Search
  • Follow NativePlanet
Share
» »தென்னிந்தியாவில் நீங்கள் இதுவரை பார்த்திராத அசர வைக்கும் சுற்றுலாத் தளங்கள் எவை?

தென்னிந்தியாவில் நீங்கள் இதுவரை பார்த்திராத அசர வைக்கும் சுற்றுலாத் தளங்கள் எவை?

தென்னிந்தியாவில் நீங்கள் இதுவரை பார்த்திராத அசர வைக்கும் சுற்றுலாத் தளங்கள் எவை?

By Bala Karthik

நீங்கள் உங்களுடைய வார விடுமுறையை கொண்டாட எங்காவது பயணம் செல்ல வேண்டுமா? அப்படி என்றால், தென்னிந்தியாவில் காணப்படும் ஒரு சில இடங்களை பற்றி நீங்கள் தெரிந்துக்கொள்ள, அவையும் உங்களுடைய பயண பட்டியலில் இடம் பெறும் என்பதே உண்மை. இதய வடிவத்து ஏரியிலிருந்து தலை கீழாக நாம் குதிக்க இயற்கை குளத்தின் அழகை மனதில் பிரதிபலிக்கிறது அக்காட்சி. நீங்கள் மிகவும் ஆர்வத்துடன் பயணத்திற்க்கான பட்டியலை தயாரிப்பீர்கள் என்றால், கண்டிப்பாக இந்த இடங்கள் அதற்கு சிறந்த பதிலாக அமையும்.

நீங்கள் பெரிதாக ஒன்றும் செய்யவில்லையென்றாலும், மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு, சாகச பயணத்திற்கு தயாராக, அவை உங்கள் மனதில் திகிலூட்டும் உணர்வுகளை தரவும் தயாராகிறது.

 எடக்குமேரி – டோனிகல்:

எடக்குமேரி – டோனிகல்:


இந்த பயணமானது மலைப்பயணமாக இல்லாதபோதும், டோனிகலுக்கும், எடக்குமேரிக்கும் இடைப்பட்ட கைவிடப்பட்ட மீட்டர் இரயில் பாதையாக காணப்படுகிறது. இந்த பயணமானது 17 கிலோமீட்டர் தூரம் வரை செல்ல, இந்த பரந்து விரிந்த தூரத்தை கடக்க 8 மணி நேரங்கள் நமக்காகிறது.

இந்த இரயில்வே பாதையானது மங்களூரு மற்றும் பெங்களூருவிற்கு இடைப்பட்ட பகுதியில் அமைய, நம்முடைய ஒவ்வொரு அடி பயணத்திலும், பசுமையான காட்சிகள் சூழ மத்தியில் மேற்கு தொடர்ச்சியும் காணப்படுகிறது.

nuzree

ஜிந்தாகாடா:

ஜிந்தாகாடா:

அழகிய ஆரக்கு பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் ஜிந்தாகாடா சிகரம், ஆந்திர பிரதேசத்தில் காணப்படுகிறது. ஆந்திர பிரதேசத்தில் காணப்படும் இந்த உயரமான சிகரம், கிழக்கு தொடர்ச்சியின் ஒரு அங்கமாகவும் விளங்குகிறது.

இந்த பயணமானது, காபி தோட்டங்களுக்கும், பள்ளத்தாக்கின் பசுமை போர்வையால் போர்த்தப்பட்ட அழகிய இடத்தை சுற்றியும் செல்வதால் நம் மனதினை இதமாக்குகிறது.

Sunny8143536003

 பெருமாள் சிகரம்:

பெருமாள் சிகரம்:

கொடைக்கானலில் காணப்படும் பெருமாள் சிகரம், கத்துக்குட்டி பயணிகளுக்கு சிறந்ததோர் இடமாக விளங்குகிறது. இந்த பயணமானது சிறிதாக இருக்க, இந்த பயணம் முழுமை அடைவதற்கு 4 முதல் 5 மணி நேரம் வரை ஆகிறது. உச்சியை நாம் ஏற, அந்த காட்சியானது கண்களுக்கு விருந்து படைத்து மனதினை பெருமூச்செறிந்து உணர செய்வதோடு, நீலகிரி மலைதொடர்ச்சியின் அழகையும், கொடைக்கானல் நகரத்தின் அழகையும் நம்மால் பார்த்து ரசிக்கவும் வழிவகை செய்கிறது.

Bikash Das

 பைத்தல்மாலா:

பைத்தல்மாலா:

கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் காணப்படும் இந்த சிகரம், மேற்கு தொடர்ச்சியின் ஒரு அங்கமாக விளங்குவதோடு, கடல் மட்டத்திலிருந்து 1372 மீட்டர் உயரத்திலும் காணப்படுகிறது.

