மினியம்மனின் குழந்தை


அம்மினியம்மனுக்கு ஒரு குழந்தை பிறந்தது அதற்கு தங்கமணியம்மை என்று பெயர். அந்த குழந்தை தங்க நாகத்தை கொன்றதால் நாகராஜருக்கு கோபம் ஏற்பட்டது.

பின்னர் அவர்களின் குழந்தைகள் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் பாதிக்கப்பட்டனர்.

 

குழந்தை வரம்

 

இந்த கோயிலுக்கு நீங்கள் சென்று வந்தால் எந்த நிலைமையிலிருந்தாலும் உங்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்கின்றனர் பக்தர்கள். தன் தங்கைக்கு 6 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லை. இந்த கோயிலை பற்றி கேள்விபட்டு இங்கு வந்தோம். இப்போது அவளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்று பக்தியோடு கூறுகின்றார் இங்கு தொடர்ச்சியாக வருகைதரும் பக்தர் ஒருவர். என்ன நீங்களும் இந்த கோயிலுக்கு போக தயாராகிவிட்டீர்களா?

 

கோயில் நேரம்

 

கோயில் காலை 5.30 மணிக்கு நடை திறக்கும். காலையில் தினமும் பூசை நடைபெறும். அபிசேகத்திற்கு பிறகு காலை 11.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். பின் மாலையில் 5.30க்கு திறக்கப்படும் நடைவாசல் மேற்கொண்டு இரண்டு மணி நேரம் திறந்திருக்கும்.

 

எப்படி செல்லலாம்?

 

பாலக்காடு அருகே அமைந்துள்ள இந்த கோயிலுக்கு கோயம்புத்தூரிலிருந்து எளிதாக செல்லலாம். பாலக்காட்டிலிருந்து மலப்புரம், கோழிக்கோடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த கோயில்.

 

Read more about: travel, temple
English summary

Need baby birth visit this temple atleast once

Need baby birth visit this temple atleast once
Please Wait while comments are loading...