இந்த இடமானது, இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து அவளுடைய அழகிய பாசத்தை பெற துடிக்கும் ஆர்வலர்களுக்கு சொர்க்கமாக அமைய, இங்கே பல்லுயிர் இனத்தையும் நம்மால் பார்த்து பரவசமடைய முடிகிறது.

இங்கே ஆய்வகம் ஒன்று காணப்பட, கேரளா மாநிலத்து வனத்துறையினரால் அது அமைக்கப்பட்டது என்றும் தெரியவர, அந்த இடத்தின் உச்சியில் நின்று நாம் பார்க்க, அந்த பகுதியின் ஒட்டுமொத்த அழகையும் நம்மால் ரசிக்கவும் முடிகிறது.

Sarathknm

 மீசப்புலிமாலா:

மீசப்புலிமாலா:

இடுக்கி மாவட்டத்தின் கடல் மட்டத்திலிருந்து 2640 மீட்டர் உயரத்தில் இவ்விடம் காணப்பட, உலக பாரம்பரிய தளமாகவும் விளங்குவதோடு பல்லுயிரினங்களையும் பெருமளவில் கொண்டிருக்கிறது.

இந்த பயணத்தில் ஒட்டுமொத்தமாக பதினைந்து கிலோமீட்டர் ஒரு பக்கம் சூழ்ந்து காணப்பட, இந்த பயணம் முழுமை அடைவதற்கு 8 முதல் 9 மணி நேரம் வரை ஆகிறது. இந்த இடத்தில் பயணம் செய்ய, வனத்துறையிடம் அங்கீகாரம் பெறவேண்டியது அவசியமாகிறது.

Jan J George

 கொல்லி மலை:

கொல்லி மலை:


தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் காணப்படும் இந்த மலை, நூறு முதல் ஆயிரத்து முந்நூறு மீட்டர் வரை உயரத்தில் காணப்படுகிறது. இதனை பசுமைமாறா காடுகளும் சூழ்ந்துக் காணப்படுகிறது.

இந்த இடத்தின் சிறப்பம்சமாக பூஜ்ஜியம் சதவிகித மாசு இருக்க, கூட்டமும் குறைவாகவே காணப்படுகிறது. இதனால், இவ்விடம் அழகிய அனுபவத்தை தந்து நீங்காத காட்சி நினைவுகளை மனதில் தேக்குகிறது.

இந்த இடத்தில் பார்ப்பதற்கான பகுதிகள் குறைவாக இருக்கும்போதிலும், இங்கே தங்கி சாப்பிடுபவர்கள் அதிகமே. அதனால், உங்களுடைய பயணத்திற்கான முன் ஏற்பாடுகளை செய்துகொள்வது இனிமையான அனுபவத்தை உங்களுக்கு தரும்.

Raghavz260

 நாகலாபுரம்:

நாகலாபுரம்:

ஆந்திர பிரதேச மாநிலத்தில் காணப்படுமோர் மலை தான் நாகலாபுரம். இந்த மலைப்பயணத்திற்கு இரண்டு நாட்கள் ஆக, வழிகாட்டுதலின்படி நாம் இங்கே செல்வதே சிறந்ததாகும்.

இந்த மலைகளில் அடர்த்தியான காடுகள் சூழ்ந்திருக்க, நம்முடைய பயணத்தின் பங்கினை ஒருபடி மேலே உயர்த்துகிறது. அதோடு நீர்வீழ்ச்சியும் இணைந்து காணப்பட, இயற்கை நீர் சரிவுகளும் நம்மை வியப்பில் தள்ளுகிறது. அத்துடன், நாற்பது அடி இயற்கை நீர் ஆறும் காணப்படுகிறது.

Shmilyshy

 சிம்மினி:

சிம்மினி:

வனவிலங்கு சரணாலயமான சிம்மினி, கேரளாவின் திரிசூர் மாவட்டத்தில் காணப்பட, 1984ஆம் ஆண்டு இந்த சரணாலயம் உருவானது. இங்கே பறவை ஆர்வலர்கள் அதிகம் வந்து செல்ல, 160 வகையான பறவைகளுக்கு இந்த சரணாலயம் வீடாக விளங்குகிறது.

இங்கே பல வகையான பூச்சிகளும் காணப்பட, அட்லசும் அதில் அடக்கம். உலகத்திலேயே மிகப்பெரிய அந்துப்பூச்சியாக இது கருதப்பட, இதனை கடந்து மூங்கில் படகுகளை கொண்ட சவாரி பயணமும் இனிமையானதாக நமக்கு அமைகிறது.

Tony Gladvin George

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